மோசமான நிலைமை.. இமேஜை டேமேஜ் செய்து கொண்ட விஷால்? எல்லாமே மதகஜராஜா பட புரமோஷனுக்கா: பிரபலம் சுளீர்
சென்னை: குடிப்பழக்கம், மாத்திரை, கடன் பிரச்சனை என ஆளுக்கொரு பக்கம் காரணம் சொன்னாலும், "அவன் இவன்" படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே விஷாலுக்கு பிரச்சனை துவங்கிவிட்டது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
Cheyyaru Balu யூடியுப் சேனலில், செய்யாறு பாலு பேசும்போது, "வணங்கான் படத்தின்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.. சூர்யா வெளியேறி, அருண்விஜய் உள்ளே வந்திருக்கும் நிலையில், இந்த படம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..

மதகஜராஜா: அதேபோல, மதகஜராஜா படமும் ரிலீஸாகிறது.. இந்த படத்தின் டிரெயிலரே பலருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.. கலர்ஃபுல் தெலுங்கு டப்பிங் போல இருக்கு.. 2k கிட்ஸ்களுக்கு பிடித்த படமாக மதகஜராஜா இருக்கும்..
தற்போது விஷாலின் தோற்றம் மாறிப்போனதால், இதை பற்றி பேசுகிறார்கள்.. 6 அடி கம்பீரமான உயரம் நிலைகுலைந்து போய், விழாவில் பேசியிருந்தது எல்லாருக்குமே வருத்தமாக இருந்தது.. ஜுரத்துடன், ஹீரோ வரவேண்டிய காரணம் என்ன? விஷாலை கட்டாயப்படுத்தி விழாவுக்கு அழைக்கவில்லை என்கிறார் சுந்தர் சி.
கடன்கள்: ஒருவேளை, இந்த படத்தின் புரமோஷனுக்காக விஷால் அப்படி வந்திருக்கலாமே? என்று சிலர் முணுமுணுக்கிறார்கள்.. அதேபோல, விஷாலுக்கு நிறைய கடன்கள் உள்ளது.. விஷால் இப்படியொரு நிலைமையில் இருக்கும்போது, கடன்காரர்கள் யாராவது அழுத்தம் தருவார்களா? அப்படி அழுத்தம் தரும்போது, விஷால் ஏதாவது பேட்டிகளை தந்துவிட்டால், கடன் கொடுத்தர்களின் நிலைமை என்னாகும்? என்றும் சிலர் முணுமுணுக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இதுபோன்ற நிலைமையில் நிகழ்ச்சிக்கு வரும்போது, தன்னுடைய இமேஜ் எந்த விதத்தில் பாதிக்கப்படும் என்பது விஷாலுக்கு தெரியாதா? தன்மீது அனுதாபம் வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறாரா என்றும் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
குடிப்பழக்கம்: குடிப்பழக்கம், மாத்திரை, கடன் பிரச்சனை என ஆளுக்கொரு பக்கம் காரணம் சொன்னாலும், "அவன் இவன்" படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே விஷாலுக்கு பிரச்சனை துவங்கிவிட்டது என்பதே உண்மை.
சிகிச்சை இல்லாமல், யாராலுமே அப்படியொரு மாறுகண் வரவழைக்கவே முடியாது.. உலகநாதன் கமல்ஹாசன் செய்யாத முயற்சி கிடையாது.. உடலை வருத்தி கொண்டாலும், தன்னுடைய உடல்நிலையில் கவனமாகவே இருப்பார். பார்வைத்திறன் இழந்தவராக "ராஜபார்வை"யில் நடித்தபோதும், விழிகளை மேலே உயர்த்தி கண்ணாடி போட்டிருப்பார்.. ராஜபார்வை படத்துக்கு பிறகு, கண்ணில் வெள்ளை படலம் வைத்து நடித்தது காசி படத்தில் விக்ரம்தான்.. ஐ படத்தில் மரணத்தின் விளிம்புவரை சென்றுவந்துவிட்டார் விக்ரம்.
மாறுகண்: அதுபோல "அவன் இவன்" படத்தில் விஷால் ஏன் கண்களை தைத்து கொண்டார்.. ஆர்வக்கோளாறா? பாலா மீதான நம்பிக்கையா? அல்லது படம் வேறு யாருக்கும் கைநழுவி போய்விடக் கூடாது என்பதாலா? மாறுகண்ணை தைத்தாலும் 3 மாதம்வரை மட்டுமே தாங்கும் என்று மருத்துவர்கள் சொல்லியும், ஒன்றே முக்கால் வருடம் வரை, இப்படியே நடித்துள்ளார்.
அப்போது விஷாலுக்கு ஏற்பட்ட பாதிப்புதான் இப்போதுவரை தொடர்கிறது.. நரம்பு பிரச்சனையால், கண் வலி வந்து, அதற்கு மருந்துகளை போட்டு, அந்த மருந்துகளுக்கு பழக்கமாகி, அதனால் சில பக்கவிளைவுகள் வந்து அவதிக்கு ஆளானார்.. வலி அதிகமாகிவிட்டால், தன்னுடைய அம்மா மடியில் படுத்து அழுவாராம்.
பட புரமோஷன்: கடந்த 6 மாதமாக ஆளே இல்லாமல் இருந்த விஷால், அவசர அவசரமாக இந்த பட நிகழ்ச்சிக்கு ஏன் வரணும்? கை நடுங்க மைக் பிடித்து ஏன் காட்டணும்? வலுக்கட்டாயமாக வரவழைத்தார்கள் என்கிறார்கள்? இதை விஷால் புரமோஷனுக்காக செய்தார் என்கிறார்கள்.. இதற்கெல்லாம் காரணம் பாலா என்கிறார்கள்.. எது எப்படியோ, பழைய நிலைமைக்கு விஷால் திரும்ப வேண்டும், பழையபடி அவர் படங்களில் நடிக்க வேண்டும்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications