ரேவதி நரைத்த முடியுடன் சந்நியாசி போல.."வடிவ" ஹீரோயினா இப்படி? சீனியர் நடிகைகளின் தீரா ஆசை: பிரபலம்
சென்னை: இன்று நதியாவை பாட்டியாக நடிக்க சொன்னால் நடிக்க மாட்டார்.. ஆனால், நதியா உட்பட ரம்யாகிருஷ்ணன், ராதிகா, ரேவதி, அம்பிகா, போன்றோர்கள் எல்லாம் நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து இன்னமும் நடித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. மேலும் சிலர், சினிமாவிலேயே இருக்க வேண்டும் என்ற போதைக்காக, நடிக்க வருவார்கள்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்தள்ளார்.
Friday Facts என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "மார்க்கெட் இழந்த நடிகைகளால் சும்மா இருக்க முடியாது.. ஆரம்பத்தில், நடிக்கும்போது, தேடி வரும் படங்களில் எல்லாம் நடித்து கொண்டேயிருப்பார்கள்.. காசு வர்ற வர்ற கல்லா கட்டிட்டே இருப்பாங்க..

ஆனால், நடிகர்கள் பெரும்பாலும் அப்படியில்லை.. உதாரணத்துக்கு ரஜினிகாந்த் 50 வருஷமாக இருக்கிறார். கமல் 60 வருடம் மேலாக இருக்கிறார்.. விஜய், அஜித் எல்லாம் 35 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறார்கள்.. தனுஷ், சிம்புவெல்லாம் 25 வருடமாக இருக்கிறார்கள்..
வெள்ளை முடி நடிகை
ஆனால், ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு ஹீரோயின் வருவாங்க.. அன்று பூவே பூச்சூடவா வந்தபோது, நதியாவை பற்றி பேசினார்கள்.. பிறகு குஷ்பு வந்தார். அவருக்கு எங்கே கோயில் கட்டியிருக்கிறார்கள் என்று கண்ணில் காட்டியதே இல்லை.
இப்படி அம்பிகா, ராதா, குஷ்பு, ராதிகா என பெரிதாக பேசப்பட்டவர்கள் எல்லாருமே மார்க்கெட் இழந்துவிட்டார்கள். ரேவதியை பார்த்தால், வெள்ளை முடியை விட்டுக்கொண்டு, சன்னியாசி மாதிரி வர ஆரம்பிச்சிட்டாங்க.. ஏனென்றால், ஒருகட்டத்துக்கு மேல் அக்கா கேரக்டரும் போச்சு, அம்மா கேரக்டரும் போச்சு.. இப்ப பாட்டி கேரக்டருக்கு நான் ரெடியாக இருக்கேன், என்னை கூப்பிடுங்க என்று அதற்கு அர்த்தம். நரைச்ச முடியுடன் பந்தாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரேவதி. எனவேதான் பாட்டி கேரக்டருக்கு சிக்னல் கொடுக்குறாங்க.
வாடகைக்கு வரும் அம்மாக்கள்
இவர்கள் எல்லாம் பிசியாக இருந்தபோது, கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொள்வார்கள்.. ஒருத்தர் ஆப்பிள் ஜூஸ் தருவார், இன்னொருத்தர் டச்சப் செய்வார், இன்னொருத்தர் நடிகைகளுக்கு குடை பிடித்து கொண்டிருப்பார்..
நல்ல வெயிலில் குடை பிடிக்கலாம், மழை பெய்யும்போது குடை பிடிக்கலாம். ஆனால், சாயங்காலம் 7.30 மணிக்கும் நடிகைகளுககு குடை பிடிப்பார்கள்.. அதேபோல காஸ்ட்யூமர் என்ற பெயரில் ஒருவர் கூடவே இருப்பார.. மேனேஜர்கள் நடிகைகள் கூடவே இருப்பார்கள்.. இதைத்தவிர, ஹீரோயின் அம்மாக்களும் ஷூட்டிங் வருவார்கள்.
சில ஹீரோயினுக்கு அம்மாவே இல்லையென்றாலும், வாடகைக்கு அம்மாவை கூப்பிட்டு வந்து வைத்து கொள்வார்கள்.. மம்மி என்று கூப்பிட்டு கொண்டேயிருப்பார்கள்.. இவர்களை எல்லாம் தங்கள் பாதுகாப்புக்கு சில நடிகைகள் வைத்து கொள்வார்கள்.. ஆனால், இவர்களிடமிருந்துதான் மற்றவர்களுக்கு பாதுகாப்பு தேவை.
வடிவமான நடிகை
இப்படியெல்லாம் பழக்கப்பட்டவர்கள் ஹீரோயின்கள்.. சினிமா என்ற வாழ்க்கையை சுகபோகமாக வாழ்ந்தவர்களால், மார்க்கெட் போன பிறகு வீட்டிலேயே உட்கார முடியாது.. சிவப்பு ரோஜாக்கள் படத்தில் கமலுடன் நடித்த நடிகை, இன்று டிவி சீரியல்களில் வில்லியாக நடித்து கொண்டிருக்கிறார். அவஙக நல்ல வடிவமாக இருப்பாங்க.. இப்படி யாராலுமே வீட்டில் சும்மா இருக்க முடியாது.
கண்ணும் கண்ணும் நோக்கியா என்று விக்ரமுடன், சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகை சதா, வடிவேலுவுடன் ஜோடி போட்டு நடித்தார்.. யாராவது பீக்கில் இருந்தால் வடிவேலுவுடன் நடிப்பார்களா?
சினிமா என்ற போதை
இன்று நதியாவை பாட்டியாக நடிக்க சொன்னால் நடிக்க மாட்டார்கள்.. ஆனால், நதியா உட்பட ரம்யாகிருஷ்ணன், ராதிகா, ரேவதி, அம்பிகா, போன்றோர்கள் எல்லாம் நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து இன்னமும் நடித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனால், சிலர் மார்க்கெட் போய்விட்டதால், கும்பலில் வந்து நின்று நடிக்கும் சூழல் வரும்.. ஆனால், மேலும் சிலர், சினிமாவிலேயே இருக்க வேண்டும் என்ற போதைக்காக, நடிக்க வருவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications