அப்பவே மாசம் ஒரு லட்சம் சம்பாதித்தேன்.. ஆனால் அவரால் அது அழிஞ்சிடுச்சி.. நடிகை நீலிமா எமோஷனல்
சென்னை: நடிகை நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் மற்றும் சந்தோஷங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அப்போது தான் பல வருடங்களுக்கு முன்பே மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிச்சேன் என்றும் அந்த பணத்தை தன்னுடைய அப்பா சீரழித்து விட்டார் என்பதை பற்றியும் பேசி இருக்கிறார்.

அதோடு தான் கடைநிலையிலிருந்து மீண்டும் எப்படி ஜெயித்து முன்னேறினேன் என்பதை பற்றியும் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் நடிகை நீலிமா ராணி கமல்ஹாசன் நடித்து பெரிய அளவில் ஹிட் அடித்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அதற்கு பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் டும் டும் டும் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு துணை கதாநாயகியாக பல படங்களில் நடித்திருந்தார்.
அது மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி சீரியல்களிலும் நடித்திருந்தார். இதுவரைக்கும் 15 -க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நீலிமா நடித்திருக்கிறார். அதோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, ஜீ தமிழில் தலையணை பூக்கள் போன்ற சீரியல்களில் நடித்தும் இருந்தார்.
அதுபோல ஒரு சில சீரியல்களை இயக்கியும் இருந்தார். இந்த நிலையில் நீலிமா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சந்தோஷங்கள் துக்கங்கள் குறித்து பேசி இருந்தார். அதோடு அந்த பேட்டியில் தன்னுடைய தந்தை குறித்தும் பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நான் ஆரம்பத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து கொண்டிருந்தேன்.
என்னுடைய அந்த பணத்தை எல்லாம் என்னுடைய அப்பா சூதாட்டத்தில் விட்டுவிட்டார். அது எனக்கு கஷ்டமாக இருந்தது. எப்படி சமாளிக்க போறேன்னு தெரியாத சூழ்நிலையில் தான் நான் ஆரம்பத்தில் இருந்தேன். ஆனால் ஒன்று நான் சொல்ல விரும்புகிறேன். தோல்விகள் தான் வெற்றியின் படிக்கட்டுங்கள்.
ஆனால் அந்த இடத்தில் நான் தளர்ந்து சோர்ந்து போய் அய்யய்யோ அப்பா இப்படி பண்ணிட்டாங்களேன்னு நினைத்திருந்தால் எப்படி வாழ போறோம் எப்படி என் தம்பியை படிக்க வைக்க போகிறோம் என்று நினைத்து இருந்தால் நான் இன்று இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது.

ஆனால் அந்த இடத்தில் தைரியத்தை விட்டு விடவில்லை. இந்த தைரியத்தை என்னுடைய அப்பா தான் எனக்கு சொல்லித்தந்தார். தன்னம்பிக்கை, தைரியத்தோடு வாழ வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு நான் ஒரு வாடகை வீட்டுக்கு போய் அந்த வாடகை வீட்டை வாங்கும் அளவிற்கு நம்பிக்கை வந்தது.
அந்த தைரியத்திற்கு காரணமும் அந்த தோல்விதான். வெற்றி தோல்விகள் எல்லாமே நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் அதை நாம் எப்படி பார்த்துக் கொண்டு அதிலிருந்து வெளியே வருகிறோம் என்பது தான் நாம் பார்க்கக்கூடிய விஷயம் என்றும் அந்த பேட்டியில் நீலிமா பேசி இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications