கூட்டை உடைத்து ஹாயா பறந்த ஜோதிகா.. மமதா பானர்ஜியா? சிவக்குமார் ஓட்டல்ல வாங்கி சாப்பிடறாராம்: பிரபலம்
சென்னை: மும்பையில் செட்டில் ஆவதற்கான காரணத்தை பலமுறை ஜோதிகா, செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டார்.. தன்னுடைய பெற்றோரை கவனித்து கொள்ள வேண்டும், பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வேண்டும் உட்பட பல்வேறு காரணங்களையும் தெளிவுபடுத்திவிட்டார். ஆனாலும், ஜோதிகா மும்பையில் வசித்து வருவது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு நடுவில், வெப்சீரிஸ் ஒன்றில் ஜோதிகா சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி ஒன்றில் நடிக்கவும், மீண்டும் ஜோதிகாவை பற்றி சர்ச்சை வட்டமடிக்கிறது.
இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், ஜோதிகாவின் வெப்சீரிஸ் பற்றியும், மும்பையில் குடியேறியதை பற்றியும் பேசியிருக்கிறார்.

அதில், "ஜோதிகா என்ன மம்தா பானர்ஜியா? அன்னை தெரசாவா? ஜெயலலிதாவா? அரைகுறை ஆடையோடு நடிக்க சொன்னாலும் நடிக்கக்கூடிய நடிகைதானே? ஜோதிகா சாதாரண நடிகைதானே? அதுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்?
சூர்யா - ஜோதிகா திருமணம்
சூர்யா - ஜோதிகா திருமணத்தை சிவக்குமார் பலமுறை தடுத்து நிறுத்தினார். ஆனால், சூர்யாவின் அழுத்தம் தாங்காமல் ஜோதிகாவை கட்டி வைத்தார்.. ஆனால், பல கோடி ரூபாய் சொத்துக்களுடன், குழந்தைகளுடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.. அதற்கு காரணம் சென்னையில் அவருக்கு பிரைவசி இல்லை.
சிவக்குமார் ஓட்டல்ல வாங்கி சாப்பாடு சாப்பிடறாராம். "உங்களுடைய உழைப்பில் எதுவுமே வேணாம்" என்று சொல்லிவிட்டு, சிவக்குமாரும், அவருடைய மனைவியும் வீட்டில் சில காலம் சாப்பிடுவதில்லை என்றுதான் நான் கேள்விப்பட்டேன். இதற்கு காரணம் ஜோதிகாவுடனான சண்டையாம்.
கங்குவா - தங்கலான்
எந்த நடிகையையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அமலாபால், முதல் திருமணம் செய்தபோது, அவருடைய கணவரின் முக்கிய கோரிக்கையே, திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்பதுதான். ஆனால், கணவரைவிட, நடிப்புதான் முக்கியம் என்று டைவர்ஸ் செய்துவிட்டார் அமலாபால்.. அதுபோல, ஜோதிகா எந்தவிதமான கட்டப்பாட்டுக்குள்ளும் இருக்க விரும்பவில்லை..
கங்குவா படத்துக்கு ரசிகர்களை திட்டி என்ன பயன்? கங்குவா படம் முன்பேயே விக்ரம் நடித்த தங்கலான் படம் அதேபோல வந்தது.. அப்படியே தங்கலான் படத்தை பார்த்து காப்பி அடித்துவிட்டது போல இருந்தது கங்குவா.. இப்படி படம் எடுத்தால், மக்கள் எப்படி பார்ப்பாங்க.. தங்களது எத்தனை படங்கள் ஹிட்டானாலும், மம்முட்டி, மோகன்லால் இருவரும் 10 கோடி சம்பளத்தை தாண்டியதில்லை.. ஆனால் சிவகார்த்திகேயன் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம்..
கூட்டை உடைத்து கொண்டு சென்ற ஜோதிகா
அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருக்க சிவக்குமார் விரும்புகிறார்.. ஆனால், கூட்டை உடைத்துக் கொண்டு ஜோதிகா வெளியேறிவிட்டார்.. கலாச்சாரத்துக்குள் தன்னை சுருக்கி கொள்ள முடியாது என்று ஜோதிகா சொல்லிவிட்டார்..
ஏன் சென்னையிலிருந்தால், மும்பையிலுள்ள தன்னுடைய அம்மா, அப்பாவை ஜோதிகாவால் கவனித்து கொள்ள முடியாதா? தனக்கு பிரைவசி வேண்டும் என்று நினைக்கிறார்.. சினிமாவில் சிகரெட் பிடிப்பது , பீர் குடிப்பது எப்படியும் நடிக்கலாம். இனி ஜோதிகாவை கட்டுப்படுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications