இந்தியன் 2க்கு பிறகு நிறைய bully பண்றாங்க.. அவங்களுக்கு உண்மை தெரியாது.. பிரியா பவானி சங்கர் எமோஷனல்
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் தன்னைப் பற்றி சமூக வலைதளத்தில் பரவி வரும் நெகட்டிவ் கருத்துகள் குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் அவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் பிரியா பவானி சங்கர் ராசி இல்லாத நடிகை என்று சிலர் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து தன்னுடைய கருத்தை பிரியா பவானி சங்கர் எமோஷனலாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஒரு சிலர்தான் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் பல நடிகை நடிகர்கள் வெள்ளித்திரையில் புகழின் உச்சத்தில் இருந்து பிறகு அங்கே மார்க்கெட் சரிய தொடங்கியதும் சின்னத்திரையை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். ஆனால் இப்போது பல நடிகைகள் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி அதில் கிடைத்த பிரபலத்தின் மூலமாக வெளித்திரையில் அறிமுகம் ஆகின்றனர். ஒரு சில நடிகைகள் அங்கேயும் கொடி கட்டி பறந்து வருகின்றனர்.

அதில் ஒருவர் தான் ப்ரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளர் ஆக இருந்து பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து அதற்கு பிறகு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற இவருடைய முகம் பலருக்கும் ஃபேவரைட். அதோடு எதார்த்தமான பேச்சு மற்றும் ஹோம்லியான லுக் இவருக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கிறது.
அதனாலேயே இவருக்கு தொடர்ச்சியாக பல சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சமீபத்தில் ஒரு சில திரைப்படங்கள் இவருடைய உழைப்பிற்கு தகுந்த வகையில் வெற்றி அடையாமல் இருக்கிறது. அதனாலேயே சிலர் பிரியா பவானி சங்கர் ராசி இல்லாத நடிகை என்று முத்திரையை குத்தி மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். இது எந்த அளவிற்கு அவரை வருத்தம் அடைய செய்யும் என்று இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் யோசிப்பதே இல்லை.
இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் இது பற்றி முதல் முறையாக தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தேன். இந்த திரைப்படத்தில் நான் நடித்த பிறகு என்னை அதிகமான bully பண்ணுறாங்க. எதற்காக சிலர் என்னை பற்றி தப்பு தப்பாக கமண்ட் போடுறாங்கன்னு எனக்கு தெரியவில்லை. அதெல்லாம் என்ன பாதிக்குமா? என்று கேட்டால் கண்டிப்பாக என்னை பாதிக்கும்.
நான் இதுபோன்று நெகட்டிவ் ஆக பேசுபவர்களை பார்த்து பயப்படுகிறேன். எதற்காக இவர்கள் நம்மை இப்படி டார்கெட் செய்கிறார்கள் என்று எனக்குள்ளேயே ஒரு கேள்வி எழுகிறது. நான் யாரையும் பற்றி தரக்குறைவாக பேசவில்லை, யாரிடமும் தப்பாக நடந்து கொள்ளவில்லை. நான் என்னுடைய வேலையை செய்கிறேன். ஆனால் எல்லோருக்கும் அது வெற்றியில் முடியும் என்று சொல்ல முடியாது.
எனக்கு சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம் தான். ஆனால் ஒரு சிலர் என்னை காயப்படுத்தும் வகையிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தபோது நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன்.
இதில் கமல்ஹாசன் இருக்கிறார் அவரோடு இயக்குனர் சங்கரும் இருக்கிறார். இவ்வளவு பெரிய பிரபலங்கள் இருக்கும் திரைப்படத்தில் நமக்கு சிறிய கேரக்டர் கிடைத்தாலே பெரிது. ஆனால் இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டேன். இப்போதும் அதற்காக வருத்தப்படவில்லை. ஆனால் என்னுடைய வேலையை நான் சரியாக செய்து கொண்டிருக்கும் போது என் மனதை வருத்தமடைய செய்யும் வகையில் சிலர் பேசுவதால் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று எனக்கே தெரியவில்லை என்று அந்த பேட்டியில் பிரியா பவானி சங்கர் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications