சிம்ரனை பார்க்கும் போது அந்த வருத்தம் இருக்கு! ரவிக்குமார் அவ்வளவு சொன்னாரு, நான் கேட்கல!- மந்த்ரா
சென்னை: நடிகை மந்த்ரா தான் கே எஸ் ரவிக்குமார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டேன், அந்தப் படத்தில் நடித்து நடிகை சிம்ரன் பெயர் வாங்கி பிரபலமானதால் அந்தப் படத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கு என்று மந்த்ரா பேசியிருக்கிறார்.
90ஸ் காலகட்டத்தில் அறிமுகமான ஒரு சில நடிகைகள் அப்போது கதாநாயகியாக நடித்து இப்ப வரைக்கும் சினிமாவில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் தேவயானி, சிம்ரன், ஜோதிகா என பலரை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் நடிகை மந்திராவும் இருந்திருக்க வேண்டியவர் ஆனால் அவர் திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டு விலகிப் போய்விட்டார்.

தமிழில் லவ் டுடே திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாகவும், ரெட்டை ஜடை வயசு படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும் நடித்த மந்திரா தற்போது சின்னத்திரை மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். மந்திரா தெலுங்கில் ராசி என்ற பெயரில் தான் சினிமாவில் அறிமுகமாக இருந்தார். அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்த அவர் அதற்கு பிறகு மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
தமிழில் 14 வயதிலேயே பிரியம் என்ற திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மந்த்ரா பிரியம் திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகியாக தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் தற்போதைய பேட்டியில் பேசும்போது இயக்குனர் ரவிக்குமார் சாருக்கு என்னுடைய நடிப்பு ரொம்பவே பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் நான் கொண்டாட்டம் படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் ஒரு பாடல் சூட் எடுத்து முடித்ததும் நான் வழக்கம்போல ஹோட்டல் ரூமுக்கு வந்து விட்டேன். அந்த ரூமில் நானும் என்னுடைய அப்பாவும் இருந்தோம்.
அங்கு திடீரென்று காலிங் பெல் அடித்தது. நாங்கள் கதவை திறந்து பார்த்தால் கே எஸ் ரவிக்குமார் நின்று கொண்டிருந்தார். அவர் நாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் எங்கள் அறைக்குள் சென்று விட்டார். அங்கிருந்த ஒரு பேப்பரையும் பென்சிலையும் எடுத்து அதில் சில தேதிகளை குறிப்பிட்டு என்னுடைய அடுத்த படத்தில் மந்த்ரா தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் அதற்காக நான் இதில் சில தேதிகளை எழுதி இருக்கிறேன் அனைத்து தேதியும் எனக்கு வேண்டும் என்று கேட்டார்.
அந்த நேரத்தில் நான் தெலுங்கில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நான் ஒரே நாளில் மூன்று படங்களுக்கான சூட்டிங்கில் ஷிப்ட் வழியாக நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் ரவிக்குமார் சார் கொடுத்த தேதிகளில் ஒரு தேதியில் கூட என்னால் அட்ஜஸ்ட் செய்து அவருக்கு கொடுக்க முடியவில்லை.

அதற்கு பிறகு தான் அவர் சொன்ன படத்தில் எனக்கு பதிலாக சிம்ரன் நடித்தார். அந்த படம் வேறு எந்த படமும் இல்லை "நட்புக்காக" திரைப்படம் தான். அந்த திரைப்படம் சிம்ரனுக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது. உண்மையில் சிம்ரனுக்கு கொடுத்த வாய்ப்பு எனக்கானது. அந்த படம் சிம்ரனின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
ஒருவேளை நான் அந்த படத்தில் நடித்திருந்தால் என்னுடைய கேரியரும் வேறு தளத்திற்கு சென்றிருக்குமோ என்ற எண்ணம் எனக்குள் அடிக்கடி வரும். அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் வருத்தமாகவும் இருக்கும் என்று மந்த்ரா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications