ரஜினிகாந்த் மனைவி காலில் விழுந்த விஜய் டிவி சீரியல் நடிகை.. எழுந்த விமர்சனம்.. அதிரடியான பதிலடி!
சென்னை: சன் டிவியில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் அஸ்வந்த்துக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கண்மணி மனோகரனுக்கும் சில மாதங்களுக்கும் முன்பு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்தது. இவர்களுடைய திருமணத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேரடியாக சென்று அவருடைய மனைவிக்கு பத்திரிக்கை வைத்திருக்கின்றனர். அப்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில் இதற்கு இணையத்தில் ஒரு ரசிகர் இவர்களை விமர்சித்த நிலையில் அதற்கு கண்மணி மற்றும் அஸ்வந்த் இருவரும் பதிலடி கொடுத்திருக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சன் டிவியில் காலை வணக்கம் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகனாகவும் நடிக்கும் அஸ்வந்த்துக்கும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் கதாநாயகிக்கும் என்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்தது.

இவர்களுடைய எங்கேஜ்மென்ட் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்கள் இருவரும் காதலிப்பது பற்றி எந்த இடத்திலும் பேசவில்லையே என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் கண்மணி இதுகுறித்து தன்னுடைய எங்கேஜ்மென்ட் அன்று விளக்கம் கொடுத்திருந்தார். அதில் நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்யவில்லை, இருவருடைய வீட்டில் பார்த்து தான் எங்களுக்கு எங்கேஜ்மென்ட் நடந்திருக்கிறது.
ஆனால் இப்போது நாங்கள் காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்று கண்மணி மற்றும் அஸ்வந்த் தெரிவித்திருந்தார்கள். அதுபோல கண்மணி மனோகரன் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கேரக்டரில் நடித்து பிரபலம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு தான் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அந்த சீரியல் முடிவுக்கு வந்தது.

அதை தொடர்ந்து இப்போது விஜய் டிவியில் மகாநதி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு சமூக வலைத்தளத்திலும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர். அடிக்கடி இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
அதிகமான இளைஞர்கள் இவருக்கு பாலோவர்ஸ்களாக இருக்கிறார்கள். அதுபோல சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை அஸ்வந்த் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தான் இவர்களுடைய திருமணம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவியிடம் திருமண பத்திரிக்கையை கொடுத்து அவர்களை வரவேற்று இருக்கிறார்கள்.

அப்போது அஸ்வந்த் மற்றும் கண்மணி மனோகரன் இருவரும் ரஜினிகாந்தின் மனைவியான லதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வழங்கியிருக்கிறார்கள். இந்த புகைப்படங்களை இவர்கள் இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்து சரியாக இரண்டு மாதம் ஆன நிலையில் இன்று திருமதி லதா ரஜினிகாந்த்தை திருமணத்திற்கு அழைக்கும் பெருமை எங்களுக்கு கிடைத்தது.
எங்கள் திருமணத்திற்கு தொடர்ந்து பல அன்பு மற்றும் ஆசீர்வாதங்களால் நாங்கள் சூழப்பட்டிருக்கிறோம். எங்கள் இதயங்கள் இப்போது மகிழ்ச்சியுடனும் நன்றியுடன் நிறைந்துள்ளது. இந்த அழகான தருணத்தில் உண்மையிலேயே நன்றியோடு உணர்கிறோம் என்று அந்த பதிவில் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு aathikudi1994 என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து, "ஒரு சினிமா நடிகருக்கு அதுவும் நம்மூர் இல்லாத சினிமா நடிகருக்கு தரும் மரியாதை உங்களுக்காக களத்தில் போராடும் போராளிகளுக்கு தருவது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது" என்று கமெண்ட் கொடுத்து இருக்கிறார்.

அதற்கு அஸ்வந்த், "என் வாழ்க்கை என் கையில்" என்று பதில் கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து கண்மணி தங்கள் பற்றி கமெண்ட் போட்ட அதே ஐடியை டேக் செய்து "நீங்கள் சொல்வதை முதலில் நீங்கள் நடைமுறைப்படுத்துங்க" என்று பதில் கொடுத்திருக்கிறார். இதற்கு இணையத்தில் அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications