என் மீது விழுந்த வீண் பழி.. உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்ய நினைத்தேன்! சிவக்குமார் எமோஷனல்
சென்னை: நடிகர் சிவகுமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது சிறு வயதில் தான் செய்யாத தப்புக்கு தன்னுடைய அம்மா தன்னை தண்டித்ததால் தான் தற்கொலை செய்வதற்காக முயற்சி செய்ததாகவும் பிறகு அதில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்றும் பேசி இருக்கிறார்.
நடிகர் சிவக்குமார் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகனாவும், துணை கதாபத்திரத்திலும் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அப்பாவாகவும் நடிக்க தொடங்கி இருந்தார். அதுபோல சித்தி உட்பட ஒரு சில சீரியல்களிலும் நடித்திருந்தார். ஆனால் இப்போது சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய சின்ன வயதில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் என்னுடைய அம்மா ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக இருப்பாங்க. சின்ன பிரச்சினைக்கும் கடுமையா நடந்து கொள்வாங்க.
எனக்கு 14 வயது இருக்கும்போது நாங்கள் இருந்த வீட்டு பக்கத்தில் என்னுடைய மாமன் பொண்ணு பத்து வயதில் இருந்தது. அந்த பொண்ணை நான்தான் வளர்த்தேன் என்று சொல்லலாம் எப்போதும் அந்த பொண்ணு எங்க வீட்டுக்கு வரும். அடிக்கடி எனக்கும் அவளுக்கும் சண்டை வரும். அப்போது என்னுடைய கைகளில் அந்த பொண்ணு கடித்து வைத்துவிடும்.
சின்ன பிரச்சனை என்றாலும் ஓ என்று அலறி அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடும். ஒரு முறை என்னுடைய வீட்டிற்கு என்னுடைய மாமன் மகனும் வந்திருந்தார். அவன் பம்பரம் விளையாடி கொண்டிருந்தான். எங்க கிராமத்தில் வீட்டு வாசலில் திண்ணை அமைந்திருக்கும். அந்த திண்ணையில் அந்த பொண்ணு வந்து அமர்ந்தார்.
அவ வந்து உட்காரும்போது நான் இந்த இடத்தில் உட்காராதே பம்பரம் விளையாடிக் கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டுவிடும் என்று சொன்னேன். ஆனால் அவள் போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு நின்றாள். நான் சொல்லி முடிப்பதற்குள் என் மாமன் மகன் விட்ட பம்பரம் திண்ணையில் பட்டு சிதறி அவள் கண் பக்கத்தில் பட்டுவிட்டது. உடனே அவள் ஓ வென்று அலறி ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள்.
அந்த சத்தம் கேட்டு வந்த என்னுடைய அம்மா என்ன ஆச்சு என்று கேட்டார். நான் பம்பரம் பட்டுடுச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அவங்க என்னை அடிக்க தொடங்கிட்டாங்க. வீட்டில் இருந்த கற்றாழை நாரை வைத்து அவங்க அடித்ததில் என்னுடைய காலில் பின்பக்கத்தில் தோல் உரிந்து ரத்தமே வந்து விட்டது.
ஆனால் அப்போதும் நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று சொன்னேன். ஆனால் நீ பம்பரம் விளையாடியதால் தானே அவனும் வந்து பம்பரம் விளையாடினானா அதனால் தானே அவள் கண்ணில் பட்டது என்று என் மீது பழியை சொன்னாங்க. நான் எந்த தப்பும் செய்யாமல் அம்மா என்னை அடித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நேத்ரனை சின்ன வயசுல இருந்தே தெரியும்.. ஷூட்டிங் ஸ்பாட்டில், அலட்சியத்தால் வந்த பிரச்சனை! ஸ்ரீ வேதனை
அப்போ எங்க வீட்டில் ஒரு பெரிய கதவு இருக்கும். அந்த கதவில் ஏறி தூக்கு போட முயற்சி செய்தேன். அப்போ என்னுடைய அம்மாவும் அத்தையும் ஓடி வந்து என்னுடைய இரண்டு காலையும் பிடித்து என்னை கீழே இழுத்தார்கள். ஆனாலும் நான் இறங்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தேன். பிறகு தெருவில் உள்ளவர்கள் எல்லோரும் வந்து என்னை பிடித்து சமாதானம் செய்தார்கள்.

அப்போது என்னுடைய மாமா நீ இந்த ஊரில் அறிவா பேசுவ நீயா இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுக்க துணிந்த என்று கேட்டாரு. அதற்குப் பிறகு இரண்டு மூன்று வாரங்கள் நான் எங்க தோட்டத்து பக்கம் போக மாட்டேன். ஏனென்றால் நான் செய்யாத தப்புக்கு அம்மா என்ன தண்டனை கொடுத்துட்டாங்களே இந்த உலகத்தில் வாழவே கூடாது என்ற சிந்தனை எனக்கு அப்போ இருந்து கொண்டே இருந்தது.
தனியாக போனா ஏதாவது தவறா முடிவு எடுத்து விடுவோமோ என்று நானே பயந்தேன். ஆனால் இப்போ அதை நினைத்து பார்க்கும் போது சிரிப்பாக இருக்கிறது என்று தன்னுடைய கடந்த காலம் குறித்து சிவகுமார் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications