வேளாங்கண்ணியில் கண்ணீர் சிந்திய அருண் விஜய்.. அப்பா போல ஒரு நாள் நானும்.. தன்னம்பிக்கை வார்த்தை
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தான் நடித்துக் கொண்டிருக்கும் "ரெட்டை தல" திரைப்படத்தின் சூட்டிங் வேளாங்கண்ணியில் நடைபெற்று வரூம் நிலையில் சூட்டிங் முடிவடைந்ததும் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்திருக்கிறார். அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களையும் பேசியிருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக பல பிரபலங்களின் வாரிசுகள் சினிமா துறையில் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவை போலவே நானும் சினிமாவில் ஜொலிக்கலாம் என்று நம்பிக்கையோடு அடி எடுத்து வைப்பவர்களுக்கு சரியான வாய்ப்புகள் அமைவதில்லை. அதனாலேயே தங்களுடைய அப்பா அல்லது அம்மா போல தங்களால் ஜொலிக்க முடியாமல் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் திறமை இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டும்தான் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்து கொண்டிருக்கிறது. ஒரு சிலர் அதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் அருண் விஜய். அருண் விஜய் விஜயகுமாரின் மகன் தான். விஜயகுமார் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு இரண்டு பெண்கள் மற்றும் அருண் விஜய் பிறந்தார். அதற்குப் பிறகு விஜயகுமார் தன்னுடைய முதல் மனைவியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்து இருந்த நிலையில் அப்போதும் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனாலும் தன்னுடைய இரண்டு குடும்பத்தோடு பிறகு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் விஜயகுமார் குடும்பத்தில் ஒரே ஒரு மகளைத் தவிர வேறு எல்லாருமே நடிகர்களாக இருக்கின்றனர். அவர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் பிளேபாய் போல சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இப்போது சண்டை காட்சிகள் நிறைந்த திரில்லர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய மிரட்டலான காட்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பு பிடித்திருக்கிறது.
இந்த நிலையில் அவர் இப்போது ஒரு சில திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் ரெட்டை தல என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக வேளாங்கண்ணி சென்றுள்ள நிலையில் அங்கு மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்துள்ளார். தயாரிப்பில் இரட்டை தல திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வருகிறார்.
சாம் சி எல் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் அருண் விஜய் இரண்டு கேரக்டரில் நடிக்க அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்தாலி என இரண்டு நடிகைகள் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட சண்டை காட்சிகள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள அலையாத்தி காடுகள் நிறைந்த பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்து அருண் விஜய் அங்கு கண்ணீர் சிந்தி மாதா பேராலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்.
அப்போது அவருக்கு பேராலய பங்குதந்தை அற்புதராஜ் ஆசி வழங்கினார். அதற்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அருண் விஜய் பிரார்த்தனை செய்தார். அருண் விஜய் அந்த ஆலயத்திற்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் அங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பலர் அந்த ஆலயத்தில் சுற்றிவிட்டனர். அவர்களோடு அருண் விஜய் சிரித்தப்படியே புகைப்படங்களும் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
பிறகு தான் நடித்த வரும் ரெட்டை தல திரைப்படம் குறித்து செய்தியாளர்களிடம் அருண் விஜய் பேசுகையில் என் நடிப்பில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை ரசிகர்கள் விரும்புவதால் அதுபோன்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து ஆக்சன் படத்தில் விரும்பி நடித்து வருகிறேன். ரெட்ட தல திரைப்படம் இதுவரை நான் நடிக்காத கேரக்டர் என்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் படம் தயாராகி வருகிறது என்று கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் காலம் வரும்போது நானும் என்னுடைய அப்பா போல முத்திரை பதித்த நாட்டாமை திரைப்படம் போல் ஒரு படத்தை நிச்சயம் தேர்ந்தெடுத்து நடிப்பேன். வணங்கான் படம் பற்றி பேசுகையில் வணங்கான் படம் பணிகள் அனைத்தும் விரைவில் முடிய உள்ளது. அந்த படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரத்தை மிகவும் காதலித்து நடித்தேன். இயக்குனர் பாலா அந்த படத்திற்காக கூடுதலாக உழைத்திருக்கிறார். அவருடைய டைரக்சனின் நடித்தது சுகமான மற்றும் பிரமாதமான அனுபவமாக இருந்தது என்று அங்கு அருண் விஜய் பேசியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications