தந்தையர் தினத்தில் மறைந்த நடிகர் நேத்ரன் பற்றி மகள் உருக்கமான பதிவு.. இந்த அன்புக்கு ஈடு இல்லை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியல், பாக்கியலட்சுமி சீரியல் உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் நேத்ரன் கடந்த வருடத்தில் புற்றுநோயால் காலமானார். அவருடைய இறப்பிற்கு பிறகு அவருடைய மகள் நடிகை அபிநயா நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய தந்தை குறித்து உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அண்ணனாக நடிகர் நேத்ரன் நடித்திருந்தார். அவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் திரும்பி இருந்தார். சீரியலில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.

நிறைவேறாத கனவு
எப்படியாவது சினிமாவில் சாதித்து காட்ட வேண்டும் என்ற கனவோடு இருந்த நேத்ரன் புற்றுநோய் பாதிக்கப்பட்டு காலமானார். உடல் நலனில் அவ்வளவு அக்கறை கொண்டிருந்த நேத்ரன் இறக்கும் சமயத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து தலைமுடி எல்லாம் கொட்டி போயிருந்தது. ஆனாலும் தன்னுடைய நண்பர்களிடம் தான் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவேன் என்று தைரியமாக சொல்லி இருந்தார் என்று அவருடைய நண்பர்கள் பலரும் கண் கலங்க பேசி இருந்தனர்.
காதல் திருமணம்
அதுபோல நேத்திரன் நடிகை தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தீபாவும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண் சீரியல் உட்பட பல சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் அபிநயா சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கிறார். கனா காணும் காலங்கள் வெப்சீரிஸில் நடித்திருந்தார்.
நடிகை அபிநயா பதிவு
அதுபோல தன்னுடைய தந்தை நேத்ரனுடன் சேர்ந்து பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி இருக்கிறார். இந்த நிலையில் நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய தந்தை குறித்து அவரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமான பதிவு வெளியிட்டிருந்தார். அதில்,, "எங்கிருந்து தொடங்குவது..? உன் கண் முன்னே எல்லாவற்றையும் உன்னிடம் கொண்டு வர நான் எப்போதும் சொன்னதை செய்தேன்.
பல கனவுகள்
எல்லா கனவுகளை அடைய நீ என் அருகில் இருப்பது, உன் கண்களால் எல்லாவற்றையும் எனக்கு காட்ட இனி நடக்காது என்று எனக்கு தெரியும். ஆனால் நீ கனவு கண்ட அனைத்தையும் நான் செய்வேன் என்று எனக்கு தெரியும். அதில் என் அம்மா சகோதரி உட்பட நீ ஆழமாக எல்லாவற்றையும் பார்ப்பாய் என்றும் எனக்கு தெரியும். அதாவது உன் கண்களால் எல்லாவற்றையும் பார்ப்பீங்க அப்பா. நீ என் அருகில் நின்று வானத்தில் மேலிருந்து விஷயத்தை பார்த்து நமக்கான விஷயங்களை செய்வாய் என்று எனக்கு தெரியும்.
அப்பாவின் பாசம்
நமக்கு பல கனவுகள் இருந்தன, ஆனால் நீ மிகவும் சீக்கிரமாய் சென்று விட்டாய். அது எதிர்பாராதது... நீ என் அப்பா, என் குழந்தை, சில சமயங்களில் என் நண்பன். ஆனால் மிகவும் கண்டிப்பானவர். ஆனால் எங்களை சரியான பாதையில் வழி நடத்திய ஒரு குரு. பல இடங்களில் உன்னை மிஸ் செய்கிறேன். சரியான முடிவுகளை எடுக்கும் போது உங்களை பார்க்கிறேன். சரி சரி போதும் அப்பா வாழ்க்கையே அதுதான்...
நடன திறமை
நீங்க இந்த உலகத்தை விட்டு போக தயாராக இல்லன்னு எனக்கு தெரியும். ஆனால் நீங்க இப்போ எங்க இருக்கீங்கன்னு எனக்கு தெரியல. ஆனாலும் எங்க இருந்தாலும் சந்தோஷமா நிம்மதியா இருக்கணும் அதான் நான் ஆசைப்படுகிறேன், சரியா அப்பா?. உங்க சிரிப்பு, உங்க குரல், நீங்க திட்டுவது, உங்க ஜோக்ஸ், டான்ஸ் பாட்டு எல்லாருமே நாங்க மிஸ் பண்ணுறோம். நீங்க எனக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்ததை நான் எப்பவும் மறக்க மாட்டேன். ஆனால் நான் என்ன பண்றது உங்க திறமைக்கு முன்னாடி நான் ஒன்னும் இல்ல.

தந்தையர் தின வாழ்த்து
இப்போ ரொம்ப ரொம்ப உங்களை மிஸ் பண்றோம். நான் எப்பவும் ரெடியாயிடுவேன். குறிப்பாக நான் சேலை உடுத்தும் போது நீங்க தான் முதல் ஆளாக என்னை பாராட்டினீங்க. நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னாரு. எப்போதும் அழகு என் தங்கம்னு சொல்லுவாரு. லவ் யூ அண்ட் ஹாப்பி ஃபாதர்ஸ் டே டாடி. மன்னிக்கவும் நீங்கள் விரும்பியபடி நான் உங்களிடமிருந்து விடைபெற மாட்டேன் நீங்கள் இன்னும் இங்கே இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் என்று அந்த பதிவில் அபிநயா உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications