மகாலட்சுமியோடு என்ன பிரச்சனை? மன்னிச்சிடுங்க என் கருத்து தவறாகி விட்டது.. உருக்கமாக ரவீந்தர் பதிவு
சென்னை: சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் தொடர்ச்சியாக சோகமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
மகாலட்சுமியோடு புகைப்படங்களை அதிகமாக வெளியிட்டு வந்த ரவீந்தர் தற்போது தனியாகவே புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதே நேரத்தில் மகாலட்சுமிக்கும் தனியாக வீடியோ வெளியிட்டு இருக்கும் நிலையில் இவர்கள் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சின்னத்திரை நயன்தாரா என்று செல்லமாக 90ஸ் கிட்ஸ்களால் அழைக்கப்படும் நடிகை மகாலட்சுமி தொகுப்பாளராக பல ரசிகர்களை கவர்ந்தவர். தற்போதும் வில்லியாக பல சீரியல்களில் மிரட்டி கொண்டிருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் மிரட்டல் வாசுகி ஆக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் திடீரென்று இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே மகாலட்சுமிக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து ஆகியிருந்தது. அதுபோல ரவீந்திரருக்கும் திருமணமாகி விவாகரத்து நடந்திருக்கிறது. இரண்டாவது முறையாக இவர்கள் இருவரும் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்து இருந்தனர்.
தங்களுடைய திருமண புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் இருவரும் பதிவிட்டு காதல் பற்றியும், ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அன்பு பற்றியும் வெளிப்படையாக கேப்ஷன் கொடுத்து பதிவு வெளியிட்டிருந்தனர். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்து வைரலாகி விட்டது.
திருமணத்திற்கு பிறகு மீம்ஸ்களிலும் இவர்கள்தான் இடம் பெற்று இருந்தனர். ஆரம்பத்தில் பல youtube சேனல்களிலும் பேட்டி கொடுத்து வைரல் ஜோடியாக மாறி இருந்த நிலையில் இருவரும் தங்கள் துறையில் பிஸியாக இருப்பதால் அடிக்கடி வெளியே செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களையும் குறிப்பாக வார இறுதி நாட்களில் இவர்கள் இருவரும் தவறாமல் வெளியே சென்று அதை புகைப்படம் வெளியிட்டும் வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் ஏழாம் தேதி இவர்கள் இருவரும் ஜோடியாக ஹோட்டல் ஒன்றில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். அதை தொடர்ந்து ரவீந்தர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சிங்கிளாகவே புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு முன்பு எல்லாம் ரவீந்தர் வெளியிடும் புகைப்படங்களுக்கு முதல் கமெண்ட் மகாலட்சுமி கொடுப்பதாகத்தான் இருக்கும். அதுபோல மகாலட்சுமி வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரவீந்தர் கமெண்ட் கொடுத்து வருவார்.
ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் எந்த கமெண்டும் செய்வதில்லை அதே நேரத்தில் டேக்கும் செய்து கொள்ளவில்லை. தொடர்ச்சியாக ரவீந்தர் சோகமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, "என்னால் அதை செய்ய முடியாது என்று நீ நினைக்கிறாய். ஆனால் நான் அதை முடித்து விட்டேன். ஆனால் உன்னிடம் நிரூபிப்பதற்காக அல்ல... என்னைப் பற்றிய கருத்து இப்போது தவறாகி விட்டதற்காக நான் மன்னிப்பு கேட்க வந்துள்ளேன்.., உங்கள் போராட்டங்களை நம்புங்கள் உங்களுக்கு சாதகமான முடிவு வரும் என்று கூறி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து இன்னொரு புகைப்படத்திற்கு," வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களிலும் புன்னகையை நேசிப்பதே. ஏனெனில் சிலர் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும் புரியாத புதிராக கேப்ஷன்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு வார காலமாக கருத்து வேறுபாடு இருக்கிறதா என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதைத்தொடர்ந்து நேற்று மகாலட்சுமி நயன்தாராவின் க்யூட்டான ஒரு ரீல்ஸ் ஒன்று செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அதற்கும் ரவீந்தர் எந்த கருத்துகளையும், லைக்குகளும் கொடுக்கவில்லை. இதனால் அப்பொழுது இவர்களுக்குள் இருப்பது கருத்து வேறுபாடு தானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
தேர்தல் பற்றி விஜய் பேசிய டயலாக், சிறகடிக்க ஆசையில் ரீ கிரியேட்! இதை கவனிச்சீங்களா? இனிவரும் பிரச்சனை? -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம் -
நடிகர் விவேக் பிரசன்னாவின் சகோதரர் யார் தெரியுமா? 100க்கும் மேற்பட்ட ஹிட் படங்களுக்கு பாடல் எழுதியவர்! நெகிழ்ச்சி கதை -
TN 2026 First Review : நட்டி நட்ராஜின், அரசியல் கலந்த தநா 2026 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ -
ஜனநாயகன் விஷயத்தில் நடந்தது இதுதான்! எல்லாமே வதந்தி! ஓபனாக உடைத்த ஜீ5 கௌஷிக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு!












Click it and Unblock the Notifications