நம்பிக்கை ரொம்ப முக்கியம்.. ரிலேஷன்ஷிப்ல நான் செஞ்ச பெரிய தப்பு.. நடிகை கௌதமி ஓப்பன் அப்
சென்னை: நடிகை கௌதமி சமீபத்தில் ஒரு பேட்டியில் ரிலேஷன்ஷிப் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஏற்கனவே கௌதமி அவருடைய கணவரை பிரிந்த பிறகு சில வருடங்கள் தன்னுடைய குழந்தையோடு தனியாக இருந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் உடன் சேர்ந்து வாழ்ந்திருந்தார்.
ஆனால் திடீரென்று கமல்ஹாசனிடம் இருந்து பிரிந்து தன்னுடைய மகளோடு தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ரிலேஷன்ஷிப் குறித்து கௌதமி பேசி இருப்பது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

இந்த வகையில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்த கௌதமியை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. அதிகமான திரைப்படத்தில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். பிறகு சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் சில சீரியல்களிலும் கலந்து கொண்டிருந்தார்.
அதுபோல சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டிருந்தார். நடிகையாக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருக்கும் கௌதமி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் ரிலேஷன்ஷிப் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கறார். அப்போது அந்த பேட்டியில் கௌதமியிடம் நீங்கள் உங்களுடைய மகள் மீது அதிகமான பாசத்தை வைத்திருக்கிறீர்கள். அவர் தானே உங்கள் பலம் என்று கேட்க, அதற்கு கௌதமி உண்மையில் யாரும் யாருக்கும் பலமாக கிடையாது.
நீங்கள்தான் உங்களுடைய பலன். நீங்கள் மிகவும் சோகமாக இருக்கும்போது உங்களுக்கு பிடித்தவர்கள் அல்லது உங்களை மோட்டிவேட் செய்யக்கூடியவர்களின் வீடியோவை பார்ப்பீர்கள். இது நபருக்கு நபர் மாறுபடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விஷயங்கள் உத்வேகத்தை தரும். அவர்கள் அந்த விஷயத்தை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள்.
ஆனால் உண்மையில் அது உங்களுடைய பலன் கிடையாது. நீங்கள்தான் உங்களுடைய பலன். நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து அந்த ரிலேஷன்ஷிப் சரிவர ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் நீங்கள் அதற்குரிய முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய அம்மா, அப்பா, கணவர், மகன், மகள், காதலர் என எந்த விதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் சரி அந்த ரிலேஷன்ஷிப்பில் இருவருக்கும் இடையே ஒரு மையப்புள்ளியானது கண்டிப்பாக இருக்கும்.
அந்த மையப் புள்ளி வரை இருவரும் வந்து நீ பாதி வேலையை செய் நான் பாதி வேலையை செய் என்று இருக்க வேண்டும். ஆனால் சில பேருக்கு ஏதோ ஒரு காரணத்தால் அந்த மையப் புள்ளிக்கும் அவருக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கும். இங்கு நடக்கக்கூடிய தவறு என்னவென்றால் இன்னொரு பக்கம் இருக்கக்கூடிய அந்த குறிப்பிட்ட நபர் ஐயோ நீ இவ்வளவு தூரம் தான் கடந்து வந்திருக்கியா..? என்று கேட்டதும் அவர்களுக்காக எதிர்பக்கத்தில் இருப்பவர்கள் மையப் புள்ளியில் இருந்து இன்னும் கொஞ்ச தூரத்தை கடந்து அவர்கள் பக்கம் வருவார்கள்.
அப்படி நாம் போகும்போது எதிர் தரப்பில் இருப்பவர்களின் எதிர்பார்ப்புக்கு நம்மை பழக்கப்படுத்தி விடுகிறோம். அந்த சமயத்தில் அந்த பக்கத்தில் இருக்கும் நபர் நமக்காக இவ்வளவு தூரம் இவர் வந்திருக்கிறாரே நமக்காக இவ்வளவு மெனக்கிடுகிறார்கள் என்று சொல்லி சந்தோஷப்படுவார்கள். ஆனால் நாம் இரண்டாவது முறை மூன்றாவது முறையே அப்படியே மெனக்கிடுவோம். காலப்போக்கில் அது எதிர் தரப்பில் இருப்பவர்களுக்கு பழக்கம் ஆகிவிடுகிறது.
அப்படி இருக்கும்போது எதிர் தரப்பில் இருப்பவர்கள் எப்போதுமே நமக்காக நம் பக்கத்தில் வர நினைக்க மாட்டார். அவர் நான் எதற்காக உன் பக்கத்தில் வரவேண்டும் நீ தான் இண்ணமும் கஷ்டப்பட்டு என் பக்கத்தில் வரவேண்டும் என்று நம் மீது மொத்த சுமையும் கட்டிவிடுவார்கள். "இதை நான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்று இருக்கிறேன்" ஆகையால் அது எந்தவிதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் சரி நீங்கள் அந்த மையப் புள்ளியை தாண்டக்கூடாது.
இருவருக்கும் இடையிலான அன்பு அர்ப்பணிப்பு உள்ளிட்டவை சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்கும். நீங்கள் 50 சதவீதத்தை கடக்கும்போது எதிர் தரப்பில் இருப்பவர்கள் நீங்கள் செய்யும் தியாகங்களை வாங்கி பழகி விடுவார்கள். அது உங்களுக்கு நல்லதில்லை என்று அந்த பேட்டியில் கௌதமி கூறி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications