கதறி அழுத லட்சுமி ராமகிருஷ்ணன்.. சொல்லி அழ கூட யாரும் இல்ல.. குடியால் உயிரே போயிருச்சி
சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணன் குடியால் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
தனக்கு இருந்த ஒரே அண்ணன் எவ்வளவு பாசமாக இருந்தார் என்றும் ஆனால் இந்த குடியால் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட சோகங்கள் பற்றியும் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
ஐந்து சகோதரிகளுக்கு ஒரே ஆண் மகனாக பிறந்த தன்னுடைய அண்ணன் தற்போது வாழ்க்கையில் இல்லை என்றும் அதற்கு என்ன காரணம் என்பது பற்றியும் பல தகவல்களை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பகிர்ந்து இருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு நடிகையாக பலருக்கும் தெரிந்திருந்தாலும், அவருக்கு சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பெரிய அளவில் ஹிட் கொடுத்து பிரபலம் கொடுத்தது என்றால் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார்.
இதனால் ஒரு பக்கம் பாராட்டுகளையும் ஒரு பக்கம் நெகட்டிவ் கருத்துகளையும் பெற்று வந்தார்.நிஜ வாழ்க்கையோடு லட்சுமி ராமகிருஷ்ணனை பலர் இந்த நிகழ்ச்சிக்காக திட்டி தீர்த்து இருந்தனர். ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமலும் இருந்து தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்த பல சோகங்கள் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சமீபத்தில் தான் அனைவரும் அன்னையர் தினத்தை கொண்டாடினோம். ஆனால் அந்த அன்னை உயிரோடு இருக்கும்போது பலர் கவனிப்பதே கிடையாது. ஆனால் இல்லாமல் போன பிறகு அவர்களுக்காக நீங்க எத்தனை பரிகாரமோ பூஜையோ தான தருமங்களோ செய்தாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. இருக்கும்போது கொஞ்சம் ஆறுதலாக பேசுங்க மனம் விட்டு அம்மா அப்பாவிடம் பேசும்போது அவர்களுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும்.
அம்மா அப்பா இல்லாதவர்களுக்கு தான் வாழ்க்கையில் சோகங்களும் துயரங்களும் எவ்வளவு இருக்கும் என்பது எல்லாம் புரியும். இருக்கும்போது பலருக்கு தெரியாத அருமையெல்லாம் இல்லாத போது புரியும் என்று கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய குடும்பத்தில் தாங்கள் ஐந்து பெண் பிள்ளைகள் என்றும் தங்களுக்கு ஒரு அண்ணன் தான் உண்டு என்றும் அவர் இருக்கும் போது அவ்வளவு பாசமாக எங்களிடம் நடந்து கொண்டிருந்தார்.
பூ வேண்டும் என்று சொன்னால் கூட போதும் கூடை நிறைய பூ வாங்கிக்கொண்டு தந்துவிடுவார். அந்த அளவிற்கு நாங்கள் எது கேட்டாலும் செய்பவர். ஆனால் அவர் மதுபழக்கத்திற்கு அடிமையாகி அவர் கேரக்டரில் இருந்து முழுமையாக மாறி தேவையில்லாத பல விஷயங்களை செய்து பிரச்சனைகளை செய்து அவர் கடைசியில் இறந்தும் போய்விட்டார். அம்மாவுடைய மடியிலேயே அவருடைய உயிர் போச்சு அந்த சோகம் எங்களை இப்ப வரைக்கும் ஆட்டி படைத்து தான் கொண்டிருக்கிறது.

அதனால் தான் எனக்கு நிகழ்ச்சியில் கூட குடித்துவிட்டு தன்னுடைய வீட்டில் பலருடைய நிம்மதிகளை கெடுத்துக் கொண்டிருக்கும் நபர்களை பார்த்தால் அவ்வளவு கோபம் வருவதற்கு காரணம் அதுதான். குடிக்காமல் இருக்கும் போது எல்லாரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்த விஷத்தை குடித்து தங்களையும் கஷ்டப்படுத்தி தன்னை சார்ந்தவர்களையும் கஷ்டப்படுத்தி எதற்காக இப்படி செய்ய வேண்டும்.
என் அண்ணன் இருந்திருந்தால் இப்போது என்னுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்திருப்பார். எங்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும் ஆனால் இப்போ எங்களுடைய நிலைமை?, அதனால் தான் நான் எல்லோரிடமும் வேண்டுகோள் வைத்துக் கொள்கிறேன். அந்த மாதிரி குடித்து நம்ம வீட்டில் இருப்பவர்களையும் கஷ்டப்படுத்தாதீங்க, அதுபோல வயசானவங்க கிட்ட மனம் விட்டு பேசுங்க. உங்களுக்கு நாங்க இருக்கோம் என்று ஆறுதல் கொடுங்க என்று உருக்கமாக கண்ணீரோடு பேசி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications