சீரியல் டிஆர்பியில் இருக்கும் அரசியல்.. ஒவ்வொரு வியாழக்கிழமை நடப்பது இதுதான்.. ரகசியம் உடைத்த குஷ்பூ
சென்னை: நடிகை குஷ்பூ தான் சில சீரியல்கள் இயக்கி இருக்கும் நிலையில் அதில் இருக்கும் கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வரும் டிஆர்பி லிஸ்டால் சீரியல் தரப்பினர்கள் படும் கஷ்டங்கள் குறித்தும் குஷ்பூ மனம் திறந்து பேசி இருக்கிறார்.
தூர்தர்ஷன் காலத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட பல தனியார் சேனல்களில் டிஆர்பிஐ மையமாகக் கொண்டு பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் டிஆர்பியின் அடிப்படையில் தான் அவர்களுக்கு விளம்பரங்கள் மற்றும் வருமானம் வருகிறது.

பொதுவாக டிஆர்பி (Television Rating Point) என்பது தொலைக்காட்சியின் தரத்தை நிர்ணயிப்பதாகும். மக்கள் எந்த சேனலில் எந்த நிகழ்ச்சி அதிக நேரம் விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அறிய இந்த டிஆர்பி பயன்படுகிறது. ஒரு நிகழ்ச்சி அல்லது சீரியலின் டிஆர்பியின் அடிப்படையில் தான் விளம்பரதாரர்கள் விளம்பரம் செய்வார்கள். இதன் மூலம் அந்த சேனலுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
இதனால்தான் இப்போது பல சேனல்கள் டிஆர்பியில் முன்னிலை வகிப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்கள். டிஆர்பிஐ கணக்கிட BARC(Broadcast Audience Research Council) என்ற அமைப்பு "BAR-Q-Meters" என்ற கருவியை பயன்படுத்துகிறது. இந்த BARC அமைப்பு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும். peoples meter ஐ வைத்து அதிலிருந்து பெறப்படும் தரவுகளை ஆய்வு செய்து டிவி நிகழ்ச்சிகளுக்கு புள்ளிகள் அடிப்படையில் ரேட்டிங்ஸ் வழங்குகிறது.
இப்படி ஒரு வாரம் முழுக்க டிஆர்பி கணக்கிடப்பட்டு அதன் முடிவு வாரம் ஒரு முறை வெளியிடப்படும். தமிழ் நிகழ்ச்சிகளின் டிஆர்பியின் முடிவுகள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியாகிறது. மேலும் இந்த ரேட்டிங் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியின் சில ஆயிரம் மாதிரிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் இது எப்போதும் சரியானதாக இருக்கும் என்று கூற முடியாது.
இந்த நிலையில் இந்த டிஆர்பி பிரஷர் குறித்து நடிகை குஷ்பூ பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். அதுபோல சீரியலையும் இயக்கியிருக்கிறேன். எனக்கு திரைப்படங்களை காட்டிலும் சீரியல் இயக்குவது தான் ரொம்பவும் கஷ்டம். காரணம் அதற்கு டிஆர்பி தான்.
ஒவ்வொரு வாரமும் டிஆர்பி வியாழக்கிழமை தோரும் வெளியாகும். வியாழக்கிழமை வெளியாகும் டிஆர்பிக்கு எல்லாருமே புதன்கிழமையே மனதளவில் பயந்து கொண்டே இருப்பார்கள். புதன்கிழமை இரவு பல சீரியல் இயக்குனர்களுக்கு தூக்கம் வராது. ஒவ்வொரு வியாழக்கிழமை காலையில் வெளியாகும் டிஆர்பி லிஸ்டில் .2% சரிவடைந்து இருந்தாலும் நாம பல பேருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை வரும்.
சிறகடிக்க ஆசை சீரியல் செய்த சாதனை.. எல்லா இடத்திலும் No. 1.. காரணம் எதிர்நீச்சல் சீரியலா?
சேனல் தரப்பில் இருந்து கதையில் மாற்றம் பண்ண சொல்லுவார்கள். அதற்கு பிறகு ஒரு பெரிய கண்காணிப்பு நடக்கும். போன வாரத்தில் எந்த இடத்தில் நாம் சறுக்கினோம். எந்த இடத்தில் மக்களுக்கு பிடித்தது என்று எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதற்கு பிறகு அடுத்த வாரத்திற்கு நாம் சில காட்சிகளை எடுத்து வைத்திருப்போம். அதையெல்லாம் உடனே இது வேண்டாம் என்று சேனல் தரப்பில் சொல்லுவார்கள்.
சிலர் இந்த இடத்தில் இந்த காட்சிகளை வையுங்கள் என்று சில விஷயங்களை சொல்வார்கள். அது ரொம்பவும் கஷ்டமாக இருக்கும் என்று அந்த பேட்டியில் சீரியல் இயக்குவதில் இருக்கும் பிரச்சனை குறித்து குஷ்பூ பேசி இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications