சன் டிவி சித்தியில் தொடங்கிய சீரியல் வாழ்க்கை.. இப்போ பொதிகைக்கு போன ராதிகா.. முதல் நாளே இப்படியா?
சென்னை: நடிகை ராதிகா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். அதுவும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் நடித்து வந்த ராதிகா இப்போது பொதிகை டிவியில் புத்தம் புது சீரியலில் நடிக்க இருக்கிறார். அந்த சீரியல் இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
வெள்ளி திரையில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்த ராதிகா முதல்முறையாக சின்னத்திரையில் சீரியலில் நடித்து பல சினிமா நடிகைகளுக்கும் சின்னத்திரையில் மக்களின் மத்தியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்க காரணமாக மாறி இருந்தார்.

அதுவும் ராதிகா நடித்த சித்தி, அண்ணாமலை போன்ற சீரியல்கள் இப்போதும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்போது சீரியல்களில் அதிகமாக ராதிகா நடிக்காமல் சினிமாவில் மட்டுமே கவனத்தை செலுத்தி வரும் நிலையில் மீண்டும் சின்னத்திரையை நோக்கி அடி எடுத்து வைத்திருக்கிறார்.
கண்ணு முன்னாடி சாவை பார்த்தேன்.. கே.எஸ் ரவிக்குமாரால் வந்த வினை.. சரத்குமார் சொன்ன பகீர்
அந்த வகையில் பொதிகை தொலைக்காட்சியில் HD வடிவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் பொதிகை டிவியில் பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அது போல தனியார் தொலைக்காட்சி சேனல்கள் இல்லாத காலத்தில் ஒரே தொலைக்காட்சியாக இருந்த துர்தர்ஷன் தொலைக்காட்சி பிறகு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் களின் பசுமையான நினைவில் இடம் பிடித்திருக்கும்.
அதில் ஆகஸ்ட் 10, தமிழ் தாத்தா, அதுபோல நடிகர் விவேக் நடித்த அக்கரை பச்சை, விசாலம், அலிஃப் லைலா, சக்திமான், விஷ்ணு புராணம், மகாபாரதம், ஜெய் அனுமான் போன்ற பல நெடுந்தொடர்கள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதற்கு பிறகு பொதிகை சேனலுக்கு போட்டியாக பல தனியார் சேனல்கள் வந்த பிறகுதான் பொதிகை சேனல் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் பழமையாக தொடங்கிவிட்டது. இதனால் அதிகமானோர் அந்த சேனலை விரும்பி பார்ப்பதை விட்டுவிட்டு ஹெச்டி குவாலிட்டியில் இருக்கும் தனியார் தொலைக்காட்சியை விரும்பி பார்க்க தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் இப்போது மீண்டும் பொதிகை தொலைக்காட்சி HD வடிவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதை தொடர்ந்து மீண்டும் இந்த சேனலை ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைவதற்காக பொதிகை டிவியில் பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் ராடான் தயாரிப்பில் தாயம்மா குடும்பத்தார் என்ற சீரியல் இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நடிகரால் தான் பிரியங்காவின் லைப்பே போச்சா? வருத்தத்தோடு அவருடைய அம்மா பகிர்ந்த தகவல்
இந்த சீரியலில் சந்திரமுகி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை பொம்மி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அது போல இன்னொரு சீரியலில் நடிகை சுகன்யா நடிக்கிறார். அதுபோல தாயம்மா சீரியல் இரவு எட்டு முப்பது மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் எல்லா சீரியல்களும் பொதுவாக திங்கள்கிழமை முதல் தொடங்கப்படும். ஆனால் தாயம்மா குடும்பத்தினர் சீரியல் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது.
இந்த சீரியல் ராதிகாவிற்க்கு சித்தி சீரியல் போன்று அமையுமா? இல்லையா? என்பது பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது வரைக்கும் வெளியான ப்ரோமோக்களில் தாயம்மாவாக ராதிகா சரத்குமார் ஒரு குடும்பத்தையே கட்டிக்காக்கும் அமைதி சொரூபமாக இருக்கிறார். கிராமத்தில் ஒரு குடும்பத் தலைவியாக இருக்கும் தாயம்மா தன்னுடைய குடும்பத்தில் அமைதி, பாசம் நிலைத்து நிற்பதற்காக ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தையும் ஊர் மக்களையும் பார்த்துக் கொள்ளும் தாயம்மா மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications