கற்பு முக்கியம்.. ஆனால்! என்னை பிளான் பண்ணி ஏமாத்திட்டாங்க.. அந்த நடிகை தான்.. புவனேஸ்வரி எமோஷனல்
சென்னை: நடிகை புவனேஸ்வரி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வுகள் மற்றும் தங்களுக்கு பிடித்த நடிகை பற்றி பல தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆக இருந்த நிலையில் இப்போது அதிகமாக தமிழில் நடிக்காததற்கு காரணத்தை பற்றியும் புவனேஸ்வரி பேசியிருக்கிறார்.
சிலருடைய சூழ்ச்சியால் விபச்சார வழக்கில் தான் கைது செய்யப்பட்டதால் தனக்கு ஏற்பட்ட மன குழப்பங்கள் பற்றி புவனேஸ்வரி பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஜொலித்த நடிகர் நடிகைகள் அதிகமானோர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் நடிகை புவனேஸ்வரி. இவர் ஆரம்பத்தில் விளம்பர மாடலாக இருந்து பின்பு சீரியலில் நடிக்க தொடங்கி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது.
சீரியலில் இவருக்கு பெரிய அளவில் பிரச்சனை இல்லாமல் வாய்ப்பு கிடைத்து விட்டாலும் திரைப்படத்தில் இவருடைய திறமையை நிரூபிப்பதற்கு ஒரு சில வாய்ப்புகள் தான் கிடைத்திருக்கிறது. நடிகை புவனேஸ்வரி முதல் முதலாக 2015 ஆம் ஆண்டு பாசமலர் என்கிற சீரியலில் சன் டிவியில் நடித்து வந்திருக்கிறார்.
அதற்கு பிறகு சந்திரலேகா, ஒரு கை ஓசை, ராஜராஜேஸ்வரி, தெக்கத்தி பொண்ணு, சித்தி போன்ற பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவருக்கு பாய்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாய்ஸ் திரைப்படத்தில் ஒரு விபச்சார பெண்ணாக இவர் நடித்திருப்பார்.
அந்த கேரக்டரில் இவர் நடிக்கும் போது முதலில் ரொம்பவே யோசித்தாராம். இது முதல் முதலாக நடிக்கும் திரைப்படமே நமக்கு இந்த மாதிரி கேரக்டராக இருக்கிறதே என்று இவர் நினைத்தாராம். அப்போது இயக்குனர் சங்கர் தான். இந்த திரைப்படத்தில் நீ நம்பி நடிக்கலாம் நான்கு ஆண்களோடு நீ நடிச்சாலும் உன்னுடைய உடம்பில் அவர்களுடைய விரல் நுனி கூட படாது என்று கூறியிருக்கிறார். அதை நம்பி அந்த திரைப்படத்தில் நடித்தேன். அதுபோல ரசிகர்களின் மத்தியிலும் நான் பிரபலமானேன் என்றும் புவனேஸ்வரி கூறியிருக்கிறார்..

அதுமட்டுமல்லாமல் நடிகை புவனேஸ்வரிக்கும் சர்ச்சைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் பற்றி ஆரம்பத்தில் அதிகமான சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், அதற்கெல்லாம் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் நடிகை புவனேஸ்வரி 2009இல் விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதாக தகவல்கள் அந்த நேரத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தான் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டதால் சிலருடைய சூழ்ச்சிகளால் தான் தன்னைப் பற்றி அதிகமான சர்ச்சைகள் வந்தது என்று அப்போது நடிகை புவனேஸ்வரி விளக்கமும் கொடுத்திருந்தார். அப்போது தன் மீது சுமத்தப்பட்ட பழி வீண் சதி என்றும் என் மீது தவறான வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் வாதாடி அந்த வழக்கிலிருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார்.
அப்போது கற்பு என்பது புனிதமானது. மார்டன் உலகில் பெண்களுக்கு அது புரியவில்லை. என்ன பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு என் பெயரை சிலர் கெடுத்து விட்டனர். அது எனக்கு மன உளைச்சலை கொடுத்து இருந்தது. அதனாலேயே நான் அதிகமாக தமிழ் படங்களில் இப்போது நடிக்கவில்லை.
தெலுங்கு படங்களில் மட்டுமே நடிக்கிறேன். எனக்கு சரோஜா தேவியை ரொம்பவே பிடிக்கும். ஆனால் அவருக்கு கிடைத்தது போன்ற வேடம் எனக்கு கிடைக்கவில்லை. பல கஷ்டங்களை தாண்டி நான் நின்றதற்கு காரணம் என்னுடைய அம்மா தான். அது போல நான் சமைப்பது எல்லோருக்கும் பிடிக்கும். அனாதை குழந்தைகள், வயதானவர்கள் என பலருக்கும் நான் இப்போது உதவி செய்து வருகிறேன். சினிமாவில் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும்.
யாரையும் நம்பி வரக்கூடாது. என் மீது சுமத்தப்பட்ட புகார்கள் என் மனதை மிகவும் பாதித்தது. அதனால நான் நிறைய கஷ்டப்பட்டேன் என்று அந்த பேட்டியில் புவனேஸ்வரி பேசியிருக்கிறார். சரோஜாதேவி போல ஆசைப்பட்ட நான் இப்போது எனக்கு கிடைத்த வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications