தெய்வங்கள் தோற்றுப் போகும் தந்தை அன்பில்..மகளுக்காக தலைவாசல் விஜய் செய்த செயல்..நெகிழ்ச்சியான தருணம்
சென்னை: நடிகர் தலைவாசல் விஜய் தன்னுடைய மகளின் திருமணத்தில் செய்த செயல் தான் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தலைவாசல் விஜய் பல திரைப்படத்தில் குணச்சித்திர வேதங்களிலும் வில்லனாகவும் கூட நடித்திருக்கிறார் ஆனால் நிஜ வாழ்க்கையில் தன்னுடைய மகள் மீது அவர் வைத்திருக்கும் அன்பு மற்றும் மகள் திருமணத்தில் அவர் சிந்திய ஆனந்தக் கண்ணீர் குறித்து பலர் பேசி வருகின்றனர்.

அதே நேரத்தில் நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் திருமணம் கடந்த மாதமே முடிவடைந்துவிட்டது. ஆனாலும் அப்போது எடுத்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் தலைவாசல் விஜய் பலருக்கும் பரீட்சயமானவர் தான். பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த "அழகு" சீரியலில் நடிகை ரேவதியின் கணவராக வாத்தியார் கேரக்டரில் நடித்திருப்பார். இவருடைய நடிப்பிற்கு எடுத்துக்காட்டு சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய கேரக்டரில் நடித்ததை விடவும் வாழ்ந்து காட்டி இருப்பார்.

இந்த வகையில் நடிகர் தலைவாசல் விஜய் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். அதுவும் 1992 ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் திரைத்துறையில் அறிமுகம் ஆகி பிரபலமானதால் அந்த பெயரையே தன்னுடைய பெயருக்கு முன்பாக சேர்த்துக் கொண்டார்.
பொதுவாக சில நடிகர்களின் குழந்தைகள் நடிகர்களாக மாறி இருக்கின்றனர். ஆனால் நடிகர் தலைவாசல் விஜயின் மகள் நடிப்பு துறையை தேர்ந்தெடுக்காமல் விளையாட்டு துறையை தேர்ந்தெடுத்து அதில் பல வெற்றி பதக்கங்களையும் வாங்கி குவித்து இருந்தார். இது சில வருடங்களுக்கு முன்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த வகையில் நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் மூத்த மகள் ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனை என்பது பலருக்கும் தெரிந்த ரகசியம்தான்.
அதோடு அவர் நேபாள நாட்டின் தலைநகர் காத்தமேடுவில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு இருந்தார். அது மட்டுமல்லாமல் அவருக்கும் தமிழக கிரிக்கெட் வீரரான அஜித் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதை தொடர்ந்து இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணமும் நடைபெற்றது.

அந்த நேரத்தில் தலைவாசல் விஜய் உடைய மகள் மருமகன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து இப்போது அந்த திருமணத்தில் நடந்த நெகிழ்ச்சியான வீடியோஸ் வைரலாகி வருகிறது. அதாவது தன்னுடைய மகள் தனக்கு திருமணம் ஆகும்போது கண் கலங்கி அழுகிறார்.
அப்போது அங்கிருக்கும் தந்தையான தலைவாசல் விஜய்யும் ஆனந்த கண்ணீர் விடுகிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அப்பாவுக்கு எப்போதுமே பிள்ளைகள் உசுரு தான். அதுவும் பெண் பிள்ளைகளை சொல்லவே வேண்டாம். அந்த பாசத்தை கண்ணீரில் தலைவாசல் விஜய் காட்டிவிட்டார் என்ற அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications