காலை இழந்த உதயாவிற்காக தங்கத்துரை செய்த உதவி.. பலரை சிரிக்க வைத்தவருக்கா இந்த நிலைமை?
சென்னை: விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான உதயா தற்போது திரைப்படங்களிலும் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு சர்க்கரை நோய் காரணமாக ஒரு கால் அகற்றப்பட்டு இருந்த நிலையில் இவரை நேரில் சந்தித்த நடிகர் தங்கத்துரை அவருக்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்திருக்கிறார்.
லொள்ளு சபா நிகழ்ச்சி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியை பார்த்து பலர் மனம் விட்டு சிரித்தனர். இந்த நிகழ்ச்சியில் பிரபலமான ஒரு சிலர் சினிமாவில் காமெடி நடிகர்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் பரிதாப நிலையில் இருக்கிறார்கள். அதில் நடிகர் உதயாவும் ஒருவர்.

உதயாவிற்கு சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து ஒரு காலை அகற்றி இருக்கின்றனர். அதுபோல தொடர்ந்து சிகிச்சை செய்வதற்கும் தன்னுடைய அன்றாட செலவுகளை பார்ப்பதற்கும் பணம் இல்லாமல் உதயா தவித்து வருவதாகவும் அவருடைய நண்பர்கள் புகைப்படங்கள வெளியிட்டிருந்தனர்.
அதுபோல உதயாவிற்கு சில சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உதவி செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் தங்கத்துரையும் உதயாவை நேரில் சென்று நலம் விசாரித்து இருக்கிறார். ஒரு கால் அகற்றப்பட்ட நிலையில் அவரைப் பார்த்ததும் கண்கலங்கி ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.
அதில், ரசிகர்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்து நடித்து வந்த ஒரு நடிகரை ஒரு கால் இல்லாமல் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. லொள்ளு சபா மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகர் அண்ணன் உதயா அவர்கள் சர்க்கரை வியாதியால் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார். இன்று அவருடைய வீட்டில் அவரை சந்தித்து நலம் விசாரித்து முடிந்த உதவியை செய்தேன்.
மேலும் உதவி செய்ய விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கு 7010734646 gpay என மற்றவர்களும் அவருக்கு உதவும் வகையில் பதிவு வெளியிட்டு இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு லொள்ளு சபா பழனியப்பன் உதயாவை நேரில் சந்தித்து அவருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார். அதுபோல அவருடைய ரசிகர்களும் உதவ வேண்டி இருந்தார்.

கடந்த வருடத்திலிருந்து அதிகமான காமெடி நடிகர்கள் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். காமெடி நடிகர்கள் தங்களுடைய உடல் நிலையை கருத்தில் கொள்ள தவறுவதும் இவர்களுடைய இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெரிய நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கிக்கொண்டு சினிமாவில் நடிக்கிறார்கள். அதே நேரத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாக இருக்கிறது.
அதனால் சின்ன நடிகர்களால் அவர்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்திக் செய்து கொள்ள செய்ய முடியாத சூழ்நிலைதான் பலருக்கும் இருக்கிறது. எப்படியாவது நாமும் பெரிய திரையில் வரவேண்டும் பெரிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று அதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கிடைக்கிற கேப்பில் ரசிகர்களையும் என்டர்டைன்மென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு அவர்களுடைய உடல் நலம் முக்கியம் என்று கவனிக்க மறந்து விடுகிறார்கள். அதுபோல நடிகர் உதயா ஒரு கால் தனக்கு எடுக்கப்பட்டிருந்தாலும் எனக்கு உடல்நிலை சரியானதும் நான் மீண்டும் நடிக்க வருவேன் என்று தன்னம்பிக்கையோடு கூறி இருக்கிறார். அவருக்கு விரைவில் உடல்நிலை சரியாகி அவருடைய திறமையை காட்டுவதற்கு நல்ல வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்று நாம் வேண்டிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications