பாக்கியலட்சுமி சீரியல் முடிவு! பாக்கியா வெளியிட்ட போஸ்ட்.. கோபி சொன்ன தகவல்.. இனி இதுதான் கதையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதுபோல இந்த சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ராவும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நான்கு வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்திருக்கிறார்கள். சாதாரண ஒரு குடும்ப தலைவி படும் அவமானம், கஷ்டங்கள் பற்றியே இந்த சீரியல் கதை பயணித்து வருகிறது.

Baakiyalakshmi Serial vijay TV

அதே நேரத்தில் பல பெண்கள் வாழ்க்கையில் போராடி தங்களுக்குரிய அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சார்பாக பாக்யா வெற்றி பெறுவது பலராலும் பாராட்டப்படுகிறது. அதுபோல இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சதீஷ் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியலில் கோபியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், இன்றைய எபிசோடை பலரும் பார்த்திருப்பீங்க என்று நினைக்கிறேன். இன்று யாரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடக்கிறது. அதுபோல இன்று 1358 வது எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியில் அதிகமான எபிசோடுகள் போனது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். அதைத் தொடர்ந்து இப்போது பாக்கியலட்சுமி சீரியலும் முன்னேறி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தான் கொடுத்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுதான். அதுபோல இன்னும் சிறிது தூரம் இந்த சீரியல் போக வேண்டியது இருக்கு. அதற்கு மக்கள் சப்போர்ட் செய்ய வேண்டும்.

இந்த சீரியலின் பெரும் பயணத்தில் இன்னும் ஒரு சில முடிவுகள் மட்டும் எட்ட வேண்டியது இருக்கிறது. அது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இருக்கும் என்று நம்புகிறேன் என்று அந்த வீடியோவில் சதீஷ் பேசி இருக்கிறார். இதனால் இந்த சீரியல் குறைந்தபட்சம் 1500 எபிசோடுகள் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Baakiyalakshmi Serial vijay TV

அதுபோல சீரியலில் கதாநாயகியாக பாக்கியா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் மறக்க முடியாத சில நினைவுகள் என்று அவர் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதனால் இந்த சீரியல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

ஏற்கனவே சீரியலின் கதைப்படி இனியா மற்றும் செல்வியின் மகன் ஆகாஷ் காதல் விஷயம் ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது‌. ஆனால் அது குடும்பத்தினருக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறது. இது பற்றிய பஞ்சாயத்து தான் அடுத்ததாக இருக்கும் என்று தெரிகிறது. கோபி மற்றும் பாக்யாவை மீண்டும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று ஈஸ்வரி எடுத்த முடிவுகளுக்கு பாக்கியா சம்மதம் தெரிவிக்காமல் ஈஸ்வரியை அவமானப்படுத்தி இருக்கிறார்.

இதனால் ஈஸ்வரி வீட்டில் இது பற்றி பிரச்சனையில் ஈடுபட்டாலும் கோபி பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்கிறார். அதுபோல இனியாவின் நடவடிக்கையில் கோபிக்கு சந்தேகம் இருக்கும் நிலையில் இனியாவின் காதல் விஷயம் கோபிக்கு தான் முதலில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+