யாரையும் நம்ப கூடாதுன்னு பாடம் கற்று கொடுத்துட்டாங்க! எமோஷனலாக பேசிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிகர் ஸ்ரீதேவா நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரையும் நம்ப கூடாதுன்னு நாம நம்புனவங்களே பாடம் கற்றுக் கொடுத்துறாங்க என்று எமோஷனலாக பேசி ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் நல்ல டிஆர்பி பெற்று வருகிறது. இந்த சீரியல் 500 எபிசோடு தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்து வருகிறார்கள். அதிலும் இந்த சீரியலில் கதாநாயகன் முத்துவிற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல முத்துவின் அண்ணன் மனோஜ்க்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

மனோஜ் இந்த சீரியலில் வில்லனா? காமெடியனா? என்று யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கிறார். ஒவ்வொரு முறையும் பிரச்சனைகளில் அவர் சிக்கும் போது அடி வாங்கி திருதிருவென முழிப்பது பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. மனோஜின் கேரக்டரே இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு நடிக்கும் நடிகர் அந்த கேரக்டருடைய செட் ஆகிவிட்டார்.
மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா சீரியலில் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட அவர் நடித்த ஆலன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. மக்கள் மத்தியிலும் பாராட்டு அவருக்கு கிடைக்கிறது. அதே நேரத்தில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று சில புகைப்படங்கள் வீடியோக்களை இவர் பகிர்ந்து வருவது வழக்கம். கடந்த வாரத்தில் கூட ரோகிணி ஜெயிலில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதை தொடர்ந்து இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமாக பேசி ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார்.

அதில், "யாரெல்லாம் இந்த லைஃப்ல நாம கண்மூடித்தனமா நம்புனமோ அவங்க தான் யாரையும் நம்ப கூடாதுன்னு பாடத்தை கற்றுக் கொடுத்துட்டு போறாங்க.." என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். இது இவருடைய வாழ்க்கையில் நடந்த ஏதேனும் சம்பவத்தை வைத்து இந்த போஸ்ட் போட்டு இருக்கிறாரா? அல்லது ரோகிணி இந்த சீரியலில் மாட்ட போகிறாரா அதனால் மனம் நொந்து போனது போல இவர் இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறதா என்று குழப்பம் ரசிகர்களுக்கு இருக்கிறது.
அது குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். ஆனால் எந்த கமெண்ட்களுக்கும் ஸ்ரீதேவா பதில் கொடுக்காமல் லைக் மட்டும் கொடுத்து இருக்கிறார். இதனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications