"ஜாதியை எப்போ விடுறோமோ அப்போதான் மனுஷனா இருப்போம்!" திருமாவளவன் முன்பு நடிகை தீபா அதிரடி பேச்சு
சென்னை: தென்னிந்திய திரையுலகில் தன் இயல்பான நடிப்பாலும் மற்றும் வெளிப்படையான பேச்சுக்காகவே அடிக்கடி பேசுபொருளாகும் நடிகை தீபா, இப்போது மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த மக்கள் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற "ஆறறிவு" திரைப்பட விழாவில் அவர் பேசிய வீடியோ தான், சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கேரக்டராகவே வாழும் நடிகை
நடிகை தீபா, சின்னத்திரையில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி என்ற சீரியலில் தொடங்கி, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'பாரிஜாதம்' சீரியல் வரை, தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அப்படியே ஒன்றிவிடுவார்.
தத்ரூப நடிப்பு
ஒரு தாயாகட்டும், குடும்பத் தலைவியாகட்டும்... அந்தந்த கேரக்டராகவே மாறிவிடுவது இவரின் தனிச்சிறப்பு. இதனால், சின்னத்திரை ரசிகர்கள் இவருக்கு ஒரு தனி ஃபேன் பேஸையே வைத்திருக்கிறார்கள்.
ஆறறிவு மேடையில் அதிரடி பேச்சு
சமூகப் பிரச்சினைகள் குறித்த தன்னுடைய நேர்மையான கருத்துகளை வெளிப்படுத்துவதில் தீபா ஒருபோதும் தயங்குவதே இல்லை. அந்த வகையில், "ஆறறிவு" திரைப்பட விழாவில் அவர் பேசிய பேச்சின் வீரியம், அங்கிருந்தவர்களைச் சற்றே மௌனமாக்கியது. விழாவில் தீபா பேசும்போது, "எனக்கு எந்தத் தலைவரும், எந்த ஜாதியும் முக்கியம் இல்ல. ஒருத்தர் மேல அன்பு வந்தால் அதைத் தப்புனு சொன்னா நீதான் தப்பு" ஜாதி பெயரை சொல்லி ஒரு உயிரை எடுக்கிறது எவ்வளவு பெரிய தப்பு? நீங்க எத்தனை கொடுமை செஞ்சாலும் காதல் எப்போதும் சாகாது என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
சாதிப் பிரச்சனை
மேலும், நாட்டில் நிலவி வரும் சாதிப் பெருமைகளையும், அதன் பெயரால் நடக்கும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டி, "ஜாதி பெயரைச் சொல்லி ஒரு உயிரை எடுக்கிறது தப்பு என்று ஆதங்கப்பட்டு கொண்டார். அதோடு சாதிப் பிரிவினையால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், காதலின் பெயரால் நடக்கும் கொலைகள் ஆகியவற்றைப் பற்றி மனம் திறந்த அவர், சமுதாயத்தில் நிலவும் கொடுமைகளைச் சாடினார்.
சமூக மாற்றம்:
"ஜாதியை எப்ப நாம விடுறோமோ, அப்ப தான் நாம மனுஷரா இருப்போம். அதுக்குத் தான் ஜாதிக்கு எதிரான படங்கள் வந்திட்டே இருக்கு... அதை பார்த்தாவது திருந்தட்டும்..." என்ற அவரது வார்த்தைகள், சாதி வெறிக்கு எதிரான ஒரு போர்க்குரலாக ஒலித்தன.
தீபாவின் இந்தக் கருத்துகள் நிகழ்ச்சியில் இருந்த அனைவரையும் சில நொடிகள் சிந்திக்க வைத்தது. நிகழ்ச்சியின் பேச்சைக் கேட்ட பலரும், அவரது துணிச்சலுக்கும், சமூகத்தின் மீதான அக்கறைக்கும் தற்போது இணையத்தில் பாராட்டுகளைத் தெரிவித்து, அந்த வீடியோவை தீயாய்ப் பரப்பி வருகின்றனர். ஒரு நடிகையாக மட்டுமின்றி, ஒரு சமூக அக்கறை கொண்ட மனுஷியாகவும் தீபா மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொல் திருமாவளவன் மற்றும் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் போன்றோரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications