Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் சன் சன் டிவி சீரியலை விட்டு விலகல் குறித்து தகவல்... வதந்திகளுக்கு பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலிலிருந்து தான் விலகுவதாக பரவி வந்த செய்திகளுக்கு அந்த சீரியலின் கதாநாயகியாக நடிக்கும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகளான நடிகை ஜோவிடா லிவிங்ஸ்டன் தற்போது விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

சிலர் வதந்திகளை பரப்பி வருவதாக கருத்து தெரிவித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக செய்தியை கூறி இருக்கிறார்.

லைக் மற்றும் முட்டாள்தனமான கமெண்ட்ஸ்களை பெறுவதற்காகவே என்னிடம் விசாரிக்காமல் சிலர் தாங்களாகவே தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஆனால் நான் சீரியலை விட்டு விலகவில்லை என்று கூறி இருக்கிறார்.

லிவிங்ஸ்டனின் மகள்

லிவிங்ஸ்டனின் மகள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியல் 2021 ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி ஒளிபரப்பை தொடங்கியது. இந்த சீரியலில் கதாநாயகியாக ஜோவிடா லிவிங்ஸ்டன் மற்றும் அவருக்கு ஜோடியாக கதாநாயகனாக கார்த்திக் வாசு மற்றும் கதாநாயகனின் அம்மாவாக அம்பிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் உதயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் கன்னட சீரியல் ஆன கஸ்தூரி நிவாசாவின் ரீமேக் தான் இந்த சீரியலில் நடிகர் லிவிங்ஸ்டன் மகளான ஜோவிடா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பது பலருக்கும் தெரியாது.

சீரியல் கதை

சீரியல் கதை

ஆரம்பத்தில் அருவியை ஏற்றுக்கொள்ளாத மாமியார் வீட்டில் இருக்கும் நபர்களால் மருமகள் அருவியுடன் அதிகமாக சண்டையிட்டு வருகிறார். இவர்கள் இடையில் புகழ் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார். அம்மாவுக்கு ஆதரவாக செயல்படுவதா அல்லது மனைவிக்கு ஆதரவாக செயல்படுவதா என்று முடிவு எடுக்க முடியாமல் திணறும் கதாபாத்திரத்தில் புகழாக நடிக்கும் கார்த்திக் வாசு ரசிகர்களின் மதிப்பை பெற்றிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தைரியமான ஒரு கேரக்டராக அருவியும் இந்த சீரியலின் மூலமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

வதந்தி

வதந்தி

கிட்டத்தட்ட 300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்த அருவி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஜோவிடா திடீரென சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை குறித்து சீரியலின் ரசிகர்கள் பலர் கதாநாயகி மாறிவிட்டால் இந்த சீரியலில் கதையே மாறிவிடும் இந்த போல்டான கேரக்டருக்கு ஜோவிடா தான் சரியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இந்த பதிவை பார்த்த ஜோவிடா கோபமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

உங்க எல்லாருக்கும் நான் ஒன்றை சொல்லிக்கிறேன். நான் அருவி சீரியலை விட்டு விலகவில்லை. உங்களுடைய முட்டாள்தனமான கமெண்ட்ஸ், லைக்காகவும், வியூசுக்காக இப்படி ரூமர்ஸை பரப்பாதீங்க என்று கோபமாக பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஜோவிடா வின் இந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறதாம். அதனாலே பலர் இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். கடைசியில் நல்ல வேலையாக தெளிவுபடுத்தி விட்டீர்கள் என்று இவருக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+