Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் கல்யாணம்.. தனிமை வாழ்க்கை.. எங்க அம்மாவின் ஆவியுடன் நான்! அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை கனகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கனகா சினிமாவை விட்டு விலகி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவருடைய தற்போதைய புகைப்படம் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கரகாட்டக்காரன் திரைப்படத்தில் பார்த்த கனகாவா இது என்று ரசிகர்கள் அதிர்ச்சியாகும் அளவிற்கு அவர் மாறி இருக்கிறார்.

80 காலகட்டத்தில் தொடங்கி 90ஸ் காலத்தில் அளவில் உச்சத்தில் இருந்த நடிகை கனகா சமீபத்தில் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர்களாக மாறிய இளைஞர்கள் ஏராளம். கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி எத்தனையோ வருடங்களாகி இருந்தாலும் கரகாட்டக்காரன் திரைப்படம் பார்க்கும்போது இப்போதும் கனகாவை தேடிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

kanaka kutty padmini

புகழின் உச்சத்தில் வலம் வந்த நடிகை கனகா அவருக்கு தொடர்ச்சியாக வந்த ஏமாற்றங்கள் மற்றும் கஷ்டங்கள் காரணமாகவே சினிமாவை விட்டு விலகி வீட்டிற்குள்ளே இருந்து வருகிறார். சில வருடங்களாகவே அவர் பற்றிய செய்திகள் பெரிய அளவில் இல்லாமல் இருக்கும் நிலையில் ஒரு சில யூடியூப்பர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் கனகாவின் கடந்த கால வாழ்க்கையை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் கூட நடிகை குட்டி பத்மினி தான் நடிகை கனகாவை நேரில் சந்தித்ததாகவும் அவரோடு ஐஸ்கிரீம் பார்லரில் ஒன்றாக அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டோம் என்று கனகாவோடு எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதே நேரத்தில் அவரிடம் கனகாவிடம் பேட்டி எடுங்கள் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கூறிவந்தனர். ஆனால் குட்டி பத்மினி அதற்கான முயற்சிகள் எடுத்த போது கனகா தரப்பிலிருந்து அவருக்கு ரெஸ்பான்ஸ் செய்யப்படவில்லை என்று குட்டி பத்மினி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

கனகா சக்திவேல், பெரிய குடும்பம், செந்தூர தேவி என்று 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய அம்மா நடிகை தேவிகா தான். கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கனகா அறிமுகமாகும் போது நடிகை தேவிகாவின் மகள் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிக்கிறார் என்று அந்த நேரத்தில் செய்திகள் எழுதப்பட்டன.

kanaka kutty padmini

ஆனால் அந்த திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து கனகாவின் அம்மா தான் தேவிகா என்று எழுதும் நிலை தான் மாறி இருந்தது. கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான விரலுக்கேத்த வீக்கம் என்ற திரைப்படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

அம்மா மீது அதிகமான பாசம் வைத்திருந்த கனகா அந்த நேரத்தில் எந்த பேட்டியில் என்றாலும் கூட அம்மாவோடு தான் கொடுப்பார். அம்மா இல்லை என்றால் நான் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அம்மாவோடு தான் செல்வார். ஆனால் கனகாவின் அம்மாவும் கனகாவின் அப்பாவும் தனித்தனியாக தான் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

கனகா நடிப்பது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதுபோல கனகா அவர் நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகன் இறப்பது போல காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளை பார்த்து நான் அழுது விடுவேன், சூட்டிங் ஸ்பாட் பாட்டில் யாருக்காவது அடிபட்டு விட்டால் எனக்கு பயமாயிருக்கும் என்னதான் நடிப்பா இருந்தாலும் எனக்கு வியர்ந்து போய்விடும் என்று அப்போ சில பேட்டிகளில் கனகா பேசியிருந்தார்.

kanaka kutty padmini

சினிமாவை விட்டு கனகா விலகி இருந்தாலும் அவருடைய அம்மாவோடு தான் அவர் வசித்து வந்தார். ஆனால் கடந்த 2002 ஆண்டு கனகாவிற்கு எல்லாமாக இருந்த அவருடைய அம்மா இறந்துவிட்டார். அம்மா இன்னும் ரொம்ப வருஷம் நம்ம கூட தான் இருக்க போறாங்கன்னு நம்பிக்கொண்டிருந்த கனகாவிற்கு அவருடைய அம்மா இறப்பு பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தை கொடுத்தது.

கை நிறைய சொத்து இருந்தாலும் தான் வாழ்ந்த வீட்டிற்குள் சொந்தம் என்று சொல்லிக்க யாரும் இல்லாமல் தனிமையில் வாழ ஆரம்பித்தார். அந்த நேரத்தில் கனகாவை தேடி அவருடைய அப்பா வந்தபோது கூட நீங்க என்னுடைய அம்மாவை விட்டுட்டு போனவர் நீங்க என்னுடைய சொத்துக்காக தானே இப்ப வந்து இருக்கீங்க என்று அப்போ பெரிய பிரச்சனையும் செய்திருந்தார். அதற்கு பிறகு கனகாவும் அவருடைய அப்பாவும் சொத்து பிரச்சனை காரணமாக கோர்ட்டு படி ஏறி அலைந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் கனகா பேட்டிகளிலும் பேசி இருந்தார். அதுபோல கனகாவிற்கு திடீர் திருமணம் நடந்தது அந்த திருமணம் முடிந்து 15 நாளில் அவருடைய கணவர் காணாமல் போய்விட்டார் என்று செய்திகள் பரவி வந்தது. அந்த நேரத்தில் தான் கனகா அவருடைய அம்மாவின் ஆவியுடன் பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகியிருந்தது.

kanaka kutty padmini

அதைத்தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டு கனகா கேன்சரால் இறந்துவிட்டார் என்ற வதந்திகள் பரவி வந்தது. அப்போது கூட கனகா நான் நன்றாகத் தான் இருக்கிறேன். வீட்டில் தனிமையில் இருக்கிறேன் என் சொத்துக்களை கைப்பற்ற என்னுடைய அப்பா தான் இந்த மாதிரி வதந்திகளை பரப்பி விட்டு இருக்கிறார் என்று பேட்டி கொடுத்திருந்தார். அதற்கு அவருடைய தந்தை என்னுடைய மகள் கனகா என்னை தவறான நபர் போல சமூகத்தில் சித்தரிக்க விரும்புகிறார் என்று கனகா மீதே போலீசில் புகார் கொடுத்து இருந்தார்.

தன்னுடைய அம்மா தேவிகா இறந்த பிறகு கனகா சந்தித்தது எல்லாமே பிரச்சனைகள் தான் என்பதாலேயே என்னவோ அவர் அதற்கு பிறகு யாரோடும் நட்பு பாராட்டாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ரசிகர் ஒருவர் கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+