Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளே மாறிய நடிகர் சுரேஷ்.. 15 வருடம் கழித்து கொடுத்த பேட்டி! நதியாவோடு கிசுகிசுக்கு கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சுரேஷ் 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து வந்த நிலையில் தற்போது 15 வருடங்களுக்கு பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நடிகை நதியாவோடு தன்னை இணைத்து வந்த கிசுகிசுக்கள் பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

80ஸ் காலகட்டத்தில் உள்ள நடிகர்கள் பற்றி பேசும்போது கண்டிப்பாக சுரேஷ் இடம் பிடித்திருப்பார். அந்த காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்து சுரேஷ் "பன்னீர் புஷ்பங்கள்" என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Television nadhiya Suresh

அதற்கு பிறகு கங்கை அமரன் இயக்கத்தில் பிரபுவுடன் நடித்த கோழி கூவுது திரைப்படமும் சுரேஷுக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அந்த திரைப்படத்தில் தபால்காரர் ராமகிருஷ்ணனாக சுரேஷ் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற காமெடி மற்றும் சென்டிமெனட் காட்சிகள் இப்போதும் பார்ப்பவர்களின் மனதை கவர்ந்து விடும்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு காதல் நாயகனாக வலம் வந்த சுரேஷ் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த நதியா, ரேவதி போன்ற நடிகைகளோடு அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். உன்னை நான் சந்தித்தேன், பூக்களை பறிக்காதீர்கள் போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் வெண்ணிறாடை, காதலிக்க நேரமில்லை படங்களின் இயக்குனர் ஸ்ரீதர் இவரை அறிமுகப்படுத்துவதற்கு தயங்கி நிராகரித்திருக்கிறார். ஆனால் 1985 ஆம் ஆண்டு ஸ்ரீதர் உன்னை தேடி வருவேன் படத்தில் சுரேஷை நடிக்க வைத்தார். அதற்கு பிறகு இவருடைய தனித்துவமான டான்ஸ் மற்றும் நடிப்பு பலரையும் கவர்ந்தது. 1980களில் தொடங்கி கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்த சுரேஷ் அந்த காலகட்டத்தில் நிறைய படங்களில் ரொமான்டிக் ஹீரோவாகவே நடிக்க வாய்ப்பு வருவதாக தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு பக்கம் நடிக்க போய்விட்டார்.

அப்போது பிற மொழிகளில் 250 திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இப்போது கூட நம்முடைய நண்பர்களில் சுரேஷ் என்ற பெயர் வைத்தவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அதிலும் 90ஸ் கிட்ஸ்களில் அதிகமானவருடைய பெயர் சுரேஷ் என்று இருக்கும். ஆனால் தற்போதுள்ள 2கே கிட்ஸ்களுக்கு சுரேஷ் பற்றி பெரிய அளவில் தெரிந்து இருக்காது.

நதியா அந்த வார்த்தை சொல்லும்போது.. 400 ரூபாய் தான் சம்பளம்.. விஜய் சேதுபதி பளிச்
ஹீரோவாக நடித்து கலக்கி கொண்டு இருந்த சுரேஷ் அஜித் நடித்த அசல் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார். அதுபோல தலைவா திரைப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக கம் பேக் கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

அதுவும் சமையல் நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலகலப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மொட்டை தலையோடு பெரிய மீசை வைத்துக் கொண்டு வந்தது அவருக்கு புது அடையாளமாக இருந்தது. ஆனால் இப்போது 15 வருடங்களுக்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி கலாட்டா youtube சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் நடிகை நதியாவோடு தன்னை இணைத்து வந்த கிசுகிசுவுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் சுரேஷ் பேசுகையில், என்னையும், நதியாவையும் சேர்த்து கிசுகிசு வந்தது எனக்கு தெரியும். அதற்கு முக்கிய காரணம் நதியா சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் போனில் பேசிக்கொண்டே இருப்பார். அது அவருடைய காதலர்தான்.

அவர் காதலிச்ச விஷயம் எனக்கு தெரியும். ஆனால் அது அங்கிருந்த வேறு யாருக்கும் தெரியாது. நதியா காதலித்த நபருடைய பெயர் சுரேஷ். அவரைத்தான் நதியா திருமணம் செய்திருக்கிறார். நாங்கள் இருவரும் அந்த காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறோம். அதனால் எங்கள் இருவரையும் இணைத்து கிசுகிசு வந்தது.

ஆனால் அதை எல்லாம் கண்டு கொண்டது கிடையாது. சொல்லப்போனால் நதியா எனக்கு ஒரு தம்பி மாதிரி தான். தங்கை என்று கூட சொல்ல மாட்டேன். நான் குட் மார்னிங் சொன்னால் கூட அவருடைய குட்மார்னிங் வித்தியாசமாக இருக்கும். எப்போதும் திமிரா பேசுறியே கொஞ்சம் சாப்டா பேசினால் என்ன என்று தான் நான் கேட்பேன்.

சினிமாவில் காட்டுவது போல நதியா கிடையாது சினிமாவில் தான் அமைதியாக இருப்பாங்க ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் என்னிடம் ரொம்ப திமிரா நடந்துக்குவாங்க. எப்பவும் கணீர் என்ற குரலில் தான் பேசுவாங்க. ஆனால் லைஃப்ல எப்படி எல்லாம் இருக்கணும் என்று பர்பெக்டா பிளான் போட்டு வச்சிருந்தாங்க. இப்போதும் நாங்கள் எல்லோரும் 80ஸ் நடிகர்கள் குரூப்பில் இருக்கிறோம். அடிக்கடி பேசிக் கொள்வோம் என்று அந்த பேட்டியில் நடிகர் சுரேஷ் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+