ஹிட் படத்தில் ரம்பாவுக்கு நடந்த சோதனை.. கடைசி நேரத்தில் மாறிய வாழ்க்கை.. அவரே உடைத்த ரகசியம்
சென்னை: நடிகை ரம்பா 90s காலகட்டத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் ரம்பா நடித்த திரைப்படத்தில் தனக்கு நடந்த பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார்.
90s காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரம்பாவை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்து இருக்க முடியாது. சமீபத்தில் கூட டிராகன் திரைப்படத்தில் நடித்த நடிகை கயோடு திடீரென ட்ரெண்டானபோது கூட இவர் ரம்பாவை போல வருவார் என்ற பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கு அடைமொழி பெயர் இருக்கிறது. அதுபோல ரம்பாவை தொடையழகி என்று இளைஞர்கள் அந்த நேரத்தில் அதிகமாக வர்ணித்து வந்தனர்.

ரம்பா தமிழில் அறிமுகம்
அதே நேரத்தில் ரம்பா உழவன் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு சுந்தர புருஷன், உள்ளத்தை அள்ளித்தா, நினைத்தேன் வந்தாய், அருணாச்சலம் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார். இவருடைய க்யூட்டான சிரிப்பு பலருடைய ஃபேவரைட். அது போல ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய ஸ்டைல், நடை என்று அப்போது சினிமாவில் புது ட்ரெண்ட் செட் பண்ணி இருந்தார்.
விஜய் உடன் நடிப்பு
விஜயுடன் பல திரைப்படங்களில் நடித்திருந்தார் ஆனால் விஜயுடன் ரம்பா நடித்து ஹிட்டான நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தின் ரீமேக்கில் தான் ரம்பாவே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நினைத்தேன் வந்தாய் திரைப்படம் தமிழ் சினிமாவில் பலராலும் பாராட்டப்பட்டது இப்ப வரைக்கும் இந்த திரைப்படத்திற்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நினைத்தேன் வந்தாய் திரைப்படம்
அந்த திரைப்படத்தில் தேவயானி ரம்பா, விஜய், மணிவண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். அதுபோல அந்த திரைப்படத்தில் பாதி நேரத்திற்கு ரம்பா விஜய்யின் கனவு கன்னியாக வருவார். ரம்பாவின் மச்சத்தை வைத்து தான் விஜய் அவரை கண்டுபிடிப்பார். ரம்பாவின் இண்ட்ரொடக்ஷனில் கூட ரம்பாவின் காது மூக்கு கண்ணு தொடை என்று ஒவ்வொரு பாகமாகத்தான் காட்டப்படும்.
எதிர்பார்க்காத சம்பவம்
அது போல நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தின் தெலுங்கில் நடிகர் ஸ்ரீகாந்த், ரெவளி, தீப்லி போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். அந்த படத்திற்கு பெல்லி சந்தடி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்காக ரம்பா கமிட் ஆகி இருக்கிறார். அதற்கு கால் ஷீட் எல்லாம் ஒதுக்கிய பிறகு ரம்பாவை பாதி பாதியாக காட்டினால் ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று இவர் அந்த கேரக்டரில் வேண்டாம் வேற கேரக்டரில் நடிக்கலாம் என்று பட குழுவினர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
மாற்றம்
ஆனால் தன்னிடம் கதை சொன்னது வேறு பிறகு எப்படி மாற்ற முடியும் என்று ரம்பா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம். அந்த நேரத்தில் தான் அவருக்கு உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ரம்பாக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று ரம்பா பேசியிருக்கிறார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications