அச்சச்சோ! குஷ்பூவுக்கு என்ன ஆச்சு.. காலில் பெரிய கட்டு.. அவரே வெளியிட்ட திடீர் பதிவு
சென்னை: நடிகை குஷ்பூ தன்னுடைய காலில் அடிபட்டு பெரிய கட்டு போட்டு இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய கால் பக்கத்தில் தனக்கு தன்னுடைய நாய் தான் துணையாக இருக்கிறது என்று ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற குஷ்புவிற்கு ஒருமுறை காலில் அடிபட்டு இருந்தது.
நடிகை குஷ்பூ தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் வருஷம் 16 திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார். அவருடைய முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது நடிகர் கார்த்திக் தான். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் இப்போதும் பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது.

அதிலும் "பூ பூக்கும் மாசம்" என்ற பாடல் சுசிலாவின் குரலில் கேட்கும் ரசிகர்களை கிறங்க வைக்கும்.. அதுபோல அந்த பாடலை பார்க்கும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் வகையில் குஷ்புவின் பெர்ஃபார்மன்ஸ் அசத்தலாக இருக்கும். அந்த பாடலில் குஷ்பூ மற்றும் கார்த்திக் காதல் கன்னாபின்னாவென வழிந்தோடும். இந்த திரைப்படத்திற்கு பிறகு குஷ்பூ கார்த்திக்கோடு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதேபோல நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் சுந்தர்சியை 2000 வருஷத்தில் குஷ்பூ திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் குஷ்பூ தொடர்ந்து சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அரசியலிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

நடிகை நளினி வீட்டில் விசேஷம்.. மகள் கொடுத்த சர்ப்ரைஸ்.. குவியும் வாழ்த்துக்கள்
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் இவருக்கு வாடிக்கையாக இருக்கிறது. ஆனாலும் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். சினிமா மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் குஷ்பூ இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு காலில் அடிபட்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே குஷ்புவிற்கு ஒரு முறை காலில் அடிபட்டு இருந்தது. சில மாதங்கள் ரெஸ்ட் எடுத்து பிறகு சரியாகி இருந்தது. இப்போது மீண்டும் இன்னொரு காலும் அடிபட்டு இருக்கிறது. அப்போது போடப்பட்ட பெரியகட்டை போட்டோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தனக்கு துணையாக இருப்பது தன்னுடைய நாய் தான் என்று குஷ்பூ அதில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் குஷ்புவிற்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதோடு பல நடிகைகள் குஷ்பூ மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று அவருக்கு ஆறுதல் கூறியும் வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications