மனசை கஷ்டப்படுத்தாதீங்க.. அந்த நடிகரோடு போட்டோ! இதுதான் உண்மை! வதந்திகளுக்கு கம்பம் மீனா பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கம்பம் மீனா தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். சூட்டிங் ஸ்பாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகர் ஸ்டாலினோடு தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்த நிலையில் அதைப்பற்றி பல வதந்திகள் பரவி வரும் நிலையில் அது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக சினிமா மற்றும் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பற்றி வதந்திகள் பரவி வருவது வாடிக்கைதான். ஒரு சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டவர்களே ஆச்சரியப்படும் வகையில் பொய்யான தகவல்களையும் சிலர் பரப்பி வருகிறார்கள். அதிலும் தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைதளத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் நிலையில் ஒரு பொய்யையே ஒருவர் பரப்புவதால் அதை உண்மை என்று பலர் கண்மூடித்தனமாக நம்பி விடுகிறார்கள்.

Baakiyalakshmi Serial vijay TV

மன உளைச்சல்

இதனால் சம்பந்தப்பட்டவர்கள் அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பிரபலங்களும் நம்மைப் போல சாதாரணமானவர்கள் தான் என்று புரிந்து கொள்ளாமல் சிலர் பிரபலங்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்று முத்திரை குத்துவிடுகிறார்கள்‌ இது அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் மேலும் கஷ்டத்தில் ஆழ்த்தும் என்று பலருக்கு தெரிவதில்லை.

வதந்தி போட்டோ

முகத்தை காட்டாமல் சோஷியல் மீடியாவில் கண்டமேனிக்கு கமெண்ட் போடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுபோலத்தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்டாலின் முத்து மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியாக நடித்துக் கொண்டிருக்கும் கம்பம் மீனா இருவரும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை யூட்யூபர் ஒருவர் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து "எங்கள் இருவருக்கும் திருமண நாளுக்கு வாழ்த்துக்கள் சொல்வீர்களா" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

உண்மை இல்லை

இதை உண்மை என்று நம்பிய பலர் திருமண வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்கள். சிலர் இது பொய் இவர்கள் இருவரும் கணவன் மனைவி கிடையாது என்று சொன்னாலும் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வந்தது. இதுகுறித்து ஸ்டாலின் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார். அதேபோல பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியாக நடிக்கும் கம்பம் மீனாவும் இதுகுறித்து தன்னுடைய வருத்தத்தை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

மன வருத்தம்

அதில் அவர் பேசுகையில், என்னைப் பற்றிய அந்த புகைப்படம் பார்த்ததும் முதலில் சிரிப்புதான் வந்தது. பிறகு வருத்தமாகவும் இருந்தது. இதுபோல அடுத்தவங்க மனசை கஷ்டப்படுத்தாதீங்க. இந்த புகைப்படம் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பது சம்பந்தப்பட்ட இரண்டு பேருடைய குடும்பத்திற்கும் தெரியும்.

Baakiyalakshmi Serial vijay TV

ஆனால் ஒரு youtuber அவருக்கு வியூஸ் வரவேண்டும் என்பதற்காக இப்படி கேவலமான வேலையை செய்திருக்கிறார். அதேபோல அதை உண்மை என்று நம்பி கமெண்ட் போட்டவர்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன், எனக்கும் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவருக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

அடுத்தவர்களின் தொல்லை

அதுபோல என்னுடைய இரண்டு மகன்களுக்கும் திருமணமும் முடிந்து விட்டது. எனக்கு பேரன் பேத்தி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் எதற்காக இப்படி எல்லாம் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. நான் இதைப் பற்றி கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆனால் சிலர் போன் பண்ணி ஏன் இப்படி எல்லாம் போட்டு இருக்காங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதை பார்க்கும்போது கோபமாக தான் வருகிறது.

Baakiyalakshmi Serial vijay TV

கம்பம் மீனா வேண்டுகோள்

அவர்களுக்கும் எங்களுக்கும் தனித்தனியான குடும்பம் இருக்கிறது என்று தெரியும் என அந்த பேட்டியில் கம்பம் மீனா பேசி இருக்கிறார். அதுபோல அந்த புகைப்படம் வைரலான போது என்னுடைய மகன்களிடம் இது பற்றி youtubeஇல் போட்ட அந்த யூடியூபரிடம் கேளுங்க என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அடுத்தவங்க இப்படி எல்லாம் பேசுறாங்கன்னு நாம விளக்கம் கொடுத்துட்டே இருக்க முடியாது. அதை விட்டு தள்ளுங்க என்று சொன்னார்கள். ஆனால் எல்லா குடும்பத்திலும் இதுபோல புரிந்து கொண்டு நடந்து கொள்ள மாட்டார்கள். அதனால் தேவை இல்லாமல் வதந்தி பரப்பாதீர்கள் என்று அந்த வீடியோவில் கம்பம் மீனா வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+