டி.ராஜேந்திரன் "தாடி”க்கு காரணம் அந்த “லேடி” தானா..? ரகசியத்தை உடைத்த நண்பர் தியாகு
சென்னை: இயக்குனராகவும் நடிகராகவும் பாடகராகவும் பல திறமைகளை கொண்ட டி.ராஜேந்திரன் திரைப்படங்கள் அதிகமாக காதல் தோல்வி உள்ளதாகவே இருக்கும்.
அதுபோல டி ராஜேந்தர் எப்போதும் தாடியோடு இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தாலும் அதற்கான பதில் இதுவரைக்கும் கிடைத்ததில்லை.
கடையில் இது பற்றிய முதல் முறையாக டி ராஜேந்திரன் நண்பரும் நடிகருமான தியாகு பல ரகசியங்களை உடைத்து இருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் இன்று வரை நடிகர் டி ராஜேந்திரன் போன்ற ஒரு திறமைசாலியை யாராலும் பார்க்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவருடைய கதை, வசனம், டைரக்ஷன், நடிப்பு மற்றும் இசை என அனைத்து துறைகளிலும் தன்னுடைய தனித் திறமையை காட்டிக்கொண்டு இருப்பார். அது மட்டும் அல்லாமல் ஒரு அரசியல் பிரமுகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
நடிகர் டி ராஜேந்திரன் முதல் முதலாக 1980 ஆம் ஆண்டு ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தின் மூலமாக தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதை தொடர்ந்து எழுத்தாளராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் இவருக்கு முதல் படமே பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் வாய்ப்புகளும் கிடைத்துவிட்டது.
அதைத்தொடர்ந்து தான் இவர் வசந்த அழைப்புகள் எனும் திரைப்படத்தை இவரே நடித்தும், இயக்கியும் இருந்தார். அந்த திரைப்படமும் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டது. அது மட்டுமல்லாமல் நடிகர் ராஜேந்தரின் அடுக்கு மொழியில் பேசும் திறமை பல நடிகர்களை விடவும் இவருக்கு வித்தியாசத்தை கொடுத்தது.
ஒரு நடிகராக தான் மட்டுமல்லாமல் தன்னுடைய திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களையும் தன்னுடைய அடுக்குமொழியால் பேசவைத்து அழகு பார்ப்பது தான் ராஜேந்திரனின் தனித்துவம். அதுபோல நடிகர் ராஜேந்திரனுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். மூத்த மகன் அனைவருக்கும் தெரியும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு தான். அதே போல இரண்டாவது மகனான குறளரசன் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால் அவர் அந்த அளவிற்கு வெளியே தெரியவில்லை.
டி ராஜேந்தர் பற்றி அவருடைய நண்பர் தியாகு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் டி ராஜேந்திரன் தாடி வளர்க்க என்ன காரணம் அதன் பின்னணி பற்றி உங்களுக்கு தெரியுமா என்று கேட்டதற்கு அவர் லவ் தாங்க காரணம். வேற என்ன இருக்க முடியும்..? இல்லன்னு சொல்ல சொல்லுங்க அவர.., அந்த பொண்ணு பேரு உஷா தான் என்று சொல்கிறார்.
அதற்கு உங்களிடம் அவர் சொன்னாரா? என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு தியாகு அந்த பொண்ணு ராஜேந்தர் தங்கி இருக்கிற தெருவுல தான் அவங்க வீடும் இருந்தது. ஆனா அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றது வீட்ல சம்மதிக்கல. அதனால பிரிஞ்சிட்டாங்க. அதனால்தான் இன்னைக்கு வரைக்கும் அந்த "தாடி" வச்சிருக்கார் என்று தியாகு, ராஜேந்தர் பற்றி கூறியிருக்கிறார்.
-
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
வேடன் விவகாரம்... அமைச்சர் சந்திப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை! சின்மயி கேள்விக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications