காலையில் தான் போன் செய்தேன்..சிரித்து, சண்டையிட்டு.. மனோபாலா மறைவு குறித்து ராதிகா கண்ணீர் பதிவு
சென்னை: பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வந்த மனோபாலா உடல்நல குறைவு காரணமாக சில மணி நேரத்திற்கு முன்பு மரணம் அடைந்திருக்கிறார்.
அவருடைய திடீர் மரணத்திற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மனோபாலாவுடன் நடித்த நடிகை ராதிகா, அவர் பற்றி கண்ணீர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் மனோபாலா தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜாவின் சிஷ்யனாக அவர் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் துணை இயக்குனராக அறிமுகம் ஆகி இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.
கடைசி காலத்தில் ஆன்மீகத்தை தேடி சென்ற மனோபாலா..காரணம் இதுதானா?யாரும் அறிந்திடாத தகவல்கள்
அவருடைய ஸ்பெஷல் என்னவென்றால் முன்னணி பிரபலமாக இருந்தாலும் ரசிகர்கள் முன்பு எந்தவித பந்தாவும் இல்லாமல் மிகவும் தன்மையாகவும் அன்பாகவும் பழகக்கூடிய கேரக்டர் தான் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய 69 வயதில் 16 வயது பையன் போல எப்போதும் ஜாலியாகவும் எனர்ஜிக்காகவும் இருந்தவர்.
இவருக்கு கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறிய மனோபாலா திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாகவே மனோபாலா உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில் நோயின் தாக்கம் அதிகரித்ததால் வீட்டில் இருந்து அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி மனோபாலா உயிரிழந்திருக்கிறார். இவருடைய இழப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரை உலக பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த நிலையில் இவரோடு நடித்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ராதிகா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மனோ பாலா உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். இன்று காலை தான் போன் செய்து அவரை எங்கு சென்று பார்க்க வேண்டும் என்று விசாரித்தேன்.
நம்ப முடியாத அதிர்ச்சி, தொழில் ரீதியாகவும் சில தனிப்பட்ட அளவிலும் அவருடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். நாங்கள் இருவரும் கற்றுக் கொண்டோம், சிரித்தோம், சண்டையிட்டோம், ஒன்றாக சாப்பிட்டோம், பல விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடி இருக்கிறோம். அவர் ஒரு திறமையான நபர். எல்லா சூழ்நிலையிலும் நன்றாக பழகினார். நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் என்று, அவர் தென்றல் சுடும் எனும் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ராதிகாவுக்கு சீன் சொல்லித் தந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications