10 வருஷம் குழந்தை இல்ல.. நான் பண்ணுன தப்பை யாரும் செய்யாதீங்க.. நடிகை மந்திரா எமோஷனல்
சென்னை: நடிகர் அஜித், விஜய் போன்ற பிரபலங்களோடு நடித்த நடிகை மந்திரா தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அப்போது தனக்கு 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் பட்ட கஷ்டம் குறித்தும் தான் செய்த தவறு யாரும் செய்யக்கூடாது என்றும் வேண்டுதல் வைத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
90s காலகட்டத்தில் ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்தாலும் பெயர் சொன்னதும் டக்கென்று மனதிற்குள் வரும் அளவிற்கு ஆழமாக பதிந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை மந்திரா. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். சிம்ரன், ரம்பா, தேவயானி வரிசையில் பிரபலமடைந்து இருக்க கூடிய நடிகைகளில் ஒருவர்தான்
இவர்.

அஜித்தோடு ரெட்டை ஜடை வயசு, விஜய்யுடன் லவ் டுடே படங்களில் நடித்த மந்திரா முதல் முதலாக தமிழில் ஹீரோயினாக நடித்தது பிரியம் என்ற திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தில்ரூபா பாடல் பலருடைய ஃபேவரிட். அதில் இவருடைய டான்ஸ் அவ்வளவு எதார்த்தமாக இருக்கும். அதுபோல லவ் டுடே திரைப்படத்தில் விஜய்க்கு நல்ல பெண் தோழியாக இவர் அருமையாக நடித்திருப்பார்.
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த மந்திரா பிறகு தமிழ் சினிமாவை விட்டு விலகி விட்டார். தெலுங்கில் மட்டும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அஜித்துக்கு ஜோடியாக நடித்த மந்திரா அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து அஜித்தின் ராஜா திரைப்படத்தில் ஒரு குத்து பாடலுக்கும் டான்ஸ் ஆடி இருந்தார். தற்போது தெலுங்கில் சீரியல் மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் பேட்டிகளில் பேசி இருக்கிறார்.
அப்போது தன்னுடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி மந்த்ரா பேசுகையில் நான் 21 வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். அந்த நேரத்தில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் தேவையா என்று சிலர் கேட்டார்கள். ஆனால் நம்முடைய திருமண வாழ்க்கைக்கு சரியான துணையை பார்த்தால் உடனே திருமணம் செய்வதில் தப்பு இல்லை என்று எனக்கு தோன்றியது.
என்னுடைய கணவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். அவரை போல அவருடைய குடும்பத்தினரும் என்னுடைய முடிவுகளுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்கள். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அவர்கள் மறுத்து பேசியது கிடையாது. அதனால் தான் என்னால் நினைத்த நேரத்தில் சினிமாவில் வர முடிந்தது. திருமணத்திற்கு பிறகு பத்து வருடங்களாக நான் குழந்தை இல்லாமல் இருந்தேன்.
முதல் மூன்று வருடங்களுக்கு குழந்தை வேண்டாம் என்று தள்ளிப் போட்டோம் ஆனால் அது பிறகு நாங்கள் நினைத்த நேரத்தில் குழந்தை கிடைக்கவில்லை. பத்து வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கு பிறகு தான் எனக்கு மகள் பிறந்தாள். இப்போது என்னுடைய மகள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். அதனால் திருமணம் முடிந்தால் உடனே குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்வார்கள் அது உண்மைதான்.
யாரும் நான் செய்த தப்பை செய்யக்கூடாது என்பது என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். கல்யாணத்திற்கு பிறகு குழந்தை இல்லை என்பதால் வருத்தமாக இருக்கும். அப்போது நான் என்னுடைய கணவர் ஊருக்கு தான் செல்ல விரும்புவேன். என்னுடைய கணவர் ஊர் ஆந்திராவில் ஒரு கிராமம் தான். அந்த கிராமத்திற்கு செல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் சிட்டியில் பிறந்து சிட்டியில் வளர்ந்ததால் எனக்கு கிராமத்தில் இருக்கும் மனிதர்களும் அவர்களுடைய அன்பும் வித்தியாசமாக இருந்தது.
அதனாலே நான் அடிக்கடி அங்கு சென்று விடுவேன். குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி விட்டதால் நான் நடிப்பை விட்டு கொஞ்ச நாள் விலகி இருந்தேன். சிலர் வந்து என்னிடம் நடிக்க கேட்பார்கள் நான் இப்போ இருக்கிற நிலைமையில் என்னால் முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தேன். பிறகு என்னுடைய மகள் பள்ளிக்கு செல்ல தொடங்கிய பிறகுதான் நான் மீண்டும் உடல் எடையை குறைத்து நடிக்க வந்திருக்கிறேன்.
தமிழில் எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிக்க ரெடி தான் என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார். அதுபோல சில தினங்களுக்கு முன்பு அவருடைய கணவர் மற்றும் குழந்தையோடு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்த மந்திரா அங்கு அவரை அடையாளம் கண்டு ரசிகர்கள் செல்பி எடுக்க கேட்டது போது அவர்களோடு சந்தோஷமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications