கமல் சார் விசாரிக்கலை! பிரதீப் ஆன்டணி கப் அடிச்சிடுவாருனு அந்த கேங்கிற்கு பொறாமை!.. நடிகர் சென்றாயன்
சென்னை: பிரதீப் ஆண்டனி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவாரா என்பது குறித்து அவரது நண்பரும் நடிகரும் பிக்பாஸ் பழைய போட்டியாளருமான சென்ராயன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் பிரதீப் ஆண்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அவருக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றிய சம்பவம் பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து நடிகர் சென்ராயன் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பிரதீப் எனக்கு நல்ல நண்பர். அவர் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாத கேரக்டர். எல்லாத்தையும் ஓபனாகவே பேசிவிடுவார். எல்லாத்துக்கும் கமல் சார் குறும்படம் போடுகிறார். அதை போல் ரெட் கார்டு கொடுத்ததற்கும் குறும்படம் போட்டிருக்கலாம்.
குறும்படம் போட்டிருக்காவிட்டாலும் பிரதீப்பிடம் விசாரித்திருக்கலாம். அவரை விளக்கம் சொல்ல வைத்திருக்கலாம். பிக்பாஸை ஒரு கேம் ஷோவாக பார்க்க வேண்டும். கமல் சார் கடைசி நாளில் கோப்பையை கொடுத்துவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிடுவார். ஆனால் இவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
உண்மையாக விளையாடினால் கப் கிடைக்கும். ஆனால் உள்ளே இருப்பவர்கள் அந்த கப்பை பெற இப்படி செய்திருக்கிறார்கள். கப் யாருக்கு கிடைக்கும் என்பது யாருக்குமே கிடைக்காது. ப்ரோமோவில் வருவதற்காகவே சில போட்டியாளர்கள் எதை எதையோ செய்வார்கள். நிக்ஸன் கூட வினுஷா கருப்பா இருக்கிறார் என பேசியிருந்தார். அது எத்தனை தவறு தெரியுமா
வினுஷாவை கருப்பு என சொல்லும் நிக்ஸன் என்ன ரொம்ப சிவப்பாக இருக்கிறாரா? ஒரு பெண்ணிடம் போய் நீங்கள் கருப்பா இருக்கீங்க. வேலைக்காரி மாதிரி இருக்கு என சொல்லியிருக்காரு. இதெல்லாம் தவறு. இதே எங்கள் சீசனில் இப்படி சொல்லியிருந்தால் நானோ, தாடிபாலாஜியோ மகத்தோ யாராவது சண்டை போட்டு கண்டித்திருப்போம்.
பாத்ரூமை தவிர்த்து எல்லா இடங்களிலும் கேமரா இருக்கும் போது யாரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முடியாது. எனவே பெண்களுக்கு பாதுகாப்புக்காக பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தோம் என சொல்வது சரியல்ல! பிரதீப் மிகவும் தைரியாமான போட்டியாளர். ஒரு வேளை மற்ற போட்டியாளர்கள் எல்லாம் அவர் மீது பொறாமை பட்டார்களோ என்னவோ தெரியவில்லை.
அவர் எங்கே வெற்றி பெற்றுவிடுவாரோ என்பதால்தான் இவர்கள் எல்லாம் சேர்ந்து ரெட் கார்டு கொடுத்து அனுப்பிவிட்டார்கள். நிக்ஸன்- ஐஸு சேட்டை செய்வதெல்லாம் பிக்பாஸ் ப்ரோமோவில் வர வேண்டும் என்பதற்காகவே! பெரிய தப்பு நடக்க வாய்ப்பிருக்காது, ஆனால் சின்ன சின்ன சில்மிஷங்களை செய்கிறார்கள். இது குழந்தைகள் பார்க்கும் ஷோ என்பதால் கொஞ்சம் டீசன்ட்டாக நடந்து கொள்ளலாம்.
வைல்ட் கார்டு என்ட்ரியில் மக்கள் எதிர்பார்ப்பது போல் பிரதீப் மீண்டும் வர வேண்டும். நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் வேண்டுமானால் பாருங்க! மக்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பதால் உங்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைப்பார்கள் என்றேன். அப்போது சிரித்தார்!, நான் என்ன இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என கேட்டேன். இல்லை நான் அப்புறமா சொல்றேன் என்றார்.
செய்யறை எல்லாம் செய்துட்டு இப்போ போய் சாரி சொல்லலாமானு மாயா, பூர்ணிமா, ஜோவிகா எல்லாம் சொல்கிறார்கள். ஆனால் கமல் சார் வந்ததும் அவர்களுக்கு தீபாவளி இருக்கிறது. பிரதீப் கெட்ட வார்த்தை பேசியது தவறுதான். ஆனால் தவறு செய்யுற ஆள் அவர் இல்லை. இவ்வாறு சென்ராயன் தெரிவித்திருந்தார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications