விவாகரத்து போட்டோ சூட் நடத்திய நடிகை..காஜல் பசுபதி வெளியிட்ட பதிவு..இணையத்தில் குவியும் கருத்துக்கள்
சென்னை: தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ததை நடிகை ஷாலினி போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.
போட்டோ சூட்டில் கணவருடைய புகைப்படத்தை கிழித்தும் காலால் மிதித்தும் அவர் புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்.
அது குறித்து சமூக வலைத்தளத்தில் இரு வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சீரியல் நடிகை ஷாலினியை பாராட்டி பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இணையத்தில் தற்போது விதவிதமான போட்டோ சூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது சீரியல் நடிகை ஷாலினி தான் விவாகரத்து பெற்றதை போட்டோ சூட்டாக எடுத்து கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். தற்போது இது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மீம்ஸ் கிரியேட்டர்களின் கையில் இந்த விவாகரத்து போட்டா சூட் புகைப்படங்கள் சிக்கி இருக்கிறது. இதை வைத்து சமூக வலைதளங்களில் அதிகமான கருத்துக்களும் குவிந்து வருகிறது. ஒரு பக்கம் ஷாலினி செய்தது சரி என்றும் சிலர் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் இது தவறான செயல், பிடிக்கவில்லை என்று விலகி விட்ட பிறகு இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்றும் கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகை ஷாலினி சீரியல்களில் நடித்துக் இருக்கிறார். குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்று சீரியலில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தான் அவருக்கு துபாயில் நிகழ்ச்சி ஒன்றில் டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி அவர் துபாய்க்கு சென்ற நேரத்தில் தான் துபாய் தொழிலதிபர் என்று ரியாஸ் என்கிற நபர் பழக்கம் ஆகி இருக்கிறார். ஆரம்பத்தில் அவர் தன்னை உங்களுடைய ரசிகர் என்று கூறி பழக்கம் ஆகி இருக்கிறார்.

பிறகு இந்துக் கோவிலில் வைத்து திருமணம் செய்து இருக்கிறார். அதுபோல அவருக்காக ஷாலினியும் முஸ்லிம் மதத்திற்கும் மாறி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி ஷாலினியை ரியாஸ் அடித்துக் கொடுமைப்படுத்தினாராம். வெளியே செல்லும் இடங்களிலும் கூட ஒருமுறை ரோட்டில் தனியாக தவிக்க விட்டு சென்றதாக ஷாலினி கூறியிருக்கிறார். பிறகு குழந்தை பிறந்ததும் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் பெண் குழந்தை பிறந்த பிறகும் இதே நிலைமைதான் தொடர்ந்ததாம்.
பிறகு அவரோடு வாழ முடியாது என்று தனியாக ஷாலினி வாழ்ந்து வந்ததாகவும், அதே நேரத்தில் ரியாஸ் மீண்டும் வேறு ஒரு நடிகையோடு துபாயில் குடும்பம் நடத்தி வருவதாகவும் ஷாலினிக்கு தெரிய வந்தது என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவருக்கு அவருடைய முன்னாள் கணவர் ரியாஸ் உடன் விவாகரத்து ஆகியிருக்கிறது. விவாகரத்து செய்தியை மகிழ்ச்சியோடு போட்டோ சூட் எடுத்து கொண்டாடி இருக்கிறார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த புகைப்படங்களை நடிகை காஜல் பசுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ஷாலினியை பாராட்டி இருக்கிறார். இதுதான் உண்மையான ஸ்பிரட் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியதை தொடர்ந்து சமூக வலைதளத்தில் அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.
சிலர் இந்த மாதிரி ஒரு ஆண் போட்டோ ஷூட் செய்து இருந்தால் ஆணாதிக்க திமிரு என்று ஒரு குரூப் வந்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையில் இருப்பதை விட இப்படி தனியாக வாழ்ந்து விடலாம் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சிலர் விவாகரத்து என்பது இயல்பாக இருக்க வேண்டும் என்று அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் அதே நேரத்தில் கணவர் படத்தை காலில் போட்டு மிதித்தது அனாவசியம் என்றும் இரு வேறு கருத்துக்கள் வலம் வருகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications