சிவகுமார் தலையிலே அடிச்சிக்கிட்டாரு.. "ஓவர் சவுண்டு" கங்குவா! ஜோதிகாவின் சப்பைக்கட்டு காரணம்: பிரபலம்
சென்னை: நடிகர் சூர்யாவை வன்மமாக தாக்க வேண்டும் என்ற நோக்கம் தமிழக மக்களுக்கு இல்லை. கங்குவா படம் மட்டுமே எதிர்மறை விமர்சனங்களுக்கு காரணம் என்பதை ஜோதிகா புரிந்து கொள்ள வேண்டும்.. அதைவிட்டுவிட்டு இன்னமும் அந்த படத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவதை ஏற்க முடியாது" என்று மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கருத்து தெரிவித்துள்ளார்.
AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் அந்தணன், "கங்குவா படம் குறித்து ஜோதிகா பேசியிருந்தது, புரியாமல் பேசியிருந்ததாகவே தெரிகிறது. ஆனால், கங்குவா படத்தை அன்று யாரெல்லாம் விமர்சனம் செய்தார்களோ அவர்கள் எல்லாருமே, சூர்யாவின் அடுத்து வரப்போகும் ரெட்ரோ படத்தை தூக்கி வைத்து கொண்டாட போகிறார்கள்.

கங்குவா படம் சத்தம்
ஏனென்றால், கங்குவா படத்தில் பிரச்சனையே சவுண்டுதான். இதே கங்குவா படம் ஓடிடியில் வெளியானபோது, அந்த அளவுக்கு சத்தம் இல்லை.. வீட்டில் பார்க்கும்போது, சத்தத்தையும் குறைத்து கொண்டு நம்மால் பார்க்க முடியும் ஆனால், தியேட்டரில் இந்த வசதி கிடையாது.. எப்பவுமே கத்திக்கிட்டே இருந்தால் எப்படி? தியேட்டரை விட்டு ஓடணும்னுதானே தோணும்?
ஆனால் ஜோதிகா, இந்த கோபத்தையெல்லாம் யார் மீது காட்டணும் என்றால், இப்படியொரு தவறை செய்தவர்கள் மீதுதான் காட்டணும். அதுக்காக, படத்தை நல்லா இல்லை என்று சொன்னர்களை சாடுவது, சரியான புரிதல் கிடையாது. முதலில், சூரியா மீது யாருக்குமே தனிப்பட்ட கோபம் வராது. கோபம் வரும் அளவுக்கு அப்படியெதுவுமே அவர் பேசியதும் கிடையாது.
சூர்யாவின் வரவேற்கத்தக்க கருத்துக்கள்
எந்த அரசியல்வாதியையும் அவர் இதுவரை தவறாக பேசியது இல்லை.. கல்வி கொள்கை பற்றி கருத்து சொல்லியிருந்தார்.. இந்தி எதிர்ப்பு தொடர்பாக கருத்து சொல்லியிருந்தார்.. அவை அனைத்தும் கருத்துதான்.. சூர்யா போல எத்தனையோ நடிகர்கள் கருத்து சொல்கிறார்கள் .. இத்தனைக்கும் சூர்யா சொன்ன கருத்துக்கள் எல்லாமே, மக்களுடன் ஒத்துப்போன கருத்துக்கள்தான்.
அப்படியிருக்கும்போது, சூர்யாவை வன்மமாக தாக்க வேண்டும் என்ற நோக்கம் மக்களுக்கு இல்லை. எனவே, படம் மட்டுமே இதுக்கு காரணம் என்பதை ஜோதிகா புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, இன்னமும் அந்த படத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவதை ஏற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
சிவக்குமார் எதிர்ப்பு
சமீபத்தில், AG Modern Media என்ற யூடியூப் சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி தந்திருந்தபோது, "என்னைக்கு ஜோதிகாவை காதலிப்பதாக சூர்யா சொன்னாரோ, அன்னைக்கே சிவக்குமாருக்கு தலைவலி ஆரம்பமாகிவிட்டது.. ஜோதிகா வேண்டாம், வேண்டாம் என்று தலையிலேயே அடித்து கொண்டார்..
திருமணத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று ஜோதிகாவிடம் சொன்னார் சிவகுமார்.. ஆனால், ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்.. மறுபடியும் நடிக்க ஆரம்பித்தார்.. பிறகு சிவக்குமாருக்கு, ஜோதிகா நிரந்தர தலைவலியாகவிட்டார்.
2 முக்கிய கேள்விகள்
ஜோதிகா திடீரென கங்குவா படம் குறித்து அறிக்கை வெளியிட்டார்.. "நல்ல படத்தை திட்டறாங்க, ஓடாத படத்தை ஓட வைக்கறாங்க, ஓட வேண்டிய படத்தை ஓடவிடாமல் செய்றாங்க. திட்டமிட்டு பழிவாங்கிவிட்டார்கள்" என கூறியிருந்தார்.
ஜோதிகாவிடம், 2 கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.. உங்க வீட்டுக்காரர்தானே "கங்குவா" படத்தின் கதாநாயகன்.. நீங்க மும்பையில் இருந்துட்டே, இந்த படத்தின் புரமோஷனுக்கு ஏன் வரல? கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தபோது ஏன் வரல?
படம் சரியாக போகல்விலை என்றதும் வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதிப்பது ஏன்? ஓடாத படத்துக்கு என்னதான் பாராட்டி பேசினாலும் ஓடாது. படிக்கிற பையன் எங்கேயும் படிப்பான்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications