செம ஸ்டைலாக மாறிய கயல் ஆனந்தி.. பழைய காதல் மீண்டும்! அவரே போட்ட போஸ்ட்.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: கயல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் ஸ்டைலாக இருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறந்து விட்டது என்று சொன்னால் நம்ப முடியவில்லை என்று கமெண்ட் கொடுக்கிறார்கள்.
ஒரு சில நடிகைகளை பார்க்கும்போது ஏதோ நன்கு பரீட்சையமானவர் போலவும், பக்கத்து வீட்டு பெண் போலவும் இருப்பார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகை கயல் ஆனந்தி. திரைப்படங்களில் ஹோம்லியான கேரக்டர் என்றாலே இந்த நடிகை தான் பெஸ்ட் என்று சொல்லும் வரிசையில் கயல் ஆனந்தியும் இடம் பிடித்திருக்கிறார்.

சினிமாவில் அறிமுகம்
இவர் முதல் முதலில் தெலுங்கு சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வந்த பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். அந்த திரைப்படம் அவருக்கு தெலுங்கில் பிரபலத்தை கொடுத்தது. அதற்குப் பிறகு தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது 2014ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பொறியாளர் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
ஹோம்லியான நடிகை
அந்த திரைப்படத்தில் ஆனந்திக்கு ஜோடியாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். அதை தொடர்ந்து அவர் நடித்த கயல் திரைப்படம் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனார். அந்த திரைப்படத்தில் பாவாடை சட்டையோடு எளிமையாக இருக்கும் ஆனந்தியை பார்த்து பல ரசிகர்கள் அவருக்கு ஃபேன்ஸ் ஆக மாறிவிட்டார்கள். அப்போது யார் இந்த பெண் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது.

கயல் ஆனந்தி நடித்த படங்கள்
உதட்டுக்கு கீழே சின்னதாக ஒரு மச்சம், முகத்தில் எப்போதும் எளிமையான ஒரு புன் சிரிப்பு இவருக்கு ஒரு அடையாளமாக இருந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனந்தி திருமணம்
அப்போதுதான் அவருக்கு பரியேறும் பெருமாள் பட வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் இவருக்கு கயல் திரைப்படத்தை போலவே பெரிய பெயர் வாங்கி கொடுத்தது. அந்த நேரத்தில் ஆனந்தி சாக்ரடீஸ் என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஒரே வருடத்திற்குள் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

ஜாதியற்றவர் சர்டிபிகேட்
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதுபோல குழந்தைக்காக கயல் ஆனந்தி செய்த செயலும் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது தன்னுடைய மகனுக்கு NO caste என்ற சான்றிதழ் வாங்கி இருந்தார். இது குறித்து அவர் அப்போது பேசும்போது அந்த புரிதல் எனக்கு மட்டுமில்லை என்னுடைய கணவருக்கும் வீட்டிலுள்ள அனைவருக்கும் இருக்கு. அதனால் தான் நாங்கள் எங்களுடைய மகன் எந்த ஜாதியும் அற்றவர் என்ற சர்டிபிகேட் வாங்கி இருக்கிறோம் என்று பேசி இருந்தார்.
அதுபோல தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகமான லைக் பெற்று வருகிறது.

கயல் ஆனந்தி போஸ்ட்
அதாவது ஸ்டைலாக இவர் ரோட்டில் நடந்து வருவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு "எனக்கு புதிய பூக்களையும்.. பழைய காதலையும் கொடுங்கள்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதில் அதிகமான ரசிகர்கள் ஹார்டின் பறக்க விட்டு வருகிறார்கள். அதுபோல அதிகமான ரசிகர்கள் மீண்டும் கயல், பரியேறும் பெருமாள் போன்ற அழுத்தம் உள்ள திரைப்படங்களில் நடிங்க என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications