இது பச்சை துரோகம் இல்லையா?.. பிரதீப் விவகாரத்தில் நடிகர் சரவண விக்ரமின் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: எல்லோரும் சொன்னதற்காகத்தான் நான் சொன்னேன், மற்றபடி அவர் மிகவும் நல்லவர் என பிரதீப் ஆன்டனி குறித்து நடிகர் சரவண விக்ரம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி தொடங்கியதும் அதில் பிரதீப் ஆன்டணி போட்டியாளராக வந்ததுமே பலர் அவர்தான் இந்த சீசனின் வெற்றியாளர் என கருதிவிட்டனர். நாளாக நாளாக அவருடைய செயல்பாடுகளை கண்டு பலர் முடிவே செய்துவிட்டனர்.

பிரதீப் ஆன்டனி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார். ஆனால் அவர் மிகவும் நல்ல மனிதர் என அவருடன் பழகியவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் 34ஆவது நாள் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
அவரால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி இந்த வெளியேற்றம் நடந்தது. பிரதீப் ஆன்டணி கூறியதை தவறாக சித்தரித்து, அது போல் அவர் பூர்ணிமாவை பற்றியும் ரவீனாவையும் பற்றியும் ஆபாசமாக பேசினார் என்பது போல் சித்தரித்து அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை கோரி உரிமை போராட்டம் நடந்தது.
இதையடுத்து கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களிடம் விசாரணை நடத்தினார். சேனல் நிர்வாகிகளுடனும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுடனும் ஆலோசனை நடத்தி பிறகு பிரதீப்பிடம் எதுவுமே விசாரிக்காமல் வெளியேற்றப்பட்டார். இது நெட்டிசன்கள் மத்தியில் கடுங்கோபத்தையும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
பலர் தங்களது சமூகவலைதளம் மூலமாக பிரதீப் ஆன்டனிக்கு விஜய் டிவி செய்தது அநீதி என குறிப்பிட்டிருந்தனர். அது போல் வீட்டில் இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களான விசித்ராவும் இது தவறு என கமல்ஹாசனிடமே சொல்லிவிட்டார். இனி இது குறித்து யாரும் பேச வேண்டியதில்லை என தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் 83 நாட்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்தனர். இந்த நிலையில் இறுதி போட்டிக்கு விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்த வாரம் சரவண விக்ரம் வெளியேறிவிட்டார் என்கிறார்கள்.
அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் யார் மனசையும் நோக அடிக்கக் கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து வார்த்தைகளை பேசினேன். ஆனால் நான் வெளியே வந்த பிறகுதான் பிரதீப் ஆன்டனிக்கு என்ன நடந்தது என்பதே தெரியவந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
பெண்கள் எல்லோரும் சொல்றாங்க என்பதற்காகத்தான் பிரதீப்பை பற்றி அந்த நேரத்தில் அப்படி சொல்ல வேண்டியதா போச்சு, மற்றபடி அவர்கிட்ட எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் பிரதீப்பிடம் போன் செய்து பேசி மன்னிப்பும் கேட்டுவிட்டேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
இவரது வீடியோவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். எந்த விஷயத்தையும் தீர விசாரிக்காமல் இப்படியா பத்தோடு பதினொன்றாக இருப்பது? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications