கல்யாணம் முடிந்து மூன்று வருஷம்.. மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த நடிகை நிக்கி கல்ராணி.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை நிக்கி கல்ராணி நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எட்டு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இன்று தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு நிக்கி கல்ராணி நெகிழ்ச்சியாக போஸ்ட் போட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சினிமா மற்றும் சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் பலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஜோடியும் பலருக்கும் ஃபேவரைட் தம்பதிகளாக வலம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக திரைப்படங்களில் நடித்திருந்தனர். ஆனால் ஒன்றாக நடித்த திரைப்படம் வெளியான பிறகுதான் தங்களுக்குள் காதல் ஏற்பட்டது என்று நிக்கி மற்றும் ஆதி இருவருமே பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்கள்.

எட்டு வருட காதல்
எட்டு வருட காதலுக்கு பிறகு கடந்த 2022 ஆம் வருடம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்பு பிரம்மாண்டமாக திருமணம் செய்திருந்தனர். இவர்களுடைய காதல் திருமணத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு நிக்கி அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. ஆதி மட்டும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
காதல் திருமணம்
இந்த நிலையில் நிக்கி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் "என்னுடைய சிறந்த நண்பராகவும், என்னை சிரிக்க வைத்த தலைமை நிர்வாக அதிகாரியாகவும், என்னுடைய எல்லா சோகங்களையும், சிரிப்பாக மாற்றி எனக்கு சப்போர்ட்டாக இருப்பதற்கு நன்றி ஆதி" என்று நிக்கி கூறி இருக்கிறார்.
நிக்கி கல்ராணி போஸ்ட்
அதோடு "இந்த மூன்று வருட சிரிப்பு, காதல் மற்றும் இரவு நேர சிற்றுண்டி எல்லாமே எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. நீதான் என்னுடைய பாதுகாப்பான இடம். என் மனித ஹீலர், நான் வயதாகி முட்டாள்தனமாக மாற விரும்பும் இடமும் நீதான்" என்று நிக்கி கல்ராணி ஆதியை டேக் செய்து இருக்கிறார். அதாவது இன்று நிக்கி மற்றும் ஆதியின் திருமண நாளாம். அதனால் தன்னுடைய கணவர் மீது தனக்கு இருக்கும் காதலை நிக்கி வெளிப்படுத்தி இருக்கிறார்.
காதல் உருவான இடம்
இவர்களுக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், குஷ்பூ, நடிகை அப்சரா, விஜே கிகி உட்பட பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். நிக்கி மற்றும் ஆதி இருவரும் திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த போதுதான் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாம். ஆதியின் கண்களைப் பார்த்து நீங்கள் மஸ்காரா போட்டு இருக்கீங்களா என்று நான் கேட்டேன், அவர் சிரித்துக் கொண்டிருந்தார். பிறகு எங்களுக்குள் இயல்பான பேச்சு வார்த்தை நடந்தது அதற்கு பிறகு தான் ஆதியின் கேரக்டர் எனக்கு பிடிக்க தொடங்கியது என்று நிக்கி கூறி இருக்கிறார்.

லவ் ப்ரோபோசல்
மேலும் நிக்கி கல்ராணி பேசும் போது, எட்டு வருடங்களாக நாங்கள் டேட்டிங் செய்து கொண்டு இருந்தாலும் ஒரு நாள் கூட ஆதி என்னிடம் லவ் ப்ரொபோஸ் செய்யவே இல்லை. ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் வைர மோதிரம் தந்து என்னிடம் ப்ரபோஸ் செய்தார். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது என்று நிக்கி நெகிழ்ந்து இருக்கிறார்.
நிச்சயதார்த்த சம்பவம்
அதுபோல நிச்சயதார்த்தத்தின் போது அவர் எனக்கு மோதிரம் போட்டதும் நான் அவருக்கு மோதிரம் போட்டுவிட்டேன். அவருடைய நெற்றியில் முத்தம் கொடுக்கப் போனேன், ஆனால் அவர் வேண்டாம் என்று தள்ளிப் போய்விட்டார். குடும்பத்தினர் முன்பு ஆதி செய்த செயல் எனக்கு அவரை மிகவும் பிடிக்க வைத்தது என்று ஒரு பேட்டியில் நிக்கி கல்ராணி பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications