சீரியலால் பணக்காரன் ஆனேன்! ஆனால் நடந்த அவமானம்! செருப்பால அடிச்சி நடிப்பை விட்டேன்! சிவக்குமார் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவகுமார் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசுகையில் தான் சீரியலில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். தான் சீரியலில் நடித்த போதுதான் அதிகமாக பணம் சம்பாதித்ததாகவும் ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நடந்த அவமானத்தால் தான் சினிமாவை விட்டு விலக்குவதாக முடிவெடுத்ததாகவும் கூறி இருக்கிறார்.

நடிகர் சிவகுமார் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அப்பா ஆகவும் நடிக்க தொடங்கியிருந்தார். அந்த நேரத்தில்தான் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி இறந்தார். ஆனால் திடீரென்று சீரியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

television sivakumar

சமீபத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தான் வெளியே செல்லும் இடங்களில் தன்னை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பவர்களின் செல்போன்களை பிடுங்கி வீசி உடைப்பது போன்ற செயல்களால் சிவக்குமார் இணையத்திலும் அதிகமாக பேசப்படுகிறார்.

சிவக்குமாரின் இரண்டு மகன்களும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் நடிகர்களாக இருக்கும் நிலையில் சிவகுமார் தன்னுடைய மகன்கள் நடிக்க தொடங்கிய பிறகுதான் நடிப்பை விட்டு விட்டார் என்று சிலர் கூறி வந்தனர் ஆனால் அதெல்லாம் உண்மையான காரணம் கிடையாது. தனக்கு சினிமாவில் நடந்த அவமானம் தான் சினிமாவை விட்டு விலக காரணமாக இருந்தது என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதில் சிவகுமார் பேசுகையில் ஆரம்பத்தில் நான் கதாநாயகனாக சினிமாக்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் நடித்த படங்கள் எல்லாம் பிளாப் ஆக தொடங்கிவிட்டது. எனக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டது. அந்த நேரத்தில் நமக்கு ஒரு வருமானம் வேண்டும் என்பதற்காக நான் அப்பா கேரக்டரிலும் நடிக்க தொடங்கிவிட்டேன்.

வானத்தைப்போல திரைப்படத்தில் விஜயகாந்துக்கு அப்பாவாக நான் நடித்ததை எனக்கு மேக்கப் போட வந்தவர் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் விஜயகாந்த்தை விட சின்ன பையன் போல இருக்கீங்க நீங்களா அப்பாவாக நடிக்க போறீங்க என்று கேட்டார். அவரிடம் எனக்கு வாய்ப்பு இல்லை அதனால நான் அப்பாவா கிடைத்த வாய்ப்பில் நடிக்கிறேன் என்று சொல்லவா முடியும்?

ஒரு காலத்தில் நானும் ராஜாவாக இருந்து பிறகு மந்திரி ஆகி இப்போது சேவகராக மாறிவிட்டேன் என்று அவர்களிடம் சொல்ல முடியாமல் நான் அன்னைக்கே ரொம்பவும் அவமானத்தில் கூனி குறுகி இருந்தேன். அதற்கு பிறகும் நமக்கு வருமானம் வேண்டும் என்று தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் எனக்கு சித்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகு உண்மையில் நான் பெரிய பணக்காரன் ஆகிவிட்டேன்.

கதாநாயகனாக நடிக்கும் போது ஒரு படத்திற்கு 5 லட்சம் சம்பளம் வாங்கினேன். அதற்கு பிறகு அப்பாவாக நடிக்கும் போது இரண்டு லட்சம் சம்பளம் தந்தார்கள். அதுவும் ஒரு வருடத்திற்கு மேலே அந்த படத்தில் கால்ஷீட் இருக்கும். ஆனால் சீரியலில் எனக்கு பேட்டா, சம்பளம் எல்லாவற்றையும் கணக்கு பார்க்கும் போது மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேலே வந்தது. அதுவும் செட்யூல் அடிக்கடி இருக்கும். அதனால் எனக்கு சீரியல் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அப்படித்தான் சித்தி சீரியலில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாசமலர் காட்சி வந்தது. பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடிக்கும் போது அந்த கிளைமாக்ஸ் காட்சியில் தத்துரூபமாக வரவேண்டும் என்று அவர் இரண்டு நாட்கள் இரவு தூங்காமல் சாப்பிடாமல் இருந்து நடித்தார். அதுபோல நானும் இந்த சீரியலுக்காக சாப்பிடாமல் தூங்காமல் இருந்து அந்த காட்சியை தத்துரூபமாக வர வேண்டும் என்ற நடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது பக்கத்தில் ஒரு பொண்ணு அவங்க பாய் பிரண்டுடன் பேசி கெக்க பெக்கன்னு சிரிச்சுக்கிட்டு இருந்துச்சு. நான் இவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சிட்டு இருக்கிறேன் ஆனால் அதை கொஞ்சம் கூட மதிக்கலையே என்று எனக்கு கோபம் வந்தது. நான் அதை பற்றி கேட்டா... இப்ப எதற்கு சார் கத்துறீங்க? எப்படியும் இதை நீங்க டப்பிங் தான பேச போறீங்க என்று அலட்சியமா பேசுனாங்க. எனக்கு பெரிய கஷ்டமா ஆயிடுச்சு.

சிவாஜி கணேசன் அவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கும் போது அங்கு இருந்த டைரக்டர், கேமராமேன் உட்பட எல்லாரும் அழுதுட்டு இருந்தாங்க. கட் கூட சொல்லாம காட்சிகளை அப்படியே பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ மரியாதை இருந்துச்சு ஆனா இப்ப மரியாதை இல்ல அதனால எனக்கு இந்த நடிப்பு வேண்டாம் என்று நான் அன்னைக்கு செருப்பால என்ன அடிச்சுகிட்டு இனி நான் மேக்கப் போட மாட்டேன்னு முடிவு எடுத்தேன். அதனால தான் இப்ப வரைக்கும் நான் நடிக்கல என்று அந்த பேட்டியில் சிவக்குமார் பேசி இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+