பொடுகை போக்க ரச்சிதா மகாலட்சுமி செய்த ஈசி டிப்ஸ் இதுதானா? இத்தனை காரணங்களும் இருக்கிறதா?
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி தான் எப்படி எளிமையாக தன்னுடைய தலைமுடியை பராமரித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
பலருக்கும் இருக்கும் பொடுகு பிரச்சனைக்கும் எளிமையான வீட்டு வைத்திய முறையை மகாலட்சுமி கூறியிருக்கிறார்.
தலைமுடி அலை அலையாக காற்றில் அசைந்தாட இந்த எளிமையான குறிப்புகளை பாலோ பண்ணினால் போதுமாம். அதை பார்க்கலாம்.

சமீபத்தில் ஆண்களையும் பெண்களையும் அதிகமாக வாட்டி வதைத்து வரும் ஒரு பிரச்சனை என்றால் அது தலைமுடி பிரச்சனை தான். இது இல்லாதவர்களே இல்லை என்று சொல்ல முடியும்.. பலருக்கும் இப்போது இளம் வயதிலே நரைமுடி வந்து விடுகிறது. தலை முடி எல்லாம் கொட்டி போய் சொட்ட தலையாக மாறிவிட்டதே என்று கண்ணாடி முன்பு நின்று பலர் கண்ணீர் விடுகின்றனர்.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் பலருக்கு இது இயற்கை வழியாக வந்த பொழுதிலும் தற்போது எடுத்துக் கொள்ளும் உணவு முறையாலும், பழக்க வழக்கங்களாலும் தான் அதிகமானோருக்கு முடி கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது. ஆனால் இருக்கும் முடியை இழந்து விடாமல் அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பலர் போராடிக் கொண்டிருக்கின்றனர். தலைமுடி பிரச்சனையால் பலர் திருமண வாழ்க்கை கூட கை கூடாமல் தவித்து வருபவர்களும் இருக்கதான் செய்கின்றனர்.
தற்போது அதற்கெல்லாம் தீர்வு சொல்லும் விதமாக தான் அனுபவபூர்வமாக உணர்ந்த விஷயங்களை சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி கூறியிருக்கிறார். இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக சின்னத்திரையில் பிரபலமடைந்ததாலே இப்ப வரைக்கும் இவரை மீனாட்சி என்று தான் அதிகமான ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். கர்நாடகாவை சேர்ந்த இவர் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தற்போது திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய தலைமுடியை பாதுகாத்துக் கொள்ளவும், பொடுகை போக்க என்னவெல்லாம் செய்யலாம் என்றும் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
பொடுகை விரட்டுவதற்கு ரச்சிதா எடுத்துக் கொள்ளும் முதல் விஷயம் கருவேப்பிலை எண்ணெய் தானாம். வீட்டிலேயே தயார் செய்த கறிவேப்பிலை எண்ணையை வாரத்திற்கு இரண்டு முறை தடவி கொள்வாராம். அது போல நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் தலைமுடிக்கு அவ்வளவு நல்லது என்று பலரும் கூறியிருப்பார்கள். அதையே இவரும் செய்வாராம். வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து விடுவாராம்.

அதுமட்டுமில்லாமல் பலரும் முகத்திற்கு தான் பச்சைப்பயிறு யூஸ் பண்ணுவார்கள் ஆனால் ரச்சிதா பொடுகை போக்குவதற்காக பச்சைபயிறும் வெந்தயத்தையும் ஊறவைத்து அந்த பேஸ்ட்டை தலையில் தடவி பின்பு குளிப்பாராம். அதுபோல முட்டையின் வெள்ளை கருவை முடி மற்றும் வகிட்டில் தடவி குளித்தால் குளிர்காலத்தில் கூட பொடுகு வராது என்றும் கூறியிருக்கிறார்.
அதுபோல இயற்கையாக கிடைக்கும் கற்றாழை ஜெல்லை தலைமுடியில் தடவி வந்தால் முடி திக்காக வளரும், பொடுகு பிரச்சனையும் இருக்காது என்று தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இவர் கூறியிருக்கிறார்.
-
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
மாநகரம் ஸ்ரீ-யா இது? மீண்டும் பழைய நிலை, மாஸ் லுக்.. இளம் பெண்ணுடன் உருக்கமான போஸ்ட்! -
பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications