நடிப்பை விட்டு விலகியது இதனால்தான்! அந்த மேடையில் நடந்த நிகழ்வு! வெண்ணிற ஆடை மூர்த்தி எமோஷனல்
சென்னை: பழம்பெரும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பல திரைப்படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார். ஆனால் சமீப காலமாக அவர் எந்த திரைப்படங்களிலும் நடிப்பதில்லை. அது குறித்து சமீபத்தில் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் நடிகர் லட்சுமணனுடன் பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில் தான் கடைசியாக நடித்த திரைப்படத்தில் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாக வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இப்போது உள்ள காலகட்டத்தில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் கூட ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெறாமல் போய்விட்டாலே பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல், இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் ஏறக்குறைய மூன்று தலைமுறைக்கு மேலாக பல முன்னணி நடிகர்களோடு நடித்ததோடு திரையுலகில் தனக்கொரு அடையாளத்தையும் ரசிகர்களையும் கவர்ந்து வைத்திருப்பவர்தான் வெண்ணிற ஆடை மூர்த்தி.
இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து இருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் உட்பட பல இளம் நடிகர்களோடும் வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்திருக்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி அதிகமாக எந்த திரைப்படங்களிலும் காண முடிவதில்லை.
அது குறித்து நடிகர் லட்சுமணன் உடன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருக்கிறேன், சீரியல்களில் நடித்திருக்கிறேன், சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு எல்லாமே போதும் என்ற நிலை வந்தது. அது நான் கடைசியாக நடித்த இட்லி என்ற திரைப்படத்தில் நான் அந்த திரைப்படத்தில் நடிகை கோவை சரளா உடன் நான் அந்த படத்தில் நடித்திருந்தேன்.
மிகவும் மகிழ்ச்சியான திரைப்படமாக அந்த திரைப்படம் இருந்தது. அந்த திரைப்படம் முடிவடைந்த பிறகு நடிகர் சங்கத்தில் ஒரு மீட்டிங் நடைபெற்றது. அதில் பலர் இருந்தார்கள் அந்த நேரத்தில் நான் மேடையில் பேசும்போது ஒருத்தங்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது உணவு, உடை, உறக்கம் தான். அதில் உறக்கம் என்பது நாமாக தேடிக்கொள்வது.. நம்முடைய உடம்பு தேடும் போது அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் உணவும், உடையும் எப்போதுமே அவசியமாக இருக்கிறது. அதில் உடை (அதாவது வெண்ணிற ஆடை மூர்த்தி) என்னுடைய பெயரிலேயே அந்த ஆடை இருக்கிறது. அதுபோல உணவு இப்போது நான் கடைசியாக நடித்திருக்கும் இட்லி என்ற படத்தில் இருக்கிறது. இந்த படத்தோடு நான் என்னுடைய நடிப்பை முடித்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்கள்.
நான் இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுப்பாங்க என்று கொஞ்சமும் நினைக்கல. அந்த நேரத்தில் மேடையில் இருந்த இயக்குனர் சங்கர் கூட இப்படி எல்லாம் பேசாதீங்க சார் கண்டிப்பா நீங்க என்னுடைய படத்தில் நடிக்கணும் என்று சொன்னார். நான் இல்லை நான் ஒரு முடிவெடுத்துவிட்டேன். இனி நடிக்கப் போவதில்லை. என்னுடைய பெயரில் இருக்கும் ஆடையும் நான் கடைசியாக உணவு தலைப்பில் உள்ள இட்லி படத்தில் நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு போதும் என்று சொன்னேன்.
அதை தான் இன்று வரைக்கும் நான் ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கிறேன். இனி எந்த திரைப்படத்திலும் நான் நடிக்கப் போவது கிடையாது என்று அந்த பேட்டியில் வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருக்கிறார். சமீபத்தில் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராக்ஸ்டார் மனோ என்று பாடகர் மனோவை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மனோவின் சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனோவை பாராட்டி அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வெண்ணிற ஆடை மூர்த்தி வந்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு இவரை பார்த்த ரசிகர்கள் இவர் மீண்டும் ரசிகர்களை சிரிக்க வைக்க சினிமாவில் வரவேண்டும் என்று கருத்து கூறி வந்தனர். ஆனால் இப்போது இவர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக கூறி இருக்கிறார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications