துயரம்! நடிகர் டேனியல் பாலாஜி பற்றி நடிகை ராதிகா சரத்குமார் வெளிப்படையாக வெளியிட்ட பதிவு
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமாகி இருந்தார். இன்று அவருடைய உடல் இன்னும் சில மணி நேரத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் டேனியல் பாலாஜி குறித்து பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் நடிகை ராதிகா சரத்குமார் டேனியல் பாலாஜி பற்றி வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
டேனியல் பாலாஜி வெள்ளித் திரையில் பல திரைப்படங்களில் நடித்து மிரட்டி எடுத்திருந்தாலும் அவர் அறிமுகமானது சன் டிவியில் ஒளிபரப்பான "சித்தி" சீரியல் மூலமாகத்தான். சித்தி சீரியலில் கதாநாயகியாக நடிகை ராதிகா சரத்குமார் தான் நடித்திருந்தார். அதுபோல அவருடைய ராடன் நிறுவனம்தான் அந்த சீரியலை தயாரித்திருந்தது.

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் முதல்முறையாக அறிமுகமான டேனியல் பாலாஜி அதைத் தொடர்ந்து பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் இன்று அவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்திருக்கிறார். அது குறித்து ராதிகா சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், Unbelievable !டேனியல் பாலாஜி எங்களுடைய ராடான் நிறுவனம் தயாரித்த சித்தி சீரியலில் அறிமுகமான ஒரு திறமைமிக்க நடிகர்.
நெகட்டிவ் கேரக்டரில் தான் அவர் அந்த சீரியலில் நடித்தார். ஆனாலும் அந்த கேரக்டர் மூலமாக பெரிய அளவில் புகழடைந்தார். டேனியல் பாலாஜி ஒரு நடிகர் மட்டுமல்லாமல் ஒரு அருமையான மனிதர். அவருடைய மறைவு என்னை துயரில் ஆழ்த்தி இருக்கிறது...! அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்... என்று அந்த பதிவில் ராதிகா சரத்குமார் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். சித்தி சீரியலில் நடிகை ராதிகாவுக்கு எதிரியாகத்தான் அந்த சீரியலில் டேனியல் பாலாஜி அறிமுகம் ஆகி இருப்பார். அதிலும் ஒரு காட்சியில் ராதிகா ஒரு வீட்டின் கதவை தட்டுவார். அந்த வீட்டிற்குள் இருந்து டேனியல் பாலாஜி கதவை திறப்பார். அப்போது கையில் சிகரெட்டும் தலைமுடிகளை வாராமல் அலுங்கோலமாக இருப்பார். அதிலும் அவருடைய கண்களில் அவ்வளவு வில்லத்தனம் தெரியும்.
சீரியல் நடிகர் என்பவரை என்பதை தாண்டியும் தன்னுடைய பிளஸ் பாயிண்ட்டான கோபப்பார்வையை ராதிகாவிடம் காட்ட ராதிகா அந்த வீட்டில் குறிப்பிட்ட ஒரு நபர் இருக்கிறாரா என்று விசாரிப்பார். அதற்கு டேனியல் பாலாஜி அப்படியெல்லாம் இங்கே யாரும் கிடையாது என்று கதவை டக் என்று பூட்டுவார். அதுபோல பிறகு ராதிகாவுக்கும் டேனியல் பாலாஜிக்கும் பிரச்சனை வருகிற மாதிரி கதை போய்க்கொண்டிருக்கும்.
சித்தி சீரியலை தொடர்ந்து அலைகள் சீரியலில் நடித்து வந்த டேனியல் பாலாஜிக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த டேனியல் பாலாஜி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பைரவா போன்ற திரைப்படங்கள் மூலமாக பெரிய அளவில் பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் என்று பல மொழிகளிலும் வில்லனாகவே நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.
அதே நேரத்தில் இவருடைய பிளஸ் பாயிண்ட் இவருடைய கண்கள் தான். ஆனால் இப்போது அவர் உயிரோடு இல்லை. என்றாலும் அந்த கண்கள் இந்த உலகத்தில் வாழ்கிறது. தான் உயிரிழந்த பிறகும் தன்னுடைய கண்கள் வாழ வேண்டும் என்று கண்தானம் செய்து இருக்கிறார். அதன்படியே இப்போது டேனியல் பாலாஜியின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டு இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications