புழல் சிறையில் கிருஷ்ணாவை சந்திக்க அனுமதி கேட்ட ஸ்ரீகாந்த்! ஜெயிலில் பொழுதை கழிப்பது எப்படி?
சென்னை: போதை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், அதே வழக்கில் கைதாகி சிறைக்கு வந்துள்ள நடிகர் கிருஷ்ணாவை பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொகைன் எனும் போதைப் பொருளை வாங்கிப் பயன்படுத்தியதுடன் அதை விற்பனை செய்ததாகவும் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலில் அவர் தனக்கும் போதைப் பொருளுக்கும் தொடர்பில்லை என மறுத்த நிலையில், அவருடைய ரத்த மாதிரியைச் சோதனை செய்தபோது அவர் கொகைன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் நடிகர் கிருஷ்ணாவும் இந்த வழக்கில் கைது செய்யப்படுவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அவருக்குச் சம்மன் அனுப்பியபோது ஆஜராகாமல் திடீரென இரண்டு நாட்கள் தலைமறைவானார். பிறகு தனது வழக்கறிஞர்களுடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
விசாரணை
அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, போதைப் பொருட்களை உட்கொள்ளும் அளவுக்குத் தனது உடல்நிலை இல்லை எனத் தெரிவித்தார். எனினும், ரத்த மாதிரி எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, ரத்த மாதிரியில் போதைப் பொருள் எதுவும் இல்லை என முடிவுகள் வந்துவிட்டன.
நிம்மதி
இதனால் சற்று நிம்மதியடைந்த நிலையில், கிருஷ்ணா அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளில் கொகைன் இல்லை என வந்த முடிவுகளை வழக்கறிஞர்கள் மேற்கோள்காட்டியும் போலீஸார் அவரை விடவில்லை.
புழல் சிறை
இதையடுத்து, அவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கிருஷ்ணா புழலுக்கு வந்ததை அறிந்த ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவைப் பார்த்துப் பேச அனுமதி கேட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, 'பப்ளிக் விங்' எனும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "கிருஷ்ணா புழல் சிறைக்கு வந்ததை அறிந்த நடிகர் ஸ்ரீகாந்த், அவரைப் பார்க்க வேண்டும் எனப் போலீஸாரிடம் அனுமதி கேட்டாராம்.
வழக்கு விசாரணை
ஆனால், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாலும், இருவரும் ஒரே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாலும் போலீஸார் அதற்கு அனுமதி வழங்கவில்லை. கைது செய்யப்பட்டபோது ஸ்ரீகாந்த் மிகவும் இறுக்கமாக இருந்தார்.
முதல் நாள் சிறை
முதல் நாள் சிறையில் கூட அவரால் தூங்க முடியாமல், சாப்பிட முடியாமல் தவித்ததாகச் சொல்லப்படுகிறது. அடுத்த நாள், போலீஸாரிடம் தனக்குப் படிப்பதற்குப் புத்தகங்களும், நியூஸ்பேப்பர்களும் தேவை எனக் கேட்டுள்ளார். அதுபோல், ஸ்ரீகாந்த் விசாரணைக் கைதி என்பதால் அவர் சிறைக்குள்ளேயே காலாற நடப்பதற்கு அனுமதி உள்ளது.
சகஜ நிலை
அவ்வாறு அவர் சாதாரணமாக நடந்து சென்று மற்ற கைதிகளிடம் பேசுகிறாராம். கிருஷ்ணாவைப் பொருத்தமட்டில் அதுபோல் சகஜ நிலைக்கு அவர் வரவில்லை என்கிறார்கள். எப்போது சிறையிலிருந்து வீட்டுக்குச் செல்வோம் என யோசித்து வருகிறாராம்.
கெவின்
கெவின், பிரசாத் என்பவர்கள் கைதான போதிலிருந்தே கிருஷ்ணா, ஸ்ரீகாந்தை போலீஸார் நோட்டமிட்டு வந்தனர். அவர்களது நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தனராம். கெவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது கிருஷ்ணாவுக்குத் தெரியாதாம்.
வாட்ஸ் ஆப் உரையாடல்
ஆனால், தான் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தவுடன் அவர் இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்து கொண்டு, 2020ஆம் ஆண்டு முதல் போதைப் பொருள் கும்பலுடனான வாட்ஸ்அப் உரையாடல்களை டெலிட் செய்தார்.
கோட்வேர்டு
மேலும் பலருடன் கோட்வேர்டில் பேசியுள்ளார். கிருஷ்ணாவுக்கு ஒரு காலத்தில் போதைப் பொருள் பழக்கம் இருந்தது. ஆனால், உடல்நிலை பாதிப்பால் மருத்துவர்கள் மது கூட குடிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவர் தான் பயன்படுத்தாவிட்டாலும் பிறருக்கு விற்பனை செய்து வந்ததாக போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்தது.
கிருஷ்ணா ஒப்புக் கொள்ளவில்லை
எத்தனையோ முறை கிருஷ்ணாவைக் கேட்டுப் பார்த்தும் அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. தனது ரத்த மாதிரியில் கொகைன் இல்லை என வந்துவிட்டது, தாமும் வாட்ஸ்அப் உரையாடல்களை அழித்துவிட்டோம் என நிம்மதியாக இருந்தபோதுதான் போலீஸார் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு அழித்த மெசேஜ்களை எல்லாம் வாங்கினார்களாம்.
கிருஷ்ணா கைதானது எப்படி
அப்போது கூட எதை எதையோ சொல்லி கிருஷ்ணா சமாளித்துள்ளார். தனக்கு உடல்நிலை ஒரு மாதிரி இருக்கிறது, வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றாராம். அந்த இடத்திற்கு கெவினை அழைத்து வந்ததும் கிருஷ்ணா அதிர்ச்சியாகிவிட்டாராம். பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications