Devayani: சிங்கம் சூர்யாவிற்கு தேவயானியால் வந்த சோதனை! ராஜகுமாரன் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: தமிழ் சினிமாவில் 90ஸ்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை தேவயானி. தனது குடும்பப் பாங்கான தோற்றம், அமைதியான குணம் மற்றும் இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவர். இவரும், இயக்குநர் ராஜகுமாரனும் காதலித்து கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு இனியா, ப்ரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மகள் இனியா அற்புதமான பாடல் திறமை கொண்டவர்.
இந்நிலையில், தனது மனைவி தேவயானியின் குணாதிசயம் குறித்து ராஜகுமாரன் அண்மையில் ஒரு திரைப்பட விழாவில் பேசிய பேச்சு, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது.

தேவயானியின் அமைதி
நடிகை தேவயானியைப் பற்றிப் பேசும் போதெல்லாம், ரசிகர்கள் "அவரா? பாவம், ரொம்ப அமைதியானவர்" என்றுதான் சொல்வார்கள். "ராஜகுமாரன் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ, இப்படி ஒரு சாதுவான பெண் அவருக்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறார்" என்று ரசிகர்கள் அடிக்கடி புகழ்வதுண்டு.
இப்படி ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பாராட்டுக்கும் அமைதிக்கும் உதாரணமாகக் கருதப்படும் தேவயானி, உண்மையில் தன் கணவர் ராஜகுமாரனுக்கு வீட்டிற்குள் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்ற ரகசியத்தை, ராஜகுமாரனே மேடையில் உடைத்துள்ளார்.
ராஜகுமாரனின் வெளிப்படையான பேச்சு
சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் வெங்கட் ஹீரோவாக நடித்திருக்கும் 'வீரத்தமிழச்சி' பட விழாவில் இயக்குநர் ராஜகுமாரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தேவயானி குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
ராஜகுமாரன் சொன்னதை கேட்டவர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டார்கள். அவர் பேசுகையில், "பார்க்க புஷ்பம் மாதிரி இருக்கும் தேவயானி, அடித்தால் இரண்டு, மூன்று டன் இருக்கும். அந்த அளவுக்குச் சக்தி வாய்ந்தவர்" என்று வெளிப்படையாகப் பேசினார்.
சிங்கம் சூர்யாவிற்கு தேவயானியால் சோதனை
தேவயானியைப் பார்த்தால், யாரையும் அடிக்கும் ஆள் மாதிரி இல்லை. அதுவும் கணவரை அடிக்கும் அளவுக்குக் கோபப்படுவார் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவரே ஓங்கி அடிக்கிறார் என்றால், ராஜகுமாரன் அந்த அளவுக்கு ஏதோ செய்திருக்கிறார் என்று அர்த்தம் என ரசிகர்கள் ஜாலியாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம், நடிகர் சூர்யாவின் 'சிங்கம்' பட வசனத்தையும் நினைவுபடுத்தியது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த அந்தப் படத்தில், "ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா" என்று சொல்லி அடித்தார் சூர்யா.
ஆனால், ராஜகுமாரனோ தனது மனைவி தேவயானியின் அடியைப் பற்றிப் பேசும்போது, "தேவயானி ஓங்கி அடிச்சா மூன்று டன் வெயிட்" என்று சூர்யாவைவிட இரண்டு மடங்கு பவர் அதிகம் என்று சொல்லியிருக்கிறார். இதனால், "இது என்னப்பா சூர்யாவுக்கு வந்த சோதனை?" என்று சினிமா ரசிகர்கள் நகைச்சுவையாகத் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள், "எந்த வீட்டில் தான் சார் பொண்டாட்டி அடிக்கல? அதெல்லாம் எத்தனை டன் வெயிட்டாக இருந்தாலும் வலிக்காது. குடும்பத்திற்காகப் பொறுத்துக் கொண்டு போயிட வேண்டியது தான்" என்று ராஜகுமாரனுக்கு ஆறுதல் சொல்வது போலவும், தங்கள் அனுபவத்தைப் பகிர்வது போலவும் ஜாலியாகப் பதிவிட்டு வருகின்றனர்.

தேவயானியின் மகள் இனியாவைப் பார்த்து, "அம்மா வழியில் நீங்களும் ஹீரோயினாகிவிடுங்கள்" என்று ரசிகர்கள் பாராட்டும் நிலையில், வீட்டிற்குள் தேவயானி எவ்வளவு பவர்ஃபுல் என்பதைக் கணவர் ராஜகுமாரன் மூலம் தெரிந்துகொண்ட ரசிகர்கள், இப்போது அவரைப் பற்றிப் பேசும்போது சிரிப்புடன் கூடிய ஆச்சரியத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications