கூமாம்பட்டி தங்கபாண்டியின் ஜோடி சாந்தினி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுவாரசியமான ரியாலிட்டி நிகழ்ச்சியான 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில், பிரபல சீரியல் நடிகை சாந்தினி தன் சொந்த வாழ்க்கை குறித்த சோகமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட வீடியோ, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக, நகைச்சுவையாகவும், ஜாலியாகவும் செல்லும் இந்த மேடையில், சாந்தினி கண்ணீர் சிந்திய சம்பவம், ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீரியல் உலகின் பரிச்சய முகம் சாந்தினி
நடிகை சாந்தினி, சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். சன் டிவியில் ஒளிபரப்பான 'வானத்தைப்போல' சீரியலில், வில்லிக்கும் நாயகிக்கும் இடைப்பட்ட ஒரு குழப்பமான கதாபாத்திரத்தில் மாறி மாறி நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அதேபோல, சமீபத்தில் விஜய் டிவியில் ஹிட் அடித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் சுகன்யா என்ற கதாபாத்திரத்திலும் இவர் நடித்து வருகிறார். பெரும்பாலும், இவருக்கு வில்லி கதாபாத்திரங்களே கிடைத்து வந்தாலும், இவரது முகத்தில் எந்தச் சோகமும் தெரியாமல் துடிப்புடன் இருப்பார். ஆனால், இப்போது முதல்முறையாக, தனது சோகத்தை 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
சிங்கிள் பசங்க நிகழ்ச்சி மற்றும் கூமாம்பட்டி தங்கபாண்டி
'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சி, திருமணம் ஆகாத, தனியாக வாழும் பிரபலங்கள், தங்களுக்கு ஏற்ற துணையைத் தேடும் பயணத்தை மையமாகக் கொண்டது. இந்த நிகழ்ச்சியில், கலகலப்புக்குக் குறைவில்லாமல் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் தான், கிராமத்து பின்னணியைக் கொண்டவரும், நகைச்சுவை நடிகருமான கூமாம்பட்டி தங்கபாண்டி. இவர் தனது இயல்பான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், தங்கபாண்டியின் ஜோடியாக சாந்தினி பங்கேற்றுள்ளார்.
அப்பா பாசத்திற்காக ஏங்கிய சாந்தினி
கடந்த வாரம், 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் 'என் வீட்டைப் பார், என்னைப் பிடிக்கும்' என்ற தலைப்பில் ஒரு சுற்றை வைத்திருந்தனர். இதில், பிரபலங்கள் தங்கள் ஜோடியை, சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று, தங்கள் வாழ்க்கைச் சூழலைப் பற்றிப் பகிர்ந்துகொண்டனர். அதன்படி, கூமாம்பட்டி தங்கபாண்டியின் வீட்டிற்குச் சாந்தினி சென்றிருந்தார்.
அங்கு, கூமாம்பட்டி கிராமத்தினர் சாந்தினிக்கு மிகப் பெரிய வரவேற்புக் கொடுத்ததோடு, அவரிடம் பாசமாகவும் நடந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக, தங்கபாண்டிக்காக, அவரது அப்பா அழுதது, சாந்தினியை மிகவும் எமோஷனலாக்கி இருந்தது. இந்த வாரம் மேடையில் பேசிய சாந்தினி, "எனக்கு கூமாபட்டி தங்கபாண்டியன் அப்பா அழுததைத் தான் ஏற்றுக்கொள்ளவே முடியல" என்று கண்கலங்கினார்.
உடைந்து போன சோகக் கதை
தனது சோகமான இளமைக்காலத்தைப் பற்றிப் பேசிய சாந்தினி, "நான் சின்ன வயதில் இருக்கும்போது, எங்களுக்கு அப்பா பாசமோ, அம்மாவின் அரவணைப்போ சரியாகக் கிடைக்கவில்லை. என்னுடைய அப்பாவும் அம்மாவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டாலும், அப்பா குடித்துவிட்டு வந்து அம்மாவை அவ்வளவு சித்திரவதைப்படுத்தியிருக்கிறார். இதனால், என்னையும் என் தங்கச்சியையும் ஹாஸ்டலில் விட்டுட்டாங்க. என்னுடைய அம்மாவும் அப்பாவும் தனித்தனியாகக் கல்யாணம் பண்ணிட்டுப் போய்ட்டாங்க."
அவர் மேலும் கூறுகையில், "பொதுவாக அம்மா ரொம்பப் பாசமா இருப்பாங்க, தியாகமா இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா, என்னுடைய அம்மா ரொம்ப 'செல்ஃபிஷ்ஷா (சுயநலமாக) இருந்தாங்க. என்னுடைய அப்பாவும் சரி, அம்மாவும் சரி அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்த்துகிட்டாங்க. பிள்ளைகளை எப்படி போனா என்னன்னு விட்டுட்டாங்க."
தனது கடினமான உழைப்பைப் பற்றிப் பேசிய அவர், "நான்தான் என்னுடைய ஃபீஸ் (கட்டணம்) மற்றும் என்னுடைய தங்கச்சியின் ஃபீஸுக்கும் கஷ்டப்பட்டு கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தது. நான் இந்த இடத்தில் வந்திருக்கேன்னா, அது என்னுடைய நேர்மையான உழைப்பால் தான்" என்றார்.
"நான் காலேஜ், ஸ்கூல் படிக்கும்போதெல்லாம், பல நாள் ஏங்கியிருக்கிறேன். என்னுடைய அப்பா என்னைக் காரில் கொண்டுவிட வேண்டும், அப்பா அம்மா பாசத்துடன் ஸ்கூல் காலேஜுக்குக் கூட்டிட்டு வரணும்னு நான் ஆசைப்பட்டேன். ஆனால், அது எதுவுமே நடக்கல" என்று கண்ணீருடன் பேசினார். தங்கபாண்டிக்காக அவரது அப்பா அழுதது பார்த்ததும் தனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று அவர் மேடையில் அழுதபோது, அங்கிருந்த சக போட்டியாளர்களும், நடுவர்களும் சாந்தினிக்கு ஆறுதல் கூறி, அவருக்கு ஆதரவளித்தனர். இந்த நெகிழ்ச்சியான வீடியோ, சின்னத்திரை பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் போராட்டங்களை உணர்த்தி, ரசிகர்களை உலுக்கியுள்ளது.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications