நடிகை கனகாவின் தனிமைக்கு அந்த பிரபலத்தின் காதல் தான் காரணமா? வெளிச்சத்துக்கு வந்த கண்ணீர் கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கனகா தனிமையில் இருப்பதற்கு காரணம் அவருடைய உதவியாளரின் காதல்தான் என திரைப்பட விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

அடுத்தடுத்து பல இழப்புகளால் தான் கனகா வெளி உலகத்திற்கு தன்னை காட்டிக் கொள்ளாமல் தனிமையில் இருக்கிறார் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Actress Kanaka has shared the reason for not coming to the outside world

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிகை கனகாவை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அப்போ முதல் இப்ப வரைக்கும் இவருடைய கண்ணுக்கு பல ரசிகர்கள் அடிமைகளாக இருந்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் எட்டுக்கும் மேற்பட்ட ஹிட்டான திரைப்படங்களை கொடுத்த நடிகை கனகா தமிழ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மலையாள திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். மலையாளத்தில் இவர் காட்பாதர் என்கிற திரைப்படத்தின் மூலமாக மலையாள ரசிகர்களின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகை கனகா சுமார் 30 வருடங்களாகவே காணாமல் போய்விட்டார். இந்த நிலையில்தான் சமீபத்தில் இவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதற்கு பிறகு தான் ரசிகர்களின் மத்தியில் மீண்டும் கனகா எங்கே போனார்? அவருக்கு என்ன ஆனது? எதற்காக வெளி உலகத்திற்கு வரவில்லை என்று பலரும் அவரைப் பற்றி கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.

என்னதான் பலர் இவருடைய பழைய திரைப்படங்களை பார்த்து பழகி இருந்தாலும் இவர் சமீபத்தில் ஒரு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்திருந்தது. இப்ப இருக்கிற ஜெனரேஷன் பலருக்கும் கனகாவை தெரியவில்லை என்றாலும் அவருடைய தீவிரமான ரசிகர்களுக்கு அவருடைய லேட்டஸ்ட் வீடியோ அதிர்ச்சியை தான் கொடுத்து இருக்கும்.

சொத்து விஷயத்தில் அவருடைய அப்பாவோடு ஏற்பட்ட பிரச்சனை, கை கூடாத காதல், கைவிட்ட கணவர் என பல பிரச்சனைகள் அவருக்கு வந்ததால் பல வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமை வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் பற்றி பல வதந்திகளும் பரவி வந்தது. ஆனால் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தனிமையாக தன்னுடைய வீட்டில் நடிகை கனகா வாழ்ந்து இருக்கிறார்.

அந்த நேரத்தில் தான் கனகாவின் அம்மா தேவிகாவால் சினிமா வாய்ப்பைப் பெற்ற நடிகர் ஒருவரின் மகனான ராமச்சந்திரன் என்பவர் கனகாவுக்கு பிஏவாக இருந்தார் என்றும், அவர்தான் அப்போது கனகாவிற்கு படபிடிப்பு செல்வதற்கும் கதை கேட்பது சம்பளம் வாங்குவது என அனைத்திலும் துணையாக இருந்து அவரை மன அழுத்தத்தில் இருந்து மீட்டு வந்தார் என்றும் ராமச்சந்திரனுக்கு கனகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது எனவும் அவர் ஒருதலையாக கனகாவை காதலித்து வந்திருக்கிறார் என்று செய்யாறு பாலு தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் ராமச்சந்திரனை தவறாக புரிந்து கொண்ட கனகா அவரை போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டாராம். பிறகு சில வருடங்கள் கழித்து ராமச்சந்திரன் இறந்த பிறகு தான் கனகாவுக்கு அவர் தன்னை காதலித்ததே தெரிந்ததாம். இதனால் மீண்டும் மனம் உடைந்து போன கனகா சினிமாவும் வேண்டாம், எதுவும் வேண்டாம் என்று தன்னைத்தானே வீட்டில் சிறை வைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார். இதுதான் கனகாவின் சோகமான வாழ்க்கை என்று செய்யாறுபாலு பேசிய வீடியோவை கனகாவின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+