தெருவோர நாய்களுக்கு சாப்பாடு வைத்த மகாலட்சுமி.. ஆனால் அந்த நோட்டீஸ்! குவியும் நெகட்டிவ் கருத்துக்கள்
சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமி தன்னுடைய பிறந்த நாளில் தெரு நாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடுகளை செய்து இருக்கிறார். அதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் தெருநாய்களுக்கு உணவு வழங்கும் போது கூடவே மகாலட்சுமியின் பிறந்த நாளை குறிப்பிட்டு அதில் ஒரு நோட்டீஸ் அந்த நாயின் சாப்பாட்டு தட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
அதைப் பார்க்கும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நாய்க்கு சாப்பாடு வைக்கும் போது இப்படி பேப்பரையும் சேர்ந்து வைத்தால் அந்த நாய் அதை தெரியாமல் சாப்பிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதே ஏன் இப்படி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தொகுப்பாளராகவும், நடிகையாகவும் பலருக்கும் பரீட்சைமான மகாலட்சுமி சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலிலும், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாயம்மா என்ற சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இவர் பல வருடங்களாகவே சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று அடுத்தடுத்து ஒவ்வொரு சேனல்களிலும் இவருடைய சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது. ஆனால் இப்போது அதிகமான சீரியல்களில் நடிக்கவில்லை. ஆனாலும் நடிக்கும் சீரியல்கள் எல்லாம் அதிகமாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் தான் கடந்த வருடத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே மகாலட்சுமிக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து கொண்டிருக்கும் ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்தது ரசிகர் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல ஒரு சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஜோடியாக மகாலட்சுமி மற்றும் அவருடைய கணவர் ரவீந்தர்தான் இருந்து வந்தனர்.

அது போல தனக்கு எதிராக வரும் நெகட்டிவ் கருத்துக்களை கண்டுகொள்ளாத மகாலட்சுமி அடுத்தடுத்து தன்னுடைய பயணத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் நேற்று அவருடைய பிறந்தநாள்.... பிறந்தநாளுக்கு அவருடைய கணவர் நள்ளிரவு நேரத்தில் கேக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் மகாலட்சுமி வெளியிட்டிருந்தார். அதுபோல தன்னுடைய குடும்பத்தாரோடு உடல் ஊனமுற்றோர் விடுதி மற்றும் ஆதரவற்றோர் விடுதிகளுக்கு சென்று அங்கிருப்பவர்களுக்கு உணவளித்து மகிழ்ந்திருக்கிறார். அதேபோல தெருவில் இருக்கும் நாய்களுக்கும் சாப்பாடு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் நாய்களுக்கு சாப்பாடு கொடுத்தவர்கள் அந்த தட்டில் மகாலட்சுமியின் புகைப்படம் அடங்கிய ஒரு நோட்டீசையும் வைத்து கொடுத்திருக்கிறார்கள்.

இது நாய் அந்த நோட்டீசை படித்து பார்த்து மகாலட்சுமிக்கு வாழ்த்து சொல்வதற்காக இப்படி செய்தார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுபோல இன்னும் ஒரு சிலர் நாய்க்கு சாப்பாடு வைக்கிறது எல்லாம் நல்ல செயல் தான் ஆனால் அதில் அந்த நோட்டீசை வைப்பதால் அதை தெரியாமல் நாய் சாப்பிட்டால் நாய்க்கு உடல்நிலை கெட்டுப் போய்விடும். அதனால் இப்படி யாரும் நாய்க்கு உணவு வைக்கும்போது பேப்பரையும் வைக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications