ரஞ்சிதாவின் டிரஸ்ஸை கண்டு வியந்த நித்யானந்தா! சர்ச்சைகளை முறித்து வெற்றி பெற்ற சிவா பார்வதி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் சாதித்ததைவிட, புகழ்பெற்றதைவிட, ஆன்மீக பயணத்தில் நடிகை ரஞ்சிதா வெற்றி பெற்றுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆன்மீகத் துறைக்கு ரஞ்சிதா சென்றது ஏன்? எப்படி? என்பது குறித்தும் விவரித்துள்ளார்.

Behindcinema என்ற சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் சொல்லி உள்ளதாவது: "ரஞ்சிதாவின் இயற்பெயர் ஸ்ரீவள்ளி.. ஆந்திராவை சேர்ந்தவர்.. இவரது அப்பா காவல்துறையில் வேலை பார்த்தவர்.. இவருக்கு 3 பெண்கள் இருக்கிறார்கள்.. இதில், 2வது பெண்தான் ரஞ்சிதா.

Actress Ranjitha Fantastic Films and what did Journalist pandian say about Ranjitha Nithiyananda

அப்பாவுக்கு சினிமா ஆசை: அப்பாவுக்கு சினிமா ஆசை இருந்ததால், கோடம்பாக்கம் வந்துவிடுகிறார். ஆனால், குணச்சித்திர வேடம் மட்டுமே கிடைக்கிறது, பிறகு சினிமா கம்பெனியில் புரொடக்‌ஷன் மேனஜராக வேலை பார்க்கிறார்.

இதற்கு பிறகுதான் தன்னுடைய முதல் மகளை சினிமா துறைக்கு கொண்டு வர முயல்கிறார். ஆனால், சினிமாவில் மூத்த மகளுக்கு ஆர்வம் இல்லை. அதனால், ரஞ்சிதாவை சினிமாவில் கொண்டு வர முயல்கிறார். இயற்கையாகவே ரஞ்சிதா கூச்ச சுபாவம் கொண்டவர் என்றாலும், சினிமாவில் ஆர்வமாக இருக்கிறார்.

தெலுங்கு படம்: கடும் சிரமப்பட்டு, கடப்பா ரெட்டியம்மா என்ற தெலுங்கில் மகளை அறிமுகப்படுத்தினார் அப்பா.. அந்த படம் பெரிய அளவில் பெயர் வாங்கி தரவில்லை. அதற்கு பிறகுதான், தமிழ் படங்களில் மகளுக்கு வாய்ப்பு தேடினார். பாரதிராஜாவிடம் மகளை அறிமுகப்படுத்தி வாய்ப்பு கேட்கிறார். உடனே பாரதிராஜா, ஸ்ரீவள்ளி என்ற பெயரை ரஞ்சிதா என்று மாற்றுகிறார்.

வாத்து மேய்க்கிற பெண்ணாக, பூங்குருவி என்ற கேரக்டரில் நாடோடி தென்றல் படத்தில் கார்த்திக்குடன் ரஞ்சிதா நடிக்கிறார். இந்த படம், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து துறையினரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதற்கு பிறகு வரிசையாக படங்களில் நடித்தார். ஆனால், ரஞ்சிதாவை திரையுலகில் தூக்கி நிறுத்திய படம் ஜெய்ஹிந்த். அதற்கு பிறகு அமைதிப்படை" படமும் ரஞ்சிதாவை பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தது.

திருமண வாழ்க்கை: 2000ம் வருடத்துக்கு பிறகு திரைப்பட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஒரு மிலிட்டரி நபரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார் ரஞ்சிதா. ஆனால், 6 மாசத்திலேயே தம்பதிக்குள் தகராறு வெடிக்கிறது. சினிமாவில் நடிக்கக்கூடாது, சீரியலிலும் நடிக்க வேண்டாம், குடும்பத்தில் கவனம் செலுத்த சொன்னார் கணவர். ஆனால், அதற்கு ரஞ்சிதா மறுக்கிறார். இறுதியில், கணவனை விட்டுவிட்டு சீரியலுக்கு வந்துவிட்டார்.

ஆனால், சீரியல்களிலும் டைரக்டர்களுடனும் சண்டை வந்துவிட்டது. நாளடைவில் மன அமைதியை இழந்த ரஞ்சிதா ஆன்மீகத்தில் கவனம் செலுத்த துவங்குகிறார். அப்போதுதான் திருவண்ணாமலையில் நித்தியானந்தாவை ரஞ்சிதாவுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஆசிரம வாழ்க்கை: ஹீலிங் முறைப்படி, மனோ வசியம் செய்து, பல நோய்களை குணப்படுத்தக்கூடியவர் என்று நித்தியானந்தா பற்றி சொல்கிறார்கள். உடனே ஆசிரமத்தில் சேர நினைக்கிறார் ரஞ்சிதா. அந்த ஆசிரமத்துக்கு போகும்போதே சாமியார் உடையுடன்தான் செல்கிறார்.. இந்த உடையுடன் வருவதை கண்டதுமே நித்யானந்தாவுக்கு பிடித்துவிட்டது. அப்போது முதல் ரஞ்சிதா பார்வதியாகவும், நித்தியானந்தா சிவனாகவும் நினைத்து கொள்கிறார்கள். இவர்களின் ஆன்மீக பயணம் தொடங்கியது.,

ஆசிரமத்தில் ரஞ்சிதாவுக்கு நிறைய முக்கியத்துவம் கிடைக்கிறது. ஷூட்டிங்குகளில் கூட யாரிடமும் பேசாத தனிமை விரும்பி ரஞ்சிதா.. கிசுகிசுவே வராத நடிகையும்கூட. எப்போதுமே தெலுங்கு புத்தகங்களை படித்து கொண்டு இருப்பார். சினிமாவில் வராத கிசுகிசு, ஆன்மீகத்துறைக்கு போனதுமே வந்துவிட்டது.

அப்பா போராட்டம்: தன் மகளை நித்தியானந்தா வசியம் செய்துவிட்டதாகவும், உடனடியாக ஆசிரமத்தை விட்டு வெளியேற்றுமாறும் ரஞ்சிதாவின் அப்பா போராடினார். ஆனால், தன்னால் ஆசிரமத்தை விட்டு வரமுடியாது என்று அப்பாவிடமே வெளிப்படையாக சொல்லிவிட்டார் ரஞ்சிதா.

இதற்கு பிறகு ஆசிரமத்தின் தலைமை சிஷ்யையாக பதவி உயர்வு பெறுகிறார் ரஞ்சிதா. அதுவரை தலைமை சிஷ்யையாக இருந்த பெண்ணுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நித்யானந்தாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, லெனின் கருப்பன் என்பவருடன் சேர்ந்து, படுக்கையறையில் கேமரா வைத்து, அத்தனையையும் வீடியோவில் பதிவு செய்கிறார்.

ஆனால் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இன்று கைலாய நாட்டின் பிரதம மந்திரியாக ரஞ்சிதா அறிவிக்கப்பட்டுள்ளார்.. மத்திய அமெரிக்கா வரை இவர்களின் ஆன்மீக பயணம் வரை சென்றுள்ளது.

சிவன் - பார்வதி: நித்யானந்தாவின் சொத்துக்கள், நிலம் உட்பட அத்தனையும் ரஞ்சிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக சொல்கிறார்கள், நித்யானந்தாவே ரஞ்சிதாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறாராம்.

எனினும், சினிமாவில் சாதித்ததைவிட, புகழ்பெற்றதைவிட, ஆன்மீக பயணத்தில், நித்யானந்தாவுடன் இணைந்து, கைலாசாவில் தீட்சை பெற்று, ஐரோப்பா, ஆசியா, நாடுகளில் ரஞ்சிதாவின் புகழ் பரவியிருக்கிறது. நித்யானந்தாவும் ரஞ்சிதாவும், சிவனும் பார்வதியாக ஆன்மீக பயணத்தை தொடர்கிறார்கள் என்பதுதான் இன்றைய வரலாறு" என்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+