ஆண்ட்ரியா யாருன்னு தெரிஞ்சும் எனக்கு அது நடந்தது! வீட்டு ஓனரின் இன்னொரு முகம்.. எமோஷனல் வார்த்தை
சென்னை: நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது தனக்கு வீடு வாங்குவதற்காக போன இடத்தில் நடந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சிலர் இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை அந்த பேட்டியில் ஆண்ட்ரியா கூறி இருக்கும் நிலையில் அது இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நடிகை ஆண்ட்ரியாவிற்கு அறிமுகமே தேவை இல்லை. திகில் படமாக இருந்தாலும் சரி காதல் படமாக இருந்தாலும் சரி ஆண்ட்ரியாவின் நடிப்பு இளம் ரசிகர்களை கட்டி இழுத்து வருகிறது. அதிலும் அவருடைய மென்மையான குரல் மூலம் பல பாடல்களை பாடி பலருடைய மனதையும் துள்ள வைத்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலமாக பெரிய அளவில் பிரபலமடைந்தார். அதற்கு முன்பு ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தான் நடித்திருந்தார். ஆனால் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலம் அடைய தொடங்கிய ஆண்ட்ரியா அதற்குப் பிறகு கெத்தான கேரக்டரில் நடித்து வருகிறார்.
அதிலும் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, வடசென்னை, விஸ்வரூபம், அரண்மனை போன்ற படங்கள் எல்லாம் ஆண்ட்ரியாவை ரசிகர்களின் மனதில் பதிய வைத்தது. அதோடு அவர் அந்நியன் படத்தில் பாடிய கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலில் தொடங்கி பட பாடல்கள் அவருடைய மேஜிக்கல் குரலால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது நான் எப்போதும் மாடர்ன் டிரஸ் போடுவதுதான். ஆனால் ஒரு சில இடங்களுக்கு போகும் போது சல்வார் போட்டுட்டு போவேன். ஒரு முறை நான் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்க வேண்டும் என்று சிலரை சந்திக்க போயிருந்தேன். அந்த நேரத்தில் மாடர்ன் டிரஸ் போட்டுட்டு போயிருந்தேன். ஆனால் மீட்டிங் அங்கு போய்க் கொண்டிருந்தது எனக்கு சரியாக படவில்லை. ஏதோ ஒரு தப்பு இருப்பது போலவே எனக்கு இருந்தது. அங்கிருந்தவர்களின் பார்வையும் சரியில்லை.
அது பற்றி நான் அங்கே விசாரித்த போது நீங்கள் சல்வார் போட்டுட்டு இங்கே வந்திருக்கலாம் என்று சொன்னார்கள். எனக்கு புரியவில்லை.., நான் சொந்தமாக என்னுடைய பணத்தை கொடுத்து வீடு வாங்க போகிறேன். ஆனால் நான் எந்த உடை போட்டு இருந்தால் இவர்களுக்கு என்ன? போன விஷயத்தை மட்டும் பேசாமல் என்னை பற்றி நான் போட்டிருக்கும் உடையை பற்றி அவர்கள் பேசியது எனக்கு கடுப்பை ஏற்படுத்தியது.
இந்த சமுதாயத்தில் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் ஆண்கள் எப்படி பார்த்தாலும் பெண்களின் கட்டுப்பாடு முக்கியம் என்ற ஒரு மாயை இருக்கிறது என்று அதில் பேசி இருக்கும் நிலையில் ஆண்ட்ரியா பேசிய இந்த கருத்து இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஒரு சிலர் இது சரி என்று சொல்லி வந்தாலும் அதிகமானோர் ஆண்ட்ரியா பொது இடத்திற்கு செல்லும் போது உடை நாகரீகம் வேண்டும், இவர் இப்படி சொல்லி இருப்பது தவறு என்றும் விமர்சித்து வருகிறார்கள்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications