மஞ்சுளாவுக்கு ஆசை.. வனிதாவின் காதல்ல விழுந்த மண்? இளையராஜா கிட்ட செண்டிமென்ட்டே எடுபடாது: பிரபலம்
சென்னை: நான் இளையராஜா அவர்கள் வீட்டிற்கு மருமகளாக செல்ல வேண்டியது. ஒரு சில விஷயங்களை நான் ஓபன் ஆக வெளியில் பேச முடியாது. அப்படி பேசினால் அது தேவையில்லாத பிரச்சினை என்றும் அழுது கொண்டே நடிகை வனிதா பேசியிருந்தார்.. இது மிகப்பெரிய பரபரப்பை உண்டுபண்ணியிருப்பதுடன், இணையத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. இளையராஜா மருமகளாக சென்றிருக்க வேண்டியது என்று வனிதா சொல்ல என்ன காரணம்? என்பது குறித்தும் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், இளையராஜா ஏற்கனவே ஏழரையை இழுத்துட்டு இருக்கிறார்.. எஸ்பிபி முதல் ரஜினி, அஜித் என யாரையுமே விடாமல், உரிமம் கோரி வருகிறார்.. இளையராஜா பணம் கேட்பார் என்று தெரிந்தும்கூட, வனிதா ஏன், அவரது பாடலை பயன்படுத்தணும்?

இளையராஜாவிடம் அனுமதி கேட்டதற்கு ஓகே சொன்னதாக வனிதா சொல்கிறார். ஆனால், இதற்கு ஏதாவது ஆதாரம் தேவைப்படும்.. நட்பு ரீதியாக வனிதா, அந்த பாட்டை பயன்படுத்தியிருக்கலாம்.. வனிதா எங்கேயிருந்தாலும், டமால் டுமீல் என சர்ச்சை வெடிக்கும்.. ஆனால், இந்த முறை வனிதாவே இளையராஜாவிடம் மாட்டிக் கொண்டார்.. கண்ணீருடன் பேட்டி தரும் சூழ்நிலையும் வந்துவிட்டது.
காதலித்திருக்கலாம்
விஜயகுமார், இளையராஜா என இரு தரப்பிலுமே குடும்ப நண்பர்கள், வெறும் நட்பு ரீதியாக மட்டுமேதான் பழகியிருக்கிறார்கள்.. காதல் என்ற ரேஞ்சுக்கெல்லாம் பிள்ளைகள் சென்றிருக்கவே முடியாது..
ஆனால், இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போக வேண்டும் என்று வனிதா விரும்பியிருக்கிறார் போல..பெரிய நடிகையின் மகள் என்பதாலும், குடும்ப நண்பரின் மகள் என்பதாலும், இளையராஜா மனைவி வனிதாவிடம் லாக்கர் சாவியை தந்து, ஏதாவது எடுத்துவர சொல்லியிருக்கலாம்.
கார்த்திக் ராஜா சீரியஸாக இருக்கக்கூடியவர்.. ஜோவியலாக பேசக்கூடியவர் யுவன் என்பதால், அவரை வனிதா விரும்பியிருக்கலாம்.. ஒருகட்டத்தில் வனிதாவும் நடிக்க வந்து, வாய்ப்புகள் வரத் துவங்கிவிட்டதால், எதுக்கு இப்பவே கல்யாணம்? என்று வனிதாவின் அம்மாவும் சொல்லியிருக்கலாம்.
நடிகை மஞ்சுளா
ஏனென்றால், திருமணம் செய்து அனுப்புவதைவிட, மகளை பெரிய நடிகையாக்க வேண்டும் என்றுதான் மஞ்சுளாவின் எண்ணமாக அப்போது இருந்தது.. ஆனால், வனிதா நடித்த எந்த படங்களும் அப்போது சரியாக ஓடவில்லை.. மற்றபடி வனிதாவை யுவன், விரும்பினாரா தெரியாது.. வனிதா தரப்பில் மட்டுமே இப்படியான எண்ணம் இருந்து, அது பேச்சுவார்த்தையோடு முடிந்துபோயிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்
அதேபோல, King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள எழுத்தாளர் ராஜகம்பீரன், "வனிதா தன்னுடைய படத்துக்கு வேறு ஒரு இசையமைப்பாளரை பயன்படுத்தியிருக்கிறார்.. பிறகு எதற்காக இளையராஜா இசையை எடுக்க வேண்டும்? அவரது பாட்டுதான் தேவை என்றால், முறையான அனுமதி பெற வேண்டும் என்று ஏற்கனவே இளையராஜா சொல்லிட்டார்..
ஏன் அவர் பாட்டையே எடுக்கறீங்க?
இளையராஜாவை நேரில் பார்த்து அனுமதி வாங்கியதாக வனிதா சொல்கிறார்.. ஆனால், பாட்டை பயன்படுத்தியதற்கான பணத்தை, இளையராஜாவுக்கு தந்தாரா? தன்னுடைய பாட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று பலமுறை சொல்லியும், ஏன் திரும்ப திரும்ப அவர் பாட்டையே எல்லாரும் பயன்படுத்தறாங்க?
விஜயகுமார் என்ற புகழ்பெற்ற நபரின் மகள் வனிதா. பொதுவாக எல்லா கலைஞர்களும், ஒருவருக்கொருவர் குடும்ப ரீதியாக பழகுவார்கள்.. நல்லது கெட்டது, வீட்டு விசேஷங்களில் இரு தரப்பிலுமே கலந்து கொள்வது இயல்பானது..
சென்ட்டிமென்ட், டிராமா எடுபடாது
அந்தவகையில், விஜயகுமார், இளையராஜா குடும்பத்திலும் இப்படியான நட்பு தொடர்ந்துள்ளது.. அந்த நேரத்தில், சம்பந்தம் செய்வதற்கும் பேச்சுவார்த்தை நடந்து, அது நடக்காமலும் போயிருக்கலாம். இதைத்தான் வனிதா சுட்டிக்காட்டுவதாக தெரிகிறது..
ஆனால் ஒரு விஷயம் சட்டப்பூர்வமாக அணுகப்பட்டதற்கு பின்பு, இதையெல்லாம் வனிதா சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.. அதாவது கறாராக ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டியதற்கு பின்பு, எதிர்தரப்பில் நெகிழ்ச்சியாக பேசுவது, சரிகிடையாது.. அது எந்தவகையிலும் பயன்படாது. சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டுமே தவிர, சென்ட்டிமென்ட், டிராமா இது எதுவுமே இளையராஜாவிடம் எடுபடாது" என்று தெரிவித்திருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications