குரங்கு மூஞ்ச வச்சிக்கிட்டு.. ஏன் நடிக்க வரேன்னு தங்கர் பச்சான் திட்டுனாரு.. நடிகை கௌசல்யா ஓபன்
சென்னை: நடிகை கௌசல்யா ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்த நிலையில் இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் "தங்கர்பச்சான்" தன்னை பார்த்து "குரங்கு மூஞ்ச வச்சிக்கிட்டு ஏன் நடிக்கவரே" என திட்டியது குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கௌசல்யா. இவர் கார்த்தி, பிரபுதேவா, முரளி, விஜய் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்திருந்தார். கௌசல்யாவின் முதல் திரைப்படம் மலையாளமாக இருந்தாலும் இவரை வளர்த்து விட்டது தமிழ் சினிமா தான்.

அதுபோல காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் கௌசல்யா என்ற பெயரில் அறிமுகமாகி இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தன்னுடைய கவிதா என்ற பெயரை மாற்றி கௌசல்யா என வைத்துக்கொண்டார். இப்போது வரைக்கும் இவர் கௌசல்யாவாகத்தான் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறார்.
அத்தோடு இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். ஆரம்பக் காலகட்டத்தில் கௌசல்யா நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிறகு திருமலை திரைப்படத்தில் அவருக்கே அண்ணியாகவும் நடித்து விட்டார். இப்போது அக்கா, அண்ணி கேரக்டரில் தொடர்ச்சியாக பல நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் கௌசல்யா பேசுகையில் நான் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த திரைப்படத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் தான் இயக்கிக் கொண்டிருந்தார். ஒரு காட்சியில் அவர் சொல்லிக் கொடுத்ததை நான் சரியாக செய்யவில்லை, உடனே அவர் நீ எல்லாம் குரங்கு மூஞ்ச வச்சிக்கிட்டு எதுக்கு நடிக்க வர என்று என்னை பார்த்து திட்டினார். எல்லோரும் முன்பும் என்னை அவர் அப்படி திட்டியது எனக்கு வருத்தமாக தான் இருந்தது...
ஆனாலும் நாம் வாங்கும் சம்பளத்திற்கு சரியாக வேலை செய்யவில்லை, ஒரு விஷயத்தை நான் சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்து அவர் திட்டியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் எந்த காட்சிக்காக இப்படி திட்டினார்கள் என்று எனக்கு இப்போதும் நினைவுக்கு வரவில்லை. அவர் திட்டியது மட்டும் என்னால் மறக்க முடியாது.. அவர் அப்படி திட்டியதால் அடுத்த நாம் சரியாக வேலை செய்ய வேண்டும் இல்லை என்றால் அவர் திட்டுவார் என்ற ஒரு பயம் இருக்கிறது.
இதுபோல நிறைய இயக்குனர்களிடம் திட்டுவாங்கி இருக்கிறேன் ஆனால் அதை ஒரு பாடமாக எடுத்து மீண்டும் தவறை செய்யக்கூடாது என்று முயற்சி செய்து இருக்கிறேன். நடிகர் விஜய்யோடு நான் நடித்திருந்தேன் அப்போது விஜய் எளிதாக டயலாக் பேசி விடுவார். எனக்கு அந்த நேரத்தில் டயலாக் பேசுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். நானும் விஜய்யும் டயலாக் பிராக்டிஸ் செய்யும்போது விஜய் சத்தமாக டயலாக் பேசுவார்.
ஆனால் நான் மெதுவாக எனக்குள்ளே சொல்லிக் கொண்டிருப்பேன் அப்போது கூட அந்த திரைப்படத்தின் இயக்குனரும் என்னிடம் மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது விஜயை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் அவர் எவ்வளவு தெளிவாக டயலாக் பேசுகிறார் என்று சொன்னார். அதற்கு பிறகு தான் நான் அதையும் மாற்றிக் கொண்டேன்.
ஆரம்பத்தில் எனக்கு தமிழ் சரியாக தெரியாததால் தான் நான் எனக்குள்ளேயே டயலாக் சொல்லிக் கொண்டிருந்தேன். அது தவறு என்று பிறகு நான் புரிந்து கொண்டேன். இதுபோல சினிமாவில் பல அவமானங்களும் நிறைந்து இருக்கிறது. அதிலிருந்து நான் பல விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் கௌசல்யா பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications