அவங்க சொல்றது பொய்! உண்மை இதுதான்! கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகா உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் தீபா கேரக்டரில் நடித்து வந்த நடிகை அர்த்திகா தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தான் சீரியலில் இருந்து விலகியது எதற்காக என்பது பற்றி அவதூறு பரப்பி வருகிறார்கள், ஆனால் உண்மை இதுதான் என்று அவர் பகிர்ந்து இருக்கிறார்.

ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியல் நல்ல டிஆர்பியில் ஓடி வந்தது. ஆனால் திடீரென்று இந்த சீரியலில் கதாநாயகி இறந்து போவது போன்ற காட்சிகள் வைத்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த சீரியலில் திடீரென்று இரட்டை வேடத்தில் கதாநாயகியை களம் இறக்கினர். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

television karthikai deepam serial arthika

கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இந்த கதை பயணிக்கிறது என்று தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கதாநாயகி தீபா இறந்து போவது போன்று காட்சிகளை வைத்து விட்டு சீரியலை அப்படியே விட்டுவிட்டு புதியதாக கார்த்திகை தீபம் சீரியல் கிராம பின்னணியில் ஒளிபரப்பாக போகிறது என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்கான ப்ரோமோக்களும் வெளியாகிவிட்டது.

அதே நேரத்தில் இந்த சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை அர்த்திகா பற்றியும் சில வதந்திகள் பரவி வந்தது. அர்த்திகாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. அதனால் அவர் திருமணத்திற்கு பிறகு இந்த சீரியலில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் தீபா கேரக்டர் இறப்பது போன்று காட்டிவிட்டார்கள் என்று சிலர் வதந்தி பரப்பி வந்தனர்.

சில youtube சேனல்களில் இது பற்றி செய்திகள் வந்ததை தொடர்ந்து இது குறித்து அர்த்திகா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில், நான் திருமணத்திற்கு பிறகு நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டதால் சீரியலில் கதையை மாற்றி விட்டார்கள் என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். அது உண்மை கிடையாது.

நான் எந்த இடத்திலும் அப்படி சொல்லவில்லை. நான் என்னுடைய கேரக்டருக்கு என்ன செய்யணுமோ அதை செய்வேன். எந்த இடத்திலும் முடியாது என்று சொன்னது கிடையாது. அதுபோல சிலர் நான் கர்ப்பமாக இருக்கிறேன் அதனால் சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று சொல்கிறார்கள். அதுவும் உண்மை கிடையாது.

நான் கர்ப்பமாக இருந்தால் கண்டிப்பாக ரசிகர்களிடம் அதை பகிர்ந்து கொள்வேன். அதுபோல சீரியலில் இருந்து அதற்காக விலகவும் மாட்டேன் என்று கூறி இருக்கிறார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலில் அவர் காட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டதால் அவர் விகடன், விஜய் டிவி காம்பினேஷனில் புது சீரியலில் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் பரவி வந்தது. அதையும் அவர் மறுத்திருக்கிறார்.

நான் சன் டிவி, விஜய் டிவியில் புது சீரியலில் நடிக்கப் போகிறேன் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் எனக்கு அப்படி எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. சில சீரியல்களுக்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. எதுவும் இன்னும் இறுதியாகவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

அதுபோல இந்த சீரியலின் கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை சீரியல் அணியினரின் முடிவு தான். இந்த சீரியலில் என்னுடைய காட்சிகள் இல்லை என்பதால் நானும் ரொம்பவே ஃபீல் பண்ணுகிறேன். சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோரும் என்னிடம் ரொம்பவும் பாசமாக இருந்தார்கள். அவர்களை எல்லாம் நான் மிஸ் பண்ணுகிறேன்.

நடிகர்கள் மட்டுமல்லாமல் அந்த சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் எல்லா கலைஞர்களும் அவ்வளவு பாசமாக நடந்து கொள்வார்கள். அது போல என்னுடைய காட்சிகள் முடிய போகிறது என்று எனக்கே சில நாட்களுக்கு முன்புதான் தெரியவரும். இறுதி காட்சியில் நான் நடிக்கும் போது ரொம்பவும் பீல் பண்ணினேன் என்று பல விஷயங்களை அவர் பகிர்ந்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+